Home
News

விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வரும் சுனிதா சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..

அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ISS) பயணமானார். குறிப்பாக இவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் (Butch Wilmore) சென்றால். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி மையத்தில் 9 மாதங்களாகச் சிக்கி கொண்டனர்.

அதுவும் இவர்கள் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாகப் பூமிக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

சுனிதா வில்லியம்ஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..

இந்நிலையில் 9 மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளனர். அதாவது அவர்கள் 2025 மார்ச் 19 அல்லது அதற்கு சில நாட்களுக்குப் பிறகு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவர்கள் இருவரை அழைத்து வர எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் 4 பேர் சென்றுள்ளனர்.

குறிப்பாக விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்புவதற்கு ஏற்பாடு செய்த எலான் மஸ்க், அதிபர் டிரம்பிற்கு நன்றி என நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் புட்ச் வில்மோர் கூறியது என்னவென்றால், நம் அனைவருக்கும் எலான் மஸ்க் மீது மிகுந்த மரியாதை உள்ளது எனவும், நமது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.

மேலும் இவர்கள் இருவரின் சம்பளம் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களின் ஆண்டு சம்பளம் ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை இருக்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இதுதவிர விண்வெளியில் 287 நாட்கள் தங்குவதற்கு தலா 1,148 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) கூடுதல் தொகையைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோல் மிக நீண்ட காலமாக அவர்கள் விண்வெளியில் இருப்பதால், மனித உடல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும். அதன்படி விண்வெளியில் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால், மனிதர்களுக்கு எழும்பு அடர்த்தி குறையும், தசைகள் தளர்ச்சியையும், கண் பார்வை பிரச்சனை ஏற்படலாம், கண் நரம்புகளில் அழுத்தம் போன்றவையும் அவர்கள் பூமிக்கு திரும்பும்போது ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இதுபோன்ற பிரச்னைகளால் அவர்கள் ஓரிடத்தில் நிற்க முடியாது, பின்பு அவர்கள் உடல் புவிஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து சமநிலையில் நிற்க முடியாமல் அவதிப்படும், இதனால் அவர்களால் நடக்கவும் முடியாது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். ஆனாலும் இதெல்லாம் சில நாட்களுக்கு தற்காலிகமானதுதான், சில பயிற்சிகள் மூலம் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: hindustantimes, Nasa

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know how much Sunita Williams salary? Here are the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X