விராட் கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டகிராம் போஸ்ட்டுக்கு எத்தனை கோடி வருமானம் தெரியுமா? முழு விவரம்.!

|

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக செய்திகள், முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் எளிமையாக பார்க்க முடியும். அதுவும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு வரும்வருமானம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுசார்ந்த விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கிரிக்கெட்டில் அதிவேகமாக சதங்க

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதங்களை விளாசியவர் விராட் கோலி. குறிப்பாக பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் தனது சதங்களையும், சாதனைகளையும் அடுக்கினார் விராட்.

ல ஆண்டுகளாகவே இந்திய

அதேபோல் இவர் பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் ஏ ப்ளஸ் பிரிவில் சம்பளம் வாங்கி வருகிறார். பின்பு விளம்பரங்கள், நிறுவன பங்கு என பல வகையில் கோடிகளை விராட் கோலி குவித்து வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியிடமிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார் விராட் கோலி. இந்நிலையில் இவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளில் சம்பளம் பெற்று வரும் தகவல் அதிக வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இனி ஒரே திட்டத்தில் மொத்தமும்- மொபைல், ஃபைபர், டிடிஎச் எல்லாம்: ஏர்டெல் அறிவித்த ஏர்டெல் பிளாக் திட்டம்!இனி ஒரே திட்டத்தில் மொத்தமும்- மொபைல், ஃபைபர், டிடிஎச் எல்லாம்: ஏர்டெல் அறிவித்த ஏர்டெல் பிளாக் திட்டம்!

ண்மையில் Hopper HQ என்ற நிறுவனம்

அண்மையில் Hopper HQ என்ற நிறுவனம் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் முதல் இடத்தில் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ இருக்கிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் போஸட்டுக்கு ரூ.12 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகளே உஷார்: இனி கிளிக், அபராதம், மெசேஜ்: விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை: நவீன தானியங்கி கேமரா!வாகன ஓட்டிகளே உஷார்: இனி கிளிக், அபராதம், மெசேஜ்: விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை: நவீன தானியங்கி கேமரா!

இரண்டாவது இடத்தில்

அதன்பின்பு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் இருக்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் ராக் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் 11 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு

மேலும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளை குவிக்கும் பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 395 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர்களில் விராட் கோலி 20-வது இடம்பிடித்துள்ளார். அதுவும் விராட் கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை வருமானமாக பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவிலும் நினைக்கவில்லை: ஜெப் பெசோஸ் உடன் விண்ணுக்கு செல்லும் 82 வயது பெண்- யார் இவர் தெரியுமா?கனவிலும் நினைக்கவில்லை: ஜெப் பெசோஸ் உடன் விண்ணுக்கு செல்லும் 82 வயது பெண்- யார் இவர் தெரியுமா?

y; Hopper HQ

Hopper HQ நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், டூ பிளிசிஸ், டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Do you know how many crores for an Instagram post posted by Virat Kohli?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X