Home
News

சோலி முடிஞ்சு.. மாதம் ரூ.103 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 0.5 ஜிபி டேட்டா!

ஜியோபாரத் போன் (JioBharat Phone) கஸ்டமர்கள் 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்வதை முடித்து வைக்கும்படி மாதத்துக்கு ரூ.103 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.

ஜியோபாரத் போன் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.123 முதல் ரீசார்ஜ் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரூ.123 விலை கொண்ட திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். தினமும் 0.5 ஜிபி டேட்டா வீதம் 14 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

சோலி முடிஞ்சு.. மாதம் ரூ.103 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ்!

0.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்பட்டு கிடைக்கும். 300 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். ஜியோசாவன் மற்றும் ஜியோ டிவி ஆப்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாதம் ரூ.123 வீதம் ரூ.1,476 செலவாகிறது. ஆனால், இதே ஜியோபாரத் போன் திட்டங்களில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ரூ.1,234 ரீசார்ஜ் செய்தால், மாத செலவு ரூ.103ஆக மட்டுமே இருக்கிறது.

ஆகவே, முன்கூட்டியே வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாதத்துக்கு ஏற்படும் செலவு குறைகிறது. ஜியோபாரத் போன் ரூ.1,234 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, மாத செலவை கணக்கிட்டால், ரூ.103 மட்டுமே தேவைப்படுகிறது. இது லாபத்தை கொடுக்கும்படி இருக்கிறது. இதில் கிடைக்கும் சலுகைகளும் கஸ்டமர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

ஜியோபாரத் போன் ரூ.1,234 திட்டம் (JioBharat Phone Rs 1234 Plan): 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை இந்த ஜியோபாரத் போன் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி & ரோமிங் கால்களை (STD Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

முதலில் பார்த்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டன. இதிலும் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதேபோலவே டேட்டாவும் நாளொன்றுக்கு 0.5 ஜிபி கொடுக்கப்பட்டு உள்ளது. மாதத்துக்கு 14 ஜிபி டேட்டா கணக்கிலும், வருடத்துக்கு மொத்தமாக 168 ஜிபி டேட்டா கணக்கிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

தினமும் கிடைக்கும் 0.5 ஜிபி டேட்டாவை முடித்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்பட்டு கிடைக்கும். அடுத்த நாள் மீண்டும் வேகம் அதிகரிக்கப்படும். ஜியோசாவன் (JioSaavn) மற்றும் ஜியோ டிவி (JioTV) ஆப்களும் இந்த ஜியோபாரத் போன் திட்டத்துக்கு கிடைக்கும். 28 நாட்கள் வேண்டாம், 336 நாட்கள் வேண்டாம், 84 நாட்கள் வேண்டுமென்றால், ஒரு திட்டம் உள்ளது.

ஜியோபாரத் போன் ரூ.369 திட்டம் (JioBharat Phone Rs 369 Plan): 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ஜியோபாரத் போன் திட்டம் கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கும். வழக்கம்போல தினமும் 0.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 42 ஜிபி டேட்டாவை மொத்த வேலிடிட்டியிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

0.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டங்களில் கிடைத்த ஜியோ சாவன் மற்றும் ஜியோ டிவி ஆப்களானது, இந்த ஜியோபாரத் போன் திட்டத்துக்கும் கிடைத்து உள்ளது. அதிக வேலிடிட்டிக்கு ரீசார்ஜ் செய்தால், மாத செலவு குறைவாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know JioBharat Phone Rs 1234 Plan Offer 336 Days Validity At Rs 103 Every 28 Days Cost
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X