ஆதார் கார்டுக்கு வெச்சாச்சு.. உங்களுக்கு தெரியாம இது நடக்குதா.. உடனே இதை பண்ணுங்க.. அசால்ட்டா விட்ராதீங்க!
ஆதார் கார்டு (Aadhaar Card) இல்லாதவர்களை பார்க்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு இந்தியருக்கும் முக்கியமான அடையாள சான்றாக ஆதார் கார்டு மாறிவிட்டது. பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற ஒட்டுமொத்த முக்கிய ஆவணங்களும் ஆதாருடன் தொடர்பில் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஆதார் கார்டில் உங்களுக்கு தெரியாமல் யாராவது, ஏதாவது செய்கிறார்களா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதை எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனைகளும் நடக்கின்றன. அதேபோல சிம் கார்டு வாங்குவது, புதிய பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது போன்றவையும் செய்யப்படுகின்றன. இதை ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒருவருக்கு தெரியமலேயே செய்து முடிக்கவும் வாய்ப்புள்ளது. அவர்களது மொபைல் நம்பர், இமெயில் ஐடி போன்றவற்றை தெரிந்து கொண்டு அதை செய்ய செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஆகவே, ஆதார் கார்டு விஷயத்தில் மிகுந்த கவனமுடம் இருக்க வேண்டும். இதனால், ஆதார் கார்டு சேவைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது (Unique Identification Authority of India - UIDAI) ஆதார் கார்டை கண்காணிக்க வழிவகை செய்து கொடுத்துள்ளது. இதனால் திருடப்பட்ட ஆதார் கார்டு, தகவல்கள் கசிந்த ஆதார் கார்டு மூலம் நடக்கும் தவறான சம்பவங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் நேரடியாக இதை தெரிந்து கொள்ள முடியாது. இருப்பினும், உங்களது ஆதார் கார்டு விவரங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இந்த விவரங்கள் மூலம் நீங்கள் அதை செய்யாதபட்சத்தில் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதாவது, ஆதார் விவரங்களை பயன்படுத்தி டிராவல், ஹோட்டல் புக்கிங், பேங்க் சேவைகள் செய்யப்பட்டதா?
அல்லது வேறு எதற்காவது ஆதார் பயன்படுப்பட்டதா என்பதை அறிய முடியும். இதுபோன்று ஆதார் கார்டு விவரங்களை வைத்து நீங்கள் செய்திருந்தால், ஓகேதான். ஆனால், நீங்கள் செய்யாமல், ஏதாவது நடந்திருந்தால். அதை நீங்கள் தடுக்க வேண்டியது கட்டாயமாகும். உடனே மொபைல் நம்பர், இமெயில் போன்றவற்றை மாற்றலாம் அல்லது லாக் செய்து கொள்ளலாம். இப்போது, எப்படி என்பதை பார்ப்போம்.
முதலில் மை ஆதார் (myAadhaar) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். இப்போது, உங்களது 12 இலக்க ஆதார் கார்டு எண் மற்றும் அதற்கு கீழே கேப்ச்சா கோட் (Captcha Code) கேட்கப்படும். இந்த விவரங்களை கொடுத்து ஓடிபி லாகின் டேப்-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதை எடுத்து கொள்ளுங்கள்.
இதற்கான பக்கத்தில் ஓடிபியில் வந்த நம்பரை டைப் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, மெனுவில் ஆதான்டிகேஷன் ஹிஸ்டரி (Authentication History) டேப் இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதில் ஆதார் கார்டு மூலம் செய்யப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் நீங்கள் செய்யாதது ஏதாவது இருந்தால், வேறு யாரோ அதை பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
ஆகவே, உடனே ஆதார் கார்டை நீங்கள் லாக் செய்து கொள்ளுங்கள். இதை எப்படி செய்வது? யுஐடிஏஐ (UIDAI) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். லாக் மற்றும் அன்லாக் ஆதார் டேப்-ஐ கிளிக் செய்யுங்கள். உங்களது விவரங்கள் கேட்கப்படும். இதை கொடுத்துவிட்டால், ஓடிபி கிடைக்கும். இந்த ஓடிபியை கொடுத்து ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்து கொள்ளலாம். இதன் மூலம் மறுபடியும் அதை யாரும் பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications