Google Pay கதை முடிவு.. ஜூன் 4 முதல் அமல்.. Google Wallet-க்கு மாறலாம்.. யூசர்களுக்கு அதுதான் ஒரே வழி!
கூகுள் பே (Google Pay) வைத்திருக்கும் ஒட்டுமொத்த யூசர்களின் வயிற்றில் புளியை கரைக்கும்படி அந்த ஆப்பின் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. இனிமேல் கூகுள் பேவுக்கு பதிலாக கூகுள் வாலெட் (Google Wallet) ஆப்பை பயன்படுத்துமாறு கூகுள் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
ஆகவே, ஜூன் 4ஆம் தேதி முதல் கூகுள் பே சேவை நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. இந்த சேவை நிறுத்தம் ஒட்டுமொத்த கூகுள் பே யூசர்களுக்கும் பொருந்துமா? அல்லது குறிப்பிட்ட யூசர்களுக்கு மட்டும் பொருந்துமா? என்ற குழப்பத்தில் இப்போது அதன் யூசர்கள் இருக்கின்றனர். இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பேடிஎம், போன்பே மற்றும் கூகுள் பே ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். பேடிஎம் ஆப் மீதான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் நடவடிக்கைக்கு பிறகு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஆப்கள் மீதான பார்வை அதன் யூசர்களிடையே வெகுவாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
பல யூசர்கள் அந்தந்த பேங்க் ஆப்களையே யுபிஐக்கு பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே, மத்திய அரசானது கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில் கூகுள் பே ஆப்பின் சேவை ஜூன் 4ஆம் தேதியில் இருந்து நிறுத்தப்பட இருப்பது காட்டுத்தீ போல மக்களிடையே பேசப்படுகிறது.
ஆனால், உண்மையில் கூகுள் பே சேவை நிறுத்தப்பட இருப்பது, இந்தியாவில் கிடையாது. அமெரிக்காவில் தான் நிறுத்தப்படுகிறது. இதனால், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு உள்பட அந்த நாட்டினருக்கே இந்த புதிய மாற்றம் வரப் போகிறது. அமெரிக்காவின் கூகுள் பே யூசர்கள் அனைவரையும் இப்போது கூகுள் வாலெட் ஆப்புக்கு மாற கூகுள் நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.

கூகுள் பே சேவை நிறுத்த காரணம் என்ன? கூகுள் பே அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இப்போது, உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கும் மேலாக அதன் சேவை கிடைக்கிறது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமான மக்கள் கூகுள் பே ஆப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால், அமெரிக்காவில் நிலைமையே தலைகீழாக இருக்கிறது.
ஏனென்றால், அமெரிக்க மக்கள் தங்களது பேங்க் அக்கவுண்ட் உடன் நேரடியாக கூகுள் பே ஆப்பை இணைப்பதை விரும்புவது கிடையாது. வாலெட் போல அதில் குறிப்பிட்ட பணத்தை டெபாசிட் செய்து பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். ஆகவே, இந்த சேவையை வழங்கும் கூகுள் வாலெட் ஆப்பையே அங்கு பெரும்பாலும் பயன்படுத்து கின்றனர்.
அமெரிக்காவின் ஸ்டோர்களில் டேப் அண்ட் பே செய்வது முதல் ட்ரான்ஸிட் கார்டுகள் பரிவர்த்தனை, ஓட்டுநர் உரிமம் மற்றும் மாநில ஐடி பரிவர்த்தனைகள் வரையில் கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலெட் ஆப்பே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் 5 மடங்கு அதிகமாக கூகுள் வாலெட் ஆப் பயன்பாடு அங்கு இருக்கிறது.
இதனாலேயே அமெக்காவில் கூகுள் பே ஆப் சேவை ஜூன் 4ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ஜோரிஸ் வான் மென்ஸ், குழு தயாரிப்பு மேலாளர், கூகுள் பே (Group Product Manager, Google Pay) அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். ஆகவே, அமெரிக்காவின் கூகுள் பே வெர்ஷனை இனிமேல் பயன்படுத்த முடியாது.
இந்தியாவில் கூகுள் பே பயன்படுத்தும் யூசர்கள் கவலைப்பட வேண்டியது கிடையாது. அதேபோல கூகுள் வாலெட் சேவையும் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது. நேரடியாக வங்கியை இணைக்காமலேயே பணத்தை டெபாசிட் செய்து அந்த ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளுக்கு எங்களது கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications