வாரி வாரி வழங்கிய அம்பானி.. ரூ.445-க்கு மொத்தமா முடிஞ்சு.. அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா இருக்கு.. ஓடிடி வருது!
டெலிகாம் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் இப்போது ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில், அதிகபட்சம் ஓரிரு ஓடிடி ஆப்களை மட்டுமே டெலிகாம் நிறுவனங்கள் கொடுத்தன. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களை கொடுக்க தொடங்கிவிட்டன. இதில் ஜியோ நிறுவனம், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகளுடன் 11 ஓடிடி ஆப்களை கம்மியான விலைக்கு கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஜியோ ஓடிடி திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 445 திட்ட சலுகைகள் (Jio Rs 445 Plan Offers): இது வழக்கமாக கிடைக்கும் சலுகைகளுடன் அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை கொடுப்பதால், ஜியோ கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஏனென்றால், ஓடிடி சந்தாவுக்கு ஏற்ப அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுத்து இருக்கிறது.

இதுபோக 4ஜி டேட்டாவும் கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வேலிடிட்டி முழுவதும் கொடுக்கிறது. ஆகவே, ஓடிடி ஆப்களுக்கு தேவையான டேட்டாவை இதில் பெற்று கொள்ள முடிகிறது.
ஓடிடி சந்தாவை பார்க்கையில், பிரீமியம் ஓடிடி ஆப்கள் முதல் அதிகமாக விரும்பப்படும் ஓடிடி ஆப்கள் வரையில் கிடைக்கிறது. முதலில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவானது இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த ஓடிடி மட்டும் ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் மட்டுமே கிடைக்கிறது. இதை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
மற்ற ஓடிடி ஆப்கள் எப்போதும் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதில் 11 ஓடிடி ஆப்கள் அடங்கும். ஆகவே, ஜியோஹாஸ்டார் மட்டுமல்லாமல், சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) கிடைக்கிறது. மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) உள்ளது.
இதுபோக பிளாட் மராத்தி (Planet Marathi) மற்றும் சாவ்பால் (Chaupal) ஓடிடிகளும் கிடைக்கிறது. இறுதியாக கிரிக்கெட் பிரியர்களுக்கு ஏற்ற ஃபேன்கோட் (FanCode) சந்தாவுடன் ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஜியோ டிவி (JioTV) ஆப் கிடைக்கிறது. இப்படி ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களின் பண்டிலை கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகள் போக வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் கிளவுட் சலுகை உள்ளது.
அதாவது, ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகள் போக சிம் ஆக்டிவ் திட்டங்களில் கிடைப்பதை போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் 100 எஸ்எம்எஸ்கள் நாள்தோறும் அனுப்ப கிடைக்கின்றன. ஜியோ ஏஐ கிளவுட் சலுகையை பார்க்கையில், 50 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
ஆகவே, ஒரேவொரு திட்டத்தில் அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், கூடவே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஏஐ கிளவுட் போன்ற சலுகைகளை பெற்று கொள்ளலாம். 28 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதே ஓடிடி ஆப்கள் மற்றொரு திட்டத்திலும் கிடைக்கின்றன. அதன் விலை வெறும் ரூ.175 மட்டுமே. ஆனால், அதில் ஓடிடி மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








