புது SIM கார்டு ரூல்ஸ்.. 2 சிம், 2 போன் வைத்து இருப்பவர்களுக்கு அமலுக்கு வருது.. Jio, Airtel, Vi சிம் இருக்கா?
சிம் கார்டு (SIM Card) பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகளை டிஓடி (DoT) என்கிற தொலைத்தொடர்புத் துறை அமல் செய்ய இருக்கிறது. இந்த விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) மற்றும் மற்ற மெசேஜிங் ஆப்களை (Messaging Apps) பயன்படுத்தும் கஸ்டமர்கள், தங்களது ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு (SIM Card) செயல்பாட்டில் (Active) இருப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் புதிய சிம் பைண்டிங் (SIM Binding) விதிகளின்படி, ஒரு கஸ்டமரின் மெசேஜிங் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு (SIM Card) அந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற ஆப்களை தொடர்ந்து இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்திய மொபைல் எண்களை தவறாகப் பயன்படுத்துவதையும், இணையவழி மோசடிகளையும் தடுக்கும் நோக்கில், மெசேஜிங் ஆப் (Messaging App) நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை அமல்படுத்த டிஓடி (DoT) வரும் 2026 டிசம்பர் 31ஆம் தேதியை இறுதி காலக்கெடுவாக நிர்ணயித்து டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், கஸ்டமர்கள் தங்கள் போனில் இருந்து சிம் கார்டு (SIM Card) என்பதை அகற்றினாலோ, மாற்றினாலோ அல்லது அது செயலிழந்து போனாலோ, உடனடியாக அவர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) கணக்குகளின் அணுகலை இழக்க நேரிட வாய்ப்புள்ளது.

அதாவது, ஒரு அக்கவுண்ட் தொடங்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு (SIM Card) போனில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, முன்பை போல அந்த மெசேஜிங் ஆப் (Messaging App) அக்கவுண்ட்டை காலவரையின்றி தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்பது இந்த புதிய விதிகளின் மூலம் தெளிவாகிறது.
மீண்டும் அதே மொபைல் எண்ணை ஒரு ஆக்டிவ் சிம் கார்டு (SIM Card) அல்லது இ-சிம் (eSIM) மூலம் ஸ்மார்ட்போனில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வரை, சம்பந்தப்பட்ட மெசேஜிங் ஆப் (Messaging App) தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கு இந்த விதிகள் கட்டாயப்படுத்தும்.
சைபர் கிரைம் (Cybercrime), ஃபிஷிங் (Phishing) மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) போன்ற மோசடிகளை தடுக்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மோசடியாளர்கள் இந்திய எண்களில் வாட்ஸ்அப் (WhatsApp) அக்கவுண்ட்களை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து இயக்குவதை டிஓடி (DoT) முடக்க இருக்கிறது.
இதன் காரணமாக இந்திய நுகர்வோர் பெரும் நிதி இழப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே, கேஒய்சி (KYC) சரிபார்க்கப்பட்ட சிம் கார்டு (SIM Card) உடன் மெசேஜிங் அக்கவுண்ட்களை நேரடியாக இணைப்பதன் மூலம் எல்லை தாண்டிய மோசடிகளைத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகின்றது.

மொபைல் எண்களை (Mobile) அடிப்படையாக கொண்டு இயங்கும் வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) ஆகியவை இந்த விதிகளின் கீழ் வரும். ஆனால், ஸ்னாப்சாட் (Snapchat) இதில் வராது என்றும், சிக்னல் (Signal) குறித்த தகவல் இன்னும் தெளிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட ஐபோன் (iPhone) அல்லது ஆண்ட்ராய்டு (Android) மாடல்களுக்கானது அல்ல. மாறாக, ஒரு போனில் சிம் கார்டு (SIM Card) வைத்துக்கொண்டு, மற்றொரு போனில் ஒய்-ஃபை (Wi-Fi) மூலம் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துபவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
டூயல் சிம் (Dual-SIM) மற்றும் இ-சிம் (eSIM) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஏர்டெல், ஜியோ, விஐ, பிஎஸ்என்எல் போன்ற சிம் கார்டுகளை பயன்படுத்தும் கஸ்டமர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதிகளை ஜனவரி 1 முதல் அமலுக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
