Home
News

ரூ.101 எடுத்து வைங்க.. Jio ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. 1 ஜிபி திட்டம் போதும்!

ஜியோ (Jio) கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) திட்டத்தை ரீசார்ஜ் செய்யாமல் போனாலும், மலிவான விலைக்கு கிடைக்கும் ஜியோ அன்லிமிடெட் அப்கிரேட் திட்டங்கள் (Jio Unlimited Upgrade Plans) வழியாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். இப்படி மூன்று அப்கிரேட் திட்டங்கள் கிடைக்கின்றன.

ஜியோ ரூ. 51 அப்கிரேட் திட்டம் (Jio Rs 51 Upgrade Plan): தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 1 மாதம் வரையில் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ஆக்டிவ் திட்டமாக வைத்திருந்தால், இந்த அன்லிமிடெட் அப்கிரேட் திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி வரையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

ரூ.101 எடுத்து வைங்க.. Jio ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 5G டேட்டா!

மேலும், 3 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். இந்த 4ஜி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 4ஜி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இருந்தால், இந்த அப்கிரேட் திட்டத்தை பெற முடியாது. 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, இந்த 5ஜி அப்கிரேட் திட்டங்கள் கிடைக்கும்.

ஜியோ ரூ. 101 அப்கிரேட் திட்டம் (Jio Rs 101 Upgrade Plan): இந்த அன்லிமிடெட் 5ஜி அப்கிரேட் திட்டமானது, 1 ஜிபி டேட்டாவை தினசரிக்கு கொடுக்கும் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் பொருந்தும். அதேபோல 1 மாதத்திற்கும் மேலான மற்றும் 3 மாதங்களுக்கு கம்மியாக வேலிடிட்டியுடன் தினசரிக்கு 1.5 ஜிபி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் பொருந்தும்.

இந்த திட்டத்துக்கு 6 ஜிபி டேட்டா கிடைக்கும். இதை 4ஜி வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 6 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, இப்போது இருக்கும் திட்டத்தின் வேலிடிட்டி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ. 151 அப்கிரேட் திட்டம் (Jio Rs 151 Upgrade Plan): இந்த அப்கிரேட் திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதை பெறுவதற்கு 2 மாதங்களுக்கு மேல் மற்றும் 3 மாதங்களுக்கு கம்மியான வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டத்தை கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும். இதிலும் 4ஜி டேட்டா கிடைக்கிறது.

ஆனால், முந்தைய திட்டங்களை விட அதிகமாக கிடைக்கும். ஆகவே 9 ஜிபி டேட்டாவை இதில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த 4ஜி டேட்டாவுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கும் தொடர்பு கிடையாது. 5ஜி டேட்டா கிடைக்காத இடத்தில் இருக்கும் போது மட்டுமே 4ஜி டேட்டா ஆக்டிவாகும்.

ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாத திட்டத்திலும் கூடுதலாக இந்த அப்கிரேட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து அந்த சலுகையை பெற்று கொள்ளலாம். ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கிடைக்கும் பகுதிகள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும், இந்த சலுகையை பெற்று கொள்ளலாம். மலிவான விலைக்கு கிடைக்கும் 5ஜி திட்டத்தை பார்ப்போம்.

ஜியோ ரூ. 198 திட்டம் (Jio Rs 198 Plan): எந்த அப்கிரேட் திட்டங்களும் இதற்கு தேவையில்லை. ரூ.198 விலைக்கு ரீசார்ஜ் செய்தால் போதும், 14 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know Jio Unlimited Upgrade Plans For Unlimited 5G Data At Rs 51 Rs 101 Rs 151
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X