மறுபடியும் 1 வருடம் இலவசம்.. பழையபடி அம்பானி வெச்ச ஆபர்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5ஜிபி டேட்டா.. Jio-க்கு குஷி!
பழையபடி இனி ஜியோ கஸ்டமர்களுக்கு இலவசம்தான் போல, இப்படி வாரி வழங்குறாரே முகேஷ் அம்பானி என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5 ஜிபி தினசரி டேட்டா, 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற சலுகைகளை கொண்ட ரூ.3599 மதிப்பிலான திட்டத்தை இலவசமாக (Rs 3599 Plan Free) கொடுக்கிறது ஜியோ (Jio) நிறுவனம். இதனால் பழைய கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், புதிய கஸ்டமர்களும் குஷியாகி விட்டனர்.
இந்த ஜியோ ஒரு வருட இலவச திட்டத்தை (Jio One Year Free Plan) எப்படி பெறுவது? இந்த திட்டத்தின் முழு சலுகைகள் என்னென்ன உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாள்களில் 2.5 ஜிபி டேட்டாவை நாள்தோறும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த டேட்டாவே அதிகப்படியாக இருக்கிறது. ஆனாலும், கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இதுபோக 2.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ஆகவே, ஒரு வருடத்துக்கு வேறு எந்தவித டேட்டாவும் கஸ்டமர்களுக்கு தேவைப்படாது.
இப்போது, வாய்ஸ் கால்களுக்கு வருவோம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். இதுபோக ஜியோ ஆப்களின் சலுகை வருகிறது.
ஆகவே, ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் அனைத்தும் ஒரு வருடத்துக்கு கிடைக்கின்றன. இவ்வளவு சலுகைகளை கொடுக்கும் இந்த ஜியோ ரூ 3599 திட்டத்தை எப்படி இலவசமாக பெறுவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த மொபைல் ரீசார்ஜ் திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, அன்லிமிடெட் வை-பை டேட்டா, 13+ ஓடிடி ஆப்கள் மற்றும் 800+ டிஜிட்டல் டிவி சேனல்கள் சலுகையை கொடுக்கும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு இது கிடைக்கிறது.
இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை வெறும் ரூ.50 கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம். ஜியோ ஆப் (Jio App), ஜியோ வெப்சைட் (Jio Website) மற்றும் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர்களில் (Jio Stores) இந்த திட்டங்களை புக்கிங் செய்து கொள்ளலாம். இப்போது, இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டமானது, குறைந்தது மூன்று மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இப்போது, 30 சதவீத டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.2121 விலைக்கு மூன்று மாத வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த நாட்களில் வை-பை டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, வை-பை ரூட்டர் மூலம் அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை ஒரு மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். 4K ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் மூலம் 800+ டிஜிட்டல் டிவிகளை பார்த்து கொள்ளலாம். அதேபோல ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம் போன்ற 13 ஓடிடி ஆப்களும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications