Home
News

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? லிமிட் இருக்கு.. இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

ஆதாரில் (Aadhaar card) உங்கள் பெயர் அல்லது தனிப்பட்ட விவரங்களை மாற்ற வேண்டி இருந்தால் அதற்கு UIDAI சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆதார் கார்டு ஆனது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) நிர்வகிக்கப்படுகிறது. நாட்டில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு வழங்கும் பல சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் அட்டை தேவைப்படுகிறது. அதேபோல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் புதிய சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? லிமிட் இருக்கு..

எனவே பல முக்கிய விஷயங்களுக்குப் பயன்படும் இந்த ஆதாரில் அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை ஆதாரில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் தவறாக இருந்தால், அதை உடனே புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் நமக்கு கிடைக்க கூடிய சலுகைகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பிறந்த தேதி, மொபைல் எண், முகவரி போன்ற ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கலாம். அதாவது UIDAI இணையதளத்தின் உதவியுடன் myAadhaar போர்ட்டலில் இருந்து ஆதாரை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். குறிப்பாக இப்போது ஆன்லைனில் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க எந்த கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஆதாரில் பெயர் மாற்றத்திற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது உங்கள் ஆதார் அட்டையில் பெயர் மாற்றும் போது எத்தனை முறை மாற்றம் செய்யலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளன. அதன்படி வாழ்நாளில் 2 முறை மட்டுமே ஆதாரில் உங்கள் பெயரை புதுப்பிக்க முடியும். நீங்கள் 3-வது முறையாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு UIDAI அலுவலகத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்க.

ஆனால் ஆதாரில் பெயர் மாற்றங்களை போலன்றி உங்கள் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். குறிப்பாக UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப பல முகவரி மாற்றங்களைச் செய்யலாம் .

அதேபோல் 10 வருட பழமையான ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள், சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருகிறது. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் உங்களுடைய விவரங்கள் மாறி இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய செல்போன் நம்பர் மாறி இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் இன்னொரு வீட்டிற்கு மாறி இருப்பீர்கள். அப்போது உங்களின் முகவரி மாறி இருக்கும். எனவே தான் UIDAI பத்து ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காமல் இருக்கும் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறது.

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? லிமிட் இருக்கு..

மேலும் ஆன்லைனில் ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க வரும் டிசம்பர் 14 -தான் கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் டிசம்பர் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் தேவையான விவரங்கள் கொடுத்து புதுப்பிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Do you know how many times you can change name on your Aadhaar card: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X