Home
News

கூகுள் பே இருக்கா? உங்கள் சிபில் ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

இந்தியாவில் போன்பே, பேடிஎம், போன்ற செயலிகளை விட கூகுள் பே (Google Pay) செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் பே செயலியைப் பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும், அதேசமயம் அவ்வப்போது இந்த செயலியில் புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே தான் கூகுள் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் கூகுள் பே செயலி மூலம் உங்களுடைய சிபில் ஸ்கோர் (CIBIL score) எவ்வளவு இருக்கிறது என்று எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதாவது வாகன கடன், வீட்டுக் கடன் அல்லது இன்னும் பிற கடன் தேவைப்படும் நபருக்கு சிபில் ஸ்கோர் மிகவும் அவசியம். குறிப்பாக சிபில் ஸ்கோர் மட்டுமல்லாமல் ஒருவர் கடன் தொகையைத் தாமதமாகச் செலுத்தி இருந்தால் கூட அந்த விவரங்களையும் சேர்த்து வழங்குகிறது கூகுள் பே.

கூகுள் பே இருக்கா? உங்கள் சிபில் ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்..

குறிப்பாக கூகுள் பேவில் இந்த அம்சம் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5 கோடி இந்தியர்கள் இதனைப் பயன்படுத்தி உள்ளதாகக் கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் எந்தவொரு வங்கியிலும் கடன் வாங்குவதற்கு இந்த சிபில் ஸ்கோர் ரொம்ப முக்கியம். மேலும் இந்த சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் தான் வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்கும். அதுவும் 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் தயங்காமல் கடன் வழங்கும். இப்போது கூகுள் பே செயலியில் சிபில் ஸ்கோர் பற்றி எப்படி தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.

அதாவது உங்களது மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அடுத்து முகப்பு பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ள மேனேஜ் யுவர் மனி பிரிவில் Check your CIBIL score for free என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு பயனர்கள் ஆவணங்களில் உள்ளது படி தங்களது பெயரை உள்ளிட வேண்டும். இதை செய்த பிறகு பயனர்கள் தங்களது சிபில் ஸ்கோரை அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பான் கார்டு எண் போன்ற விவரங்களை ஏற்கனவே வங்கி மற்றும் பயனர்கள் மூலம் கூகுள் பே அறிந்துள்ள காரணத்தால் சிபில் ஸ்கோரை எளிதில் பெறமுடிகிறது. மேலும் இதை TransUnion CIBIL நிறுவனத்தின் துணையுடன் கூகுள் பே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, கூகுள் பே செயலியில் கடன் பெறுவதற்கு நிதி நிறுவனங்களை அணுகும் முறை விரிவு படுத்தப்படுகிறது. அதன்படி ஆதித்யா பிர்லா பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் செயல்பட உள்ளது. இதுதவிர ஜெமினி மூலம் கடன் பெறுதற்கான வழிகாட்டுதல்களும் வழங்க இந்த ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் பே இருக்கா? உங்கள் சிபில் ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்..

அதேபோல் இந்தியாவில் UPI செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் வாங்குவது முதல் மின்சார கட்டணம் செலுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது வரை இந்த UPI செயலிகள் தான் அதிகம் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்த யுபிஐ செயலிகள் வந்த பிறகு தான் சில்லறை தொல்லை, அடிக்கடி ஏடிஎம் போகும் தொல்லை குறைந்துவிட்டது என்றே கூறலாம். மேலும் பணப் பரிமாற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல், சிறந்த பாதுகாப்பு வசதி, நாம் எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறோம் என்பதைக் கண்காணிப்பது போன்ற பல அம்சங்களையும் இந்த அசத்தலான யுபிஐ செயலிகள் வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know how to check your CIBIL score for free with Google Pay? Here's a Simple Guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X