IRCTC டிக்கெட் புக்கிங்.. பாஸ்வேர்ட் அவ்ளோதான்.. உடனே இதை பண்ணிடுங்க.. மறந்துட்டீங்கனா தக்கல்கூட கை நழுவிடும்!
ஐஆர்டிசியின் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருகைக்கு பிறகு யாரும் டிராவல் ஏஜென்ட் அல்லது ரயில் நிலையங்களுக்கு சென்று டிக்கெட் எடுப்பது கிடையாது. மொபைல் மூலம் டக்கு டக்குனு வேலையை முடிக்கின்றனர். ஆனால், ஆன்லைன் என்றாலே பயனர் ஐடி (User ID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) வந்துவிடுகிறது. இந்த பாஸ்வேர்ட்டை அவசரமாக டிக்கெட் புக்கிங் செய்யும்போது மறந்துவிட்டால், பல நேரத்தில் கடுப்பாகிவிடும். ஆகவே, பாஸ்வேர்ட்டை யோசனை செய்து நேரத்தை வீணாக்காமல் பின்வரும் படிகளை பின்பற்றி ரீசெட் செய்துகொள்ளுங்கள்.
ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை தயாராக வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நேரத்துக்கு டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது. அதிலும் தக்கலில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, பாஸ்வேர்ட் ரீசெட் செய்வதற்குள் நொடியில் சீட் புக்கிங் செய்யப்பட்டுவிடும். ஆகவே, முன்கூட்டியே பாஸ்வேர்ட்டை ரீசெட் செய்துவிடுங்கள்.

ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட் மாற்றுவது எப்படி? (How To Change IRCTC Password): 2 வழிகளில் ஐஆர்சிடிசி பாஸ்வேர்டை மாற்றலாம். ஈ-மெயில் அல்லது மொபைல் நம்பர் மூலம் மாற்றி கொள்ள முடியும். முதலில் ஈ-மெயில் மூலம் மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். முதலில் ஐஆர்சடிசி வெப்சைட் (IRCTC Website) செல்லுங்கள்.
இப்போது, ஃபர்கெட் பாஸ்வோர்ட் (Forgot Password) லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்களது பயனர் ஐடி கேட்கப்படும். அதை கொடுத்துவிட்டு அடுத்த பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது, செக்யூரிட்டி கேள்விகள் கேட்கப்படும். இது உங்களது ஐஆர்சடிசி அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்பட்டபோது, நீங்களே உருவாக்கி இருப்பீர்கள்.
இந்த கேள்விக்கு பதிலை அளித்த பிறகு உங்களது ஈ-மெயில் ஐடிக்கு பாஸ்வேர்ட் ரீசெட் செய்வதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்கை ஓப்பன் செய்த பிறகு புதிய பாஸ்வேர்டை செட் செய்து கொள்ளலாம். இதை நன்றாக நினைவில் வைத்துகொள்ளுங்கள் அல்லது தனிப்பட்ட முறையில் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
மொபைல் நம்பர் மூலம் ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட் மாற்றுவது எப்படி? (How To Change IRCTC Password With Mobile Number): முந்தைய வழியை போலவே முதலில் ஐஆர்சடிசி வெப்சைட்டுக்கு செல்லுங்கள். ஃபர்கெட் பாஸ்வோர்ட் லிங்கை கிளிக் செய்யுங்கள். இப்போது, பயனர் ஐடி மற்றும் கேப்ச்சா கோட் கேட்கப்படும். அதை கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
இப்போது, மொபைல் நம்பர் அல்லது செக்யூரிட்டி கேள்வி ஆப்ஷன் தோன்றும். அதில் மொபைல் நம்பர் பக்கத்தை தேர்ந்தெடுங்கள். இப்போது, உங்களது மொபைல் நம்பரை அதில் டைப் செய்து கொள்ளுங்கள். அதன்பின் ஓடிபி வெரிபிகேஷனுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இப்போது, உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வந்து சேரும்.
இந்த ஓடிபி கொடுத்த பிறகு புதிய பக்கம் தோன்றும், அதில் புதிய பாஸ்வேர்ட் கொடுத்துவிடுங்கள். அதோடு கேப்ச்சா கோட் கொடுக்க வேண்டி இருக்கும். இரண்டையும் கொடுத்துவிட்ட பின்பு, உங்களது புதிய பாஸ்வேர்ட் அப்டேட் செய்யப்பட்டுவிடும். இப்படி 2 வழிகளில் உங்களது ஐஆர்சிடிசி பாஸ்வேர்ட்டை ஆன்லைன் மூலம் மாற்றி கொள்ளலாம்.
மேலும், நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்ட் உங்களை தவிர யாராலும் கணிக்க முடியாததாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பாஸ்வேர்ட்123, ஏபிசிடிஇஎப் என்று மிகவும் எளிதாக இருப்பதை தவிர்த்து விடுங்கள். அதேநேரத்தில் நன்றாக நினைவுக்கு வரும்படி அந்த பாஸ்வேர்ட் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications