Home
News

புது ரூல்ஸ்.. அக்.15 அமல்.. இனிமே UPI-க்கு இதுதான் லிமிட்.. ரூ.5 லட்சத்துக்கு வச்சாச்சு.. என்னென்ன மாறிருக்கு?

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் - யுபிஐ (Unified Payments Interface - UPI) மூலம் பணப்பரிவர்த்தைகளை செய்யும் யூசர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India - NPCI) புதிய லிமிட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி யுபிஐ லிமிட் மாற்றப்படும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவிருந்தது. இப்போது, அந்த விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த புதிய லிமிட் எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்துகிறது?

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, அதற்கு கட்டணங்கள் கிடையாது. இதனாலேயே, ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமென்ற லிமிட் இருக்கிறது. இந்த லிமிட் காரணமாக குறிப்பிட்ட தொகைக்கு மேல் யுபிஐ மூலம் அனுப்ப முடியாது. இதை ஆர்பிஐ மாற்றியது.

புது ரூல்ஸ்.. அக்.15 அமல்.. இனி UPI-க்கு இதுதான் லிமிட்.. ரூ.5 லட்சம்!

ஏற்கனவே, மருத்துவ கட்டணம், கல்வி கட்டணம் மற்றும் அரசுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு யுபிஐ லிமிட் மாற்றப்பட்டது. இப்போது, வரி செலுத்துவோருக்கான லிமிட்டையும் மாற்றி இருக்கிறது. அதாவது, மருத்துவ செலவு, கல்வி கட்டணம் ஆகியவற்றுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தினால், அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே செலுத்த முடியும் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது.

இதை ரூ.5 லட்சத்துக்கு ஆர்பிஐ அதிகரித்தது. இந்த புதிய லிமிட்டை ஏற்கனவே இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அமலுக்கு கொண்டு வந்தது. ஆனால், இப்போது, வரி செலுத்தற்கான லிமிட்டும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த புதிய லிமிட் மூலம் வரி செலுத்தவோருக்கு எந்தவித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது. ஆகவே, ரூ.5 லட்சம் பணம் அனுப்பினாலும், வரிகள் இல்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதிகள் மட்டுமல்லாமல், யுபிஐ யூசர்கள் கனவிலும் நினைக்காத வகையில் யுபிஐ சர்க்கிள் விதிகளும் (UPI Circle Rules) கொண்டு வரப்பட்டுள்ளது.

புது ரூல்ஸ்.. அக்.15 அமல்.. இனி UPI-க்கு இதுதான் லிமிட்.. ரூ.5 லட்சம்!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளானது, ஒரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு ஒரு யுபிஐ அக்கவுண்ட் என்ற விதிகளை மாற்றி அமைத்துள்ளது. அதாவது, ஒரே பேங்க் அக்கவுண்ட் மூலம் குறைந்தபட்சம் 2 யுபிஐ அக்கவுண்ட்கள் முதல் அதிகபட்சம் 5 யுபிஐ அக்கவுண்ட்கள் வரையில் ஓப்பன் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த விதிகள் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களுக்கும் பொருந்தும். பேங்க் அக்கவுண்ட் மூலம் யுபிஐ ஆப்களில் அக்கவுண்ட் தொடங்கினால், முதலில் ஓப்பன் செய்யப்படும் அக்கவுண்ட் பிரைமரி பயனருக்கு ஒதுக்கப்படும். அதன்பிறகு அந்த பிரைமரி பயனர் அதிகபட்சம் 5 செகண்டரி அக்கவுண்ட்களை ஓப்பன் செய்து கொள்ளலாம்.

இந்த பிரைமரி பயனர் வழக்கமாக பணம் அனுப்பும் நடவடிக்கையை செய்து கொள்ளலாம். ஆனால், செகண்டரி அக்கவுண்ட்களுக்கு அவரே பணம் அனுப்ப லிமிட் விதிக்க வேண்டும். மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரையில் பணம் அனுப்பி கொள்ள அனுமதி வழங்கலாம். இல்லையென்றால், ரூ.5000 அல்லது ரூ.10000 என்று லிமிட் ஆப்ஷன்களும் இருக்கின்றன.

ஆகவே, இந்த யுபிஐ சர்க்கிள் விதிகள் மூலம் வீட்டில் இருக்கும் சிறியவர்களுக்கு யுபிஐ அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுக்க முடியும். அதே நேரத்தில் அவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் தேவை இருக்காது. அதேபோல குறிப்பிட்ட லிமிட் வரையில் பணத்தை செலவழிக்க அனுமதி கொடுக்கப்படுவதால், எந்தவித சிக்கல்களும் அதில் ஏற்பட வாய்ப்பில்லை.

Best Mobiles in India

English summary
Do You Know New Rules For UPI Transaction Limit From September 15 Check NPCI New Transaction Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X