Home
News

SBI டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணம் மற்றும் புதிய கார்டுகளை பெறுவதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ (UPI) செயலிகளை நாம் பயன்படுத்தி வந்தாலும், சில முக்கிய தேவைகளுக்குப் பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டிய நிலை தான் உள்ளது. குறிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக வங்கிகள் வழங்கும் ஏடிஎம் கார்டுகளுக்கு பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இங்கே எஸ்பிஐ (SBI) ஏடிஎம் கார்டுகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) இணையதளத்தில் வெளியான தகவலின்படி, டெபிட் கார்டுகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிலவற்றுக்கு கட்டணம் கிடையாது. அதன்படி கிளாசிக் (Classic) டெபிட் கார்டு, சில்வர் (Silver) டெபிட் கார்டு, குளோபல் (Global) டெபிட் கார்டு காண்டாக்ட்லெஸ் (Contactless) டெபிட் கார்டு போன்றவற்றை பெற கட்டணம் இல்லை என்று கூறப்படுகிறது.

SBI டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணம்?

அதேசமயம் எஸ்பி கோல்ட் டெபிட் கார்டு (Gold Debit Card) வாங்கினால் 100 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதன்பின்பு பிளாட்டினம் டெபிட் கார்டு (Platinum Debit Card) வாங்கினால் 300 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாம் பயன்படுத்தும் அனைத்து டெபிட் கார்டுகளுக்கும் வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக வசூல் செய்கின்றன. அதுவும் வங்கி கணக்கு தொடங்கிய இரண்டாவது ஆண்டு முதல் இந்த கட்டணங்கள் பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் வெவ்வேறு வகையான டெபிட் கார்டுகளுக்கு ஏற்ப வங்கிகள் கட்டணத்தை வசூல் செய்கின்றன.

வருடாந்திர கட்டணம்: எஸ்பிஐ பொறுத்தவரை கிளாசிக், சில்வர், குளோபல் கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு ரூ.200 பிளஸ் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. மேலும் யுவா, கோல்ட், மை கார்டு டெபிட் கார்டுகளுக்கு ரூ.250 பிளஸ் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. அதன்பின்பு பிளாட்டினம் டெபிட் கார்டுகளுக்கு ரூ.325 பிளஸ் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. அடுத்து பிளாட்டினம் பிசினஸ் ரூபே (Platinum Business RuPay Card) கார்டுகளுக்கு ரூ.350 பிளஸ் ஜிஎஸ்டி, பிரைட் மற்றும் பிரீமியம் Business டெபிட் கார்டுகளுக்கு (Pride/Premium Business Debit Card) ரூ.425 பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை உங்கள் டெபிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ எஸ்பிஐ வங்கியில் புதிய டெபிட் கார்டை பெறமுடியும். அதற்கு ரூ.300 பிளஸ் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எஸ்பிஐ வங்கி பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் பிஐபி (PIB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (Press Information Bureau) வெளியிட்ட தகவலின்படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய மோசடியை மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த புதிய மோசடி, எஸ்பிஐ வெகுமதிகளை (ரிவார்டு பாயிண்ட்ஸ்) வழங்குவதாக கூறி, வஞ்சகமான செய்திகளை அனுப்பி, பயனர்களை போலியான இணைப்புகள் (லிங்க்) அல்லது போலி ஆப் பயன்பாட்டை பதிவிறக்கச் செய்ய வற்புறுத்துகிறார்கள். குறிப்பாக இந்த போலி தளங்களை அசல் தளம் என நம்பி பல SBI வாடிக்கையாளர்கள் அறியாமல் அதிகமாக மோசடி வலையில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய ஆன்லைன் மோசடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

SBI டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணம்?

அதுவும் SBI ரிவார்டுகளை வழங்குவதாகக் கூறும், போலி இணைப்புகளைக் கிளிக் செய்தால் பயனர்களின் தரவுடன் பணத்தைச் சேர்த்துத் திருடப்படுகிறது.

எனவே தான் Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான தளங்களிலிருந்து மட்டுமே எஸ்.பி.ஐ. தொடர்பான பயன்பாடுகளை நிறுவ வேண்டும் என்று SBI வங்கியும், அரசாங்கமும் எச்சரித்துள்ளது. குறிப்பாக அதிகாரப்பூர்வமான SBI ரிவார்டுகளை பெற, வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ எஸ்பிஐ ரீவார்ட்ஸ் வலைத்தளத்தில் (https://www.rewardz.sbi/) பயன்படுத்த வேண்டும் அல்லது 1800-209-8500 என்ற எண்ணில் சரிபார்க்கப்பட்ட எஸ்.பி.ஐ. ரீவார்ட்ஸ் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know how much annual fee for SBI debit cards and how much fee for getting new cards?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X