Home
News

பேங்க் அக்கவுண்ட்.. UPI பரிவர்த்தனை.. ATM பணம்.. ஜூலை 13 வருது ஆப்பு! உடனே இதை செய்துடுங்க.. இல்லனா அவ்ளோதான்!

பேங்க் கஸ்டமர்களின் யுபிஐ (UPI), ஏடிஎம் (ATM), டெபிட் கார்டு முதல் நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் வரையில் பல்வேறு பேங்க் சேவைகள் (Bank Services) ஜூலை 13ஆம் தேதியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன. ஆகவே, நினைத்த நேரத்தில் அந்த சேவைகளை பயன்படுத்த முடியாது. இதனால் சிக்கலில் கூட மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, இப்போது எந்தெந்த சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் வருகிறது. இதை தவிர்க்க முன்கூட்டியே என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நினைத்த நேரத்தில் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்றால் வரும் பாருங்க ஒரு கடுப்பு.. அது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். இப்போது டிஜிட்டல் முறையில் அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் மாறிவிட்டதால், ஆன்லைன் சேவைகளில் ஏற்படும் சிக்கல்கள் அவ்வப்போது நமது பொறுமையை சோதிக்கத்தான் செய்கின்றன. இப்படித்தான் ஜூலை 13ஆம் தேதி வங்கி சேவைகளில் நடக்க இருக்கிறது.

பேங்க் அக்கவுண்ட்.. UPI பரிவர்த்தனை.. ATM பணம்.. ஜூலை 13 வருது ஆப்பு!

யுபிஐ தொடங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பது வரையிலான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன. பராமரிப்புக்காக இந்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. ஆனால், 13 மணி நேரம் மட்டுமே நிறுத்தி வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட நேரங்களில் சில சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இப்போது எந்த சேவைகள் எப்போது நிறுத்தப்படும் மற்றும் எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

எச்டிஎப்சி வங்கி சேவைகள் (HDFC Bank Services): இந்த வங்கி சேவை டவுன்டைமானது, அனைத்து வங்கிகளுக்கும் கிடையாது. எச்டிஎப்சி வங்கி கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, அந்த வங்கி கஸ்டமர்கள் ஜூலை 13ஆம் தேதி அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையில் சேவைகளில் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டி இருக்கும்.

யுபிஐ சேவைகள் (UPI Services): மேற்கூறிய 13 மணி நேரத்தில் அதிகாலை 3.45 மணி முதல் காலை 9.30 மணி வரையில் மட்டுமே யுபிஐ சேவைகளை பயன்படுத்த முடியும். அதன்பிறகு மதியம் 12.45 முதல் யுபிஐ சேவைகள் தொடங்கும். இதில் பணம் அனுப்புதல்/பெறுதல், கியூஆர் கோட் பரிவர்த்தனை, பேலன்ஸ் செக், பிஎன் செட் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.

பேங்க் அக்கவுண்ட்.. UPI பரிவர்த்தனை.. ATM பணம்.. ஜூலை 13 வருது ஆப்பு!

ஏடிஎம் சேவைகள் (ATM Services): ஏடிஎம் சேவைகளை பொறுத்தவரையில் ஜூலை 13ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 3.45 மணி வரையில் பயன்படுத்தலாம். அதேபோல காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையில் பயன்படுத்தலாம். பணம் எடுத்தல், பேலன்ஸ் செக்கிங், மொபைல் நம்பர் அப்டேட் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நேரத்தில் பணம் எடுப்பதிலும் லிமிட் இருக்கிறது.

ஆகவே, மேற்கூறிய நேரத்தில் சேவைகள் கிடைத்தாலும், பிளாட்டினம் கார்டு கஸ்டமர்கள் அதிகபட்சம் ரூ.20000 மட்டுமே எடுக்க முடியும். அதேபோல மில்லினிய டெபிட் கார்டுக்கு ரூ.20000, டைம்ஸ் பாயிண்ட்ஸ் டெபிட் கார்டுக்கு ரூ.1000, ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ரூ.10000, ரிவார்ட்ஸ் டெபிட் கார்டுக்கு ரூ.10,000 மற்றும் மணிபேக் டெபிட் கார்டுக்கு ரூ.10000 லிமிட் விதிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்பிஎஸ், என்ஈஎப்டி/ஆர்டிஜிஎஸ் சேவைகள் (IMPS, NEFT/RTGS Services): இந்த டவுன்டைமில் ஐஎம்பிஎஸ் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கிடைக்காது. அதேபோல என்ஈஎப்டி/ஆர்டிஜிஎஸ் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கிடைக்காது. இதேபோல மொபைல் பேங்கிங் மற்றும் நெட்பேங்கிள் சேவைகளும் அதிகாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கிடைக்காது.

இப்படி ஏராளமான வங்கி சேவைகள் ஜூலை 13ஆம் தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் தடைப்பட இருக்கிறது. ஆகவே, முன்கூட்டியே எச்டிஎப்சி வங்கி கஸ்டமர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளை திட்டமிடுவது நல்லது. ஜூலை 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பிறகு வழக்கம்போல அனைத்து சேவைகளும் கிடைத்துவிடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know HDFC Bank UPI, ATM, Debit Card Services Downtime on July 13 What You Should Do
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X