புது விதிகள்.. பேங்க் பாஸ்புக்.. செக் லீஃப்.. ஆன்லைன் பரிவர்த்தனை.. ஆவணங்களில் மாற்றம்.. என்னென்ன வருது!
ஆன்லைனில் பணம் எடுக்கும்போது, பேங்க் பாஸ்புக் மற்றும் செக் லீஃப் ஆவணங்களை சரிபார்ப்புக்கு கோரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organisation) அதில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆன்லைன் கிளைம் எப்படி இருக்கும்?
ஈபிஎஃப் (EPFO) மூலம் ஆன்லைன் கிளைம் செய்துவிட்டு அந்த பணம் வருவதற்குள் கஸ்டமர்களுக்கு மூக்கே வியர்த்துவிடும். ஏனென்றால், ஆன்லைன் உரிமைகோரல் படிவம் (Online Claim Form) பலருக்கு நிகாகரிப்பு செய்யப்பட்டு விடுகிறது. பேங்க் பாஸ்புக் மற்றும் செக் ஃலீப் முறையாக பதிவேற்றதது அல்லது அவற்றில் குளறுபடி போன்ற காரணங்களால் இது நடக்கிறது.

இதுபோன்ற நிராகரிப்பு ஊழியர்களை கடும் அவதிக்குள் சிக்க வைக்கிறது. இதை தவிர்க்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் மூலம் ஆன்லைன் கிளைமின் போது, சரிபார்ப்பு ஆவணங்களாக பேங்க் பாஸ்புக் அல்லது செக் லீஃப் கோரப்படுவது தளர்த்தப்படுகிறது.
"ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் உரிமைகோரல் படிவங்களில் செக் லீஃப் மற்றும் பேங்க் பாஸ்புக் ஆவணங்களை பதிவேற்றாத காரணத்தால் பல படிவங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதை குறைக்கும் நோக்குடன், பேங்க் கேஒய்சி ஆன்லைன் சரிபார்ப்பு (Bank KYC Online Verification), பேங்க் கேஒய்சி டிஎஸ்சி சரிபார்ப்பு (Bank KYC DSC Verification), ஆதார் எண் சரிபார்ப்பு (Aadhaar Number Verification) வருகிறது.
மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் - சிபிஎப்சி (Central Provident Fund Commissioner - CPFC) அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் அக்கவுண்ட் இருக்கும் வங்கிகள் மற்றும் என்பிசிஐ (NPCI) அனுமதியுடன் பேங்க் கேஒய்சி சரிபார்ப்பு, டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் (Digital Signature Certificate) மூலம் பேங்க் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட இருக்கிறது.

அதேபோல யுஐடிஏஐ (UIDAI) அனுமதியுடன் ஆதார் எண் சரிபார்ப்பு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, செக் லீஃப் மற்றும் பேங்க் பாஸ்புக் ஆவணங்களை கட்டாயமாக பதிவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மேற்கூறிய சரிபார்ப்பு மூலம் ஆன்லைன் உரிமைகோரல்கள் விரைவில் ஏற்கப்படும்" என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, வரும் காலங்களில் பேங்க் பாஸ்புக் மற்றும் செக் லீஃப் மட்டுமல்லாமல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு மேலும் ஆப்ஷன்கள் வருவதை இந்த விதிகள் உறுதி செய்துள்ளது. இந்த விதிகள் மூலம் ஊழியர்களின் பேங்க் விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் ஆன்லைன் மூலம் அவர்களின் அனுமதியுடன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது சரிபார்க்க இருக்கிறது.
ஆன்லைனில் ஈபிஃஎப் கிளைம் செய்வது எப்படி? இந்த புதிய விதிகளால் வழக்கமான ஈபிஃஎப் கிளைம் முறை மாற்றப்படவில்லை. ஆகவே, ஈபிஃஎப் வெப்சைட்டுக்கு செல்லுங்கள். உங்களது யுஏஎன் நம்பர் (UAN Number) மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, கிளைம் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
இப்போது, உங்களது கிளைம் டைப், எவ்வளவு பணம் எடுக்கப்போகிறீர்கள் மற்றும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். அதை கொடுத்த பிறகு வழக்கம் போல ஆவணங்கள் பதிவேற்றத்தில் பேங்க் பாஸ்புக் அல்லது செக் லீஃப் கேட்கப்படும். இறுதியாக உங்களது கிளைமை சமர்பித்து கொள்ளலாம். இந்த ஆவணங்கள் பதிவேற்றத்திலேயே புதிய சரிபார்ப்பு ஆப்ஷன்கள் வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications