இதுக்கு மேல இல்ல.. இனி 365 நாட்களுக்கு ஒரே செலவு.. இதை பண்ணிடுங்க முடிஞ்சா.. Jio-க்கு எந்த திட்டமும் வேணாம்!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் மாதத்துக்கு ரூ.333 செலவு செய்ய முடிந்தால், கண்ணை மூடிக்கொண்டு இந்த ஜியோ 365 நாட்கள் திட்டத்தை (Jio 365 Days Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் முதல் 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் வரையில் அனைத்தும் கணக்கில்லாமல் கிடைக்கும். இந்த 1 வருட திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன? விவரங்கள் இதோ.
இப்போது நாம் பார்க்க இருக்கும் திட்டம், ஜியோவில் அதிக விலைக்கு கிடைக்கும் திட்டமாகும். இதற்கு மேல் திட்டங்களே கிடையாது. ஆனால், இதற்கான மாத செலவு ரூ.333ஆ இருக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு ரூ.3999ஆக விலை இருக்கிறது. ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிட்டால் போதும், இந்த திட்டத்தை போலவே இதற்கு மேல் சலுகைகள் இல்லங்க என்று சொல்லிவிடலாம்.

ஜியோ ரீசார்ஜ் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி (Jio Recharge Plan 365 Days Validity): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ.4000 விலைக்கு கிடைத்தாலும், அதற்கு ஏற்ப சலுகைகள் குறையில்லாமல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேட்டா சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) 365 நாட்கள் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக 4ஜி வேகத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டா போக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவுக்கு எந்தவொரு வவுச்சர்களும் அப்கிரேட் திட்டங்களும் இந்த ரூ.3999 விலையிலான வருடாந்திர திட்டத்துக்கு தேவைப்படாது. வாய்ஸ் கால்களும் அதேபோல குறையில்லாமல் இருக்கிறது.
இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பெறும் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வாரி வழங்கப்பட்டுள்ளது. ஓடிடி சலுகைகளும் பிரீமியமாக கன்டென்ட்களை கொடுக்கிறது. ஆகவே, ஜியோ டிவி (JioTV) சலுகையில் பிரீமியம் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
மேலும் ஜியோ சினிமா (JioCinema) சலுகை கிடைக்கிறது. ஆனால், இது பிரீமியம் கிடையாது. இதுபோக ஃபேன்கோட் (FanCode) ஓடிடி சந்தா மூலம் கிரிக்கெட் போட்டிகளை லைவ்வில் பார்த்து கொள்ளலாம். இதுபோகவும் ஜியோ கிளவுட் (JioCloud) சலுகையை இந்த ரூ.3999 மதிப்பிலான ஜியோ திட்டம் கொடுக்கிறது. ஆகவே, வருடம் முழுவதுக்கும் இந்த திட்டம் போதுமானதாகும்.
இதில் மற்ற ஓடிடி சலுகைகள் இல்லையே என்பது போல உங்களுக்கு தோன்றினால், ரூ.175 மதிப்பில் கிடைக்கும் ஜியோ பொழுதுபோக்கு திட்டத்தை (Jio Entertainment Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுவொரு டேட்டா மற்றும் ஓடிடி மட்டுமே கொண்ட வவுச்சர் திட்டமாகும். 12 ஓடிடி ஆப்களையும், 10 ஜிபி டேட்டாவையும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது.
ஆகவே, ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), டாகுபே (DocuBay), சாவ்பால் (Chaupal), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆப்கள் வழங்கப்படுகிறது. மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka) கிடைக்கிறது.
இந்த ஜியோ ரூ.175 பொழுதுபோக்கு திட்டத்தில் 10 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இது 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த 4ஜி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பொழுதுபோக்கு திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. வருடாந்திர திட்டத்துக்கு முதலில் பார்த்த திட்டம் பெஸ்ட் ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








