அம்பானி கொடுத்தா கூரை பிச்சிக்கும்.. ரூ.399 ரீசார்ஜ்.. 3 சிம்களுக்கு அன்லிமிடெட் கால்கள்.. 5ஜிபி டேட்டா!
ஒரு சிம் கார்டுக்கு கொடுக்கும் சலுகைகளிலேயே ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் ஜியோ (Jio) நிறுவனமானது, இப்போது ஒரே ரீசார்ஜில் கூடுதலாக 3 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் விவரம் இதோ.
ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தை பெறும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் முதல் ஃபேமிலி சிம் கார்டு கனெக்சன் வரையில் சலுகைகள் கிடைக்கின்றன.

அதாவது, ஒரு பிரைமரி சிம் கார்டு மற்றும் 3 கூடுதல் சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். இதில் பிரைமரி சிம் கார்டுக்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகள் கிடைக்கிறது.
ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் டேட்டாவுக்கு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகை கிடையாது.
ஆகவே, 75 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 ஜிபிக்கு ரூ 10 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இப்போது, கூடுதல் சிம் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை பற்றி பார்ப்போம். இந்த திட்டத்தில் கூடுதலாக கனெக்ட் செய்யப்படும் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் 5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும்.

இது பிரைமரி சிம் கார்டு டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. இதுபோக கூடுதல் சிம் கார்டுகள் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக இணைக்கப்படும் சிம் கார்டுக்கு தலா ரூ 99 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
எப்படி பார்த்தாலும், இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்களோடு ஒப்பிடுகையில் மலிவாகவே கிடைக்கின்றன. இருப்பினும், உங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ போன்ற முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தாவும் வேண்டுமானால், பின்வரும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
ஜியோ ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Rs 699 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, ஃபேமிலி சிம் கனெக்சன் மட்டுமல்லாமல் 2 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் பிரைமரி சிம் கார்டுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். 3 ஃபேமிலி சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம்.
இந்த சிம் கார்டுகளுக்கு தலா 5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) சந்தா கொடுக்கப்படுகிறது.
அதேபோல அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) லைட் சந்தா கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களுக்குமான சலுகைகள் மாதத்துக்கு கணக்கிடப்படும். ஆகவே, 30 நாட்களுக்கு மேற்கூறிய சலுகைகளை போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோன்ற டெலிகாம் செய்துகளுக்கு எங்களை பின் தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








