Home
News

அடிச்சாரு பாரு அம்பானி.. ரூ.189-க்கு அன்லிமிடெட்.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. 28 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் ஒரு திட்டம் வேண்டுமானால், அவர்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லாதபடி ஒரு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் (Cheapest Prepaid Plan) இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இந்த திட்டத்தில் டேட்டா சலுகையையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் என்னென்ன சலுகைகள் இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.189ஆக இருக்கிறது. இதே விலையில் ஏர்டெல் நிறுவனம் அண்மையில் ஒரு புதிய திட்டத்தை களமிறக்கியது. இது ஜியோவுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேலிடிட்டி மற்றும் டேட்டாவில் ஜியோ முந்திவிட்டது. இதற்கு அந்த திட்டங்களின் சலுகைகளை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரிய வரும்.

அடிச்சாரு பாரு அம்பானி.. ரூ.189-க்கு அன்லிமிடெட்.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் (Jio Cheapest Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சொல்லப்போனால், ஜியோவில் 18 நாட்கள் முதல் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் தொடங்குகின்றன. ஆனால், அதன் விலை ரூ.198ஆக இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் எது மலிவாக இருக்கிறது என்பதையே இதில் பார்க்கிறோம்.

இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல 300 எஸ்எம்எஸ் சலுகையைும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதுபோன்ற திட்டங்களில் டேட்டா சலுகைகள் கிடைக்காது. ஆனால், இதில் வருகிறது.

அதாவது, லம்ப்-சம் சலுகையின் மூலம் 2 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இதை முதலாவது நாளிலேயே பயன்படுத்திவிட்டாலும், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். ஆகவே, சிம் ஆக்டிவ் உறுதியாகும்.

இந்த மூன்று முக்கிய சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV) சலுகையும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட சலுகைகள் மட்டுமே இந்த ஜியோ மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதே விலைக்கு ஏர்டெல் (Airtel) நிறுவனமும் புதிதாக ஒரு திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. ஆனால், அதில் சலுகைகள் குறைவாக இருக்கிறது.

ஏர்டெல் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Cheapest Prepaid Plan): இந்த திட்டத்தின் விலையும் ரூ.189ஆக இருக்கிறது. ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்களுக்கும் மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் 21 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஜியோவைவிட 7 நாட்கள் குறைவான வேலிடிட்டி வருகிறது.

அதேபோல ஜியோ திட்டத்தில் 2 ஜிபிக்கா லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்பட்டது. ஆனால், இதில் 1 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே வருகின்றன. அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் என்று சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுபோக முக்கிய சலுகை ஒன்று கிடைக்கிறது.

பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. உண்மையில் இந்த திட்டத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏர்டெல் திட்டங்களுக்கும் இந்த பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவானது 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. இதுபோன்ற சந்தா ஜியோவில் கிடைக்காது. இருப்பினும், டேட்டா மற்றும் வேலிடிட்டியில் ஜியோ முந்திவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know Jio Cheapest Prepaid Plan With Unlimited Voice Calls Check Price And Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X