புது UPI ரூல்ஸ்.. Google Pay, PhonePe, Paytm-க்கு GST கட்டணம்.. இனி எவ்வளவு கட்டணம்.. எவ்ளோ பணம் அனுப்பனும்?
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஓரளவுக்கு மேல் சென்றால் யாராக இருந்தாலும் ஜிஎஸ்டி (GST) கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த ஜிஎஸ்டி வரி பொருந்தும். ஆனால், அந்த ஜிஎஸ்டிக்கு விலக்குகள் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன. விவரம் இதோ.
பெட்டிக்கடைக்கு சென்றாலும் சரி, சூப்பர் மார்கெட்டுக்கு சென்றாலும் சரி, கையில் காசு வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. பேங்க் அக்கவுண்ட்களுடன் நேரடியாக ஒருகிணைப்பு செய்யப்பட்டிருக்கும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் (UPI Apps) இருந்தால் போதும், பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இந்த யுபிஐ பரிவர்த்தனைகள் சரக்குகள் (Goods) ரீதியாகவோ அல்லது சேவைகள் (Services) ரீதியாகவோ இருந்தால், அதற்கு ஜிஎஸ்டி கட்டணம் இருக்கிறது. இந்த வரம்புக்குள் இல்லாமல், வழக்கமாக தனிநபர்கள் பயன்படுத்தும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணங்களும் கிடையாது. ஆகவே, ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் ஜிஎஸ்டி கட்டணம் பொருந்தாது.
அதேபோல இந்த சரக்குகள் மற்றும் சேவைகள் அடிப்படையில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. அந்த வரம்புக்கு மேல் சென்றால் மட்டுமே, அது ஜிஎஸ்டி (GST) விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அந்த வரம்பை பொறுத்தவரையில், சேவைகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 லட்சம் வரம்பாக இருக்கிறது.
அதேபோல சரக்குகள் அடிப்படையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.40 லட்சம் வரம்பாக இருக்கிறது. இதுவும் வருடாந்திரத்துக்கு விதிக்கப்பட்ட வரம்பாகும். ஆகவே, ஒரு வருடத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் அடிப்படையில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. ஆகவே, தனிநபர்களுக்கு கட்டணம் கிடையாது.

இப்படிப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் அடிப்படையில் செய்யப்படும் பரிவர்த்தனைகளை மளிகை கடை, பழக்கடை போன்று சரக்குகளை வணிக ரீதியாக கையாளும் வியாபாரிகளுக்கு விதிக்கப்படும். அதேபோல ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், அக்கவுண்டன்ட் போன்ற சேவைகளுக்காக பணத்தை பெறுவோருக்கும் இந்த ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.
அதுவும் மேலே குறிப்பிட்ட ரூ.20 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் பரிவர்த்தனைகளுக்கு மேலே சென்றால் மட்டுமே விதிக்கப்படும். இந்த விதிகள் மற்றும் வரம்புகளை பெங்களூருவின் வணிக வரித் துறை உறுதி செய்துள்ளது. ஏனென்றால், பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் இருக்கும் வியாபாரிகள் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை பெறுகின்றனர்.
இதனால், அவர்களது வருமானம் குறிப்பிட்ட வரம்புக்கு மேலே செல்வதால், ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்க மறுக்கின்றனர். இதனாலேயே யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து பெங்களூரூ வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. ஆகவே, இது வணிக ரீதியாக மட்டுமே இருக்கிறது.
இது ஒட்டுமொத்த வியாபாரிகளுக்கும் பொருந்தும் என்பதால், தமிழ்நாட்டுக்கும் பொருந்தும. மேலும், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் யுபிஐ விதிகள் மாற இருக்கின்றன. இந்த விதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) கொண்டுவர இருக்கிறது. ஆகவே, இந்த விதிகளும் ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் அமல் செய்யப்பட இருக்கிறது.
இது யுபிஐ சேவைகளை எவ்வளவு முறை பெற முடியும் என்பதில் வருகிறது. அதாவது, உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பேலன்ஸை, யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு நாளுக்கு 50 முறை பார்த்து கொள்ளலாம். பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடியை 25 முறை பார்த்து கொள்ளலாம். இப்படியான விதிகள் அமலுக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








