Home
News

புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட்ல அமல்.. உங்க பணத்த அனுப்புனாலும் படாதபாடு.. இனிமே இதை பண்ணிடுங்க.. இல்லைனா?

டிசம்பர் 1ஆம் தேதி புது விதிகள் வருது, இல்லங்க, ஜனவரி 1ஆம் தேதிதான் புது விதிகள் வருது என்று அப்படி இப்படினு வரும் செய்திகளை பார்த்து பேங்க் கஸ்டமர்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) என்ன சொல்லுமோ என்று கலங்கி போய் இருக்கின்றனர். ஆனால், சத்தமே இல்லாமல், புது பணப்பரிமாற்ற விதிகள் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் வந்துவிட்டது. உங்க பேங்க் பணத்தை அனுப்பவே இனி படாதபாடுபட வேண்டியது இருக்கும். இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

பேங்க் கஸ்டமர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் அனுப்பும்போது பாதுகாப்பாக சென்று சேருவதால், அது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இப்போது, இந்த பணத்தை அனுப்புவதிலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புது விதிகளை அமலாக்கி இருக்கிறது. சொல்லப்போனால், இந்த விதிகள் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து அனைத்து பேங்க் கஸ்டமர்களுக்கும் வந்துவிட்டன.

புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட்ல அமல்.. உங்க பணத்த அனுப்ப படாதபாடு!

இந்த விதிகளின்படியே இனிமேல் பணம் அனுப்ப அனுமதி கொடுக்க வேண்டுமென்று பேங்குகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே, கூடுதலாக பேங்க் கேஒய்சி (Bank KYC) விவரங்கள் கஸ்டமர்களிடம் கேட்கப்படும். அதேபோல பேங்க் கஸ்டமர்களின் விவரங்களும் கண்காணிக்கப்படுகிறது. அதாவது, மொபைல் பேங்கிங் அல்லது நெட்பேங்கிங் சேவைக்கு இது பொருந்தும்.

ஏற்கனவே, பணம் அனுப்பும்போது ஓடிபி மட்டும் கஸ்டமர்களிடம் கேட்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது கூடுதாக கேஒய்சி விவரங்களை கொடுத்தால் மட்டுமே பணத்தை அனுப்ப முடியும். இதை பேங்குகள் கஸ்டமர்களிடையே செய்ய இருக்கின்றன. இப்போது, இந்த பேங்க் பணப் பரிமாற்ற விதகளால் என்னென்ன கேஒய்சி விவரங்கள் கேட்கப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பேங்க் அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி கோட் இருந்தால் போதும் முன்பு பணம் அனுப்ப முடியும். ஆனால், இப்போது, பணம் அனுப்பும் பேங்குகள் மூலம் சரிபார்க்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் வெரிபிகேஷன் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் ஓவிடி (Officially Valid Document - OVD) அடிப்படையில் பணம் அனுப்ப அனுமதி வழங்கப்படும். விவரங்கள் பதிவு செய்யப்படும்.

ஆகவே, உங்களது கேஒய்சி விவரங்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் பணம் அனுப்ப முடியாமல் போகலாம். ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைகளின் போதும், கூடுதலாக கேஒய்சி வெரிகேஷனுக்கு கஸ்டமர்கள் உள்ளாக்கப்படுவார்கள். அதாவது, ஓடிபி மட்டுமே கொடுத்தால் பணம் போகாது, கூடுதல் காரணி அங்கீகாரம் இருக்கும். இதை பேங்குகள் முடிவு செய்து கொள்ளும்.

அதாவது, உங்களது கேஒய்சி ஆவணங்களின் அடிப்படையில் ஆதார் வெரிபிகேஷன், பயோமெட்ரிக் வெரிபிகேஷன் போன்றவை கொண்டுவரப்படும். இதனால் பணம் அனுப்பும்போது கால அவகாசம் தேவைப்படும். இதை பேங்குகள் முன்கூட்டியே வெரிபிகேஷன் செய்யலாம். ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் என்இஎப்டி (NEFT) பரிவர்த்தனையில் இந்த விதிகள் இருக்கும்.

ஏனென்றால், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) ஆப்களை போல இந்த ஐஎம்பிஎஸ் மற்றும் என்இஎப்டி பரிவர்த்தனை கிடையாது. அதைவிட கூடுதால தொகைகளை ஒரு பேங்கில் இருந்து மற்றொரு பேங்குக்கு இதில் மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால், அதில் கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறது. ஆகவே, பணத்தை அனுப்பும் நபர் மட்டுமல்ல.

அதை பெறும் நபர்கள் மற்றும் அவர்களது அக்கவுண்ட்கள் ஒரு முறைக்கு பல முறை கேஒய்சி விவரங்கள் மூலம் வெரிபிகேஷன் செய்யப்படுகிறது. இதனால், பணத்தை தவறாக அனுப்பினாலும், அது யாருக்கு போய் இருக்கிறது என்பதை எளிதாக டிராக் செய்துவிட முடியும். இது ஒரு வகையில் பேங்க் கஸ்டமர்களுக்கு தேவையான விதிகளாகத்தான் இருக்கிறது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது பேங்குகள் இந்த விதிகளை பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறது. இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கவும் இருக்கிறது. ஆகவே, பேங்க் கஸ்டமர்களின் கேஒய்சி விவரங்களில் கவனமாக இருக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற போட்டோ அல்லது மொபைல் நம்பருடன் இருக்கும் ஆவணங்களை சிக்கல் இல்லாமல் வையுங்கள்.

Best Mobiles in India

English summary
Do You Know New Money Transfer Rules 2025 For Bank Customers KYC Applicable Digital Transactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X