செட்-டாப் பாக்ஸ் கதை முடிந்தது.. அம்பானி இறக்கிய Jio டிவி பிளஸ்.. 800+ சேனல்கள்.. 13 ஓடிடி சந்தா.. ஆப் போதும்!
ஓடிடி ஆப்கள் வந்த பிறகு கேபிள் டிவியின் நிலைமை படுமோசமாகியது. இருப்பினும், செட்-டாப் பாக்ஸ் கொஞ்சம் தாக்குப்பிடித்தது. இப்போது, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம். செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே 800+ லைவ் டிவி சேனல்களின் சந்தா மட்டுமல்லாமல், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட 13+ ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுக்க தொடங்கிவிட்டது. இந்த ஜியோடிவிபிளஸ் (JioTV+) ஆப்பை எப்படி பெறுவது? அதற்கான விலை எப்படி?
ஜியோ நிறுவனம், வை-பை டேட்டா திட்டங்களுடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தாவை அடிமட்ட விலைக்கு கொடுக்கிறது. ஜியோஃபைபர் (JioFiber) மற்றும் ஜியோஏர்ஃபைபர் (JioAirFiber) திட்டங்களில் கிடைக்கும் 4K ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் மூலம் இந்த ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்பட்டுவந்தது. இந்த திட்டங்கள் ரூ.599 முதல் கிடைக்கின்றன.

ஆனால், இப்போது செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே ஜியோ டிவி பிளஸ் (Jio TV Plus) ஆப் மூலம் 800+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 13+ ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. உங்களது டிவியில் இருக்கும் ஆப் ஸ்டோர்களில் ஜியோடிவிபிளஸ் ஆப்பை டவுன்லோட் செய்துவிட்டால் போதும், அந்த ஒரே ஆப்பில் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். எந்தெந்த ஓடிடி ஆப்கள்?
ஜியோஃபைபர் மற்றும் ஜியோஏர்ஃபைபர் திட்டங்களில் கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின்படி ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படும். அதாவது, ஜியோஃபைபர் மற்றும் ஜியோஏர்ஃபைபர் கஸ்டமர்கள் மட்டுமே ஜியோடிவிபிளஸ் ஆப்பை ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து அதன் மூலம் சலுகைகளை பெற்று கொள்ள முடியும். மற்ற கஸ்டமர்களுக்கு கிடைக்காது.
ஏனென்றால், ஜியோடிவிபிளஸ் ஆப்பை மொபைல் நம்பரை கொடுத்து லாகின் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே, இதே மொபைல் நம்பர் மூலம் ஜியோஃபைபர் மற்றும் ஜியோஏர்ஃபைபர் திட்டங்களில் ஏதாவது ஒன்றை பெற்றிருந்தால், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். ஆகவே, ரூ.599 திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி ஆப்களை பார்ப்போம்.
ஜியோவில் மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5) மற்றும் ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium) ஆகிய முன்னணி ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இதுபோக சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஈராஸ்நவ் (Eros Now) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) சந்தா கொடுக்கப்படுகிறது.
மேலும், ஷீமாரூமீ (ShemarooMe), டாகுபே (DocuBay), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆல்ட்பாலாஜி (ALTBalaji), எபிக்ஆன் (EPICON) மற்றும் ஈடிவி வின் (ETV Win) சந்தாவும் கிடைக்கிறது. அதேபோல 800+ டிவி சேனல்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.
அதுவே, நெட்பிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ சந்தா வேண்டுமானால், ரூ.899 விலையில் கிடைக்கும் மற்றொரு ஏர்ஃபைபர் திட்டத்தை பெற வேண்டும். ஏற்கனவே, ஜியோசினிமா ஆப் மூலம் அடிமட்ட விலையில் ஓடிடி சலுகைகளை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. அதேபோல ஜியோடிவிபிளஸ் ஆப்பையும் அடிமட்ட விலையில் மாதாந்திர சந்தாவுடன் ஜியோஃபைபர் திட்டங்கள் இல்லாமலேயே கிடைக்க வாய்ப்புள்ளது.
இப்படி கிடைத்தால், கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் போன்ற கூடுதல் டிவைஸ் இல்லாமலேயே டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். இது முழுக்க முழுக்க இன்டர்நெட் மூலம் கிடைப்பதால், வை-பை டேட்டா இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கும். வரும் நாட்களில் ஜியோஃபைபர் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கஸ்டமர்களும் ஜியோடிவிபிளஸ் ஆப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








