Google-க்கு கும்பிடு.. Gmail அக்கவுண்ட்.. இனி பாஸ்வேர்ட் இல்ல.. பிங்கர்பிரிண்ட்.. பின் நம்பர்.. வருது பாஸ்கீ!
கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொரு யூசர்களுக்கும் கூகுள் பாஸ்கீ (Google Passkey) களமிறக்கப்பட்டுள்ளது. இனிமேல் லேப்டாப், மொபைல் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் கூகுள் அக்கவுண்ட்டை (Google Account) லாகின் செய்யும்போது பாஸ்வேர்ட் மட்டுமல்லாமல், ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprint), 6 டிஜிட் பின் நம்பர் (6 Digit PIN Number) போன்ற பாஸ்கீகளை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இந்த கூகுள் பாஸ்கீகள் மூலம் ஜிமெயில் யூசர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை இப்போது பார்ப்போம்.
இன்றைய காலத்தில் பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்களைகூட பார்க்க முடியும். ஆனால், ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்களை பார்க்க முடியாது. ஏனென்றால், ஆண்ட்ராய்டு போன் முதல் லேப்டாப் வரையில் மக்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத டிவைஸ்களை பயன்படுத்த வேண்டுமானால், ஜிமெயில் அக்கவுண்ட் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அவ்வளவு ஏன்? ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட் வரையில் பெற வேண்டுமானால், ஜிமெயில் இப்போது கேட்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் என்பது அதி முக்கியமாகும். ஆனால், நம்மில் பலர் அந்த பாஸ்வேர்ட்டை மறந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. இதனால், தேவைப்படும் அதை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனாலேயே, கூகுள் நிறுவனம் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் (Google Password Manager) செட்டிங்கை யூசர்களுக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த செட்டிங் மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டில் பாஸ்வேர்ட் மட்டுமல்லாமல், கூடுதலாக ஃபிங்கர்பிரிண்ட், 6 டிஜிட் பின் நம்பர், கியூஆர் கோட், ஸ்கிரீன் லாக் (Screen Lock) போன்ற மல்டிபிள் பாஸ்கீ ஆப்ஷன்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இது மல்டிபிள் டிவைஸ்களில் ஜிமெயில் அக்கவுண்ட்டை லாகின் (Gmail Account Login) செய்யும் யூசர்களுக்கு எளிமையாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், மிகுந்த பாதுகாப்பையும் கொடுக்கிறது. கூடவே, பிங்கர்பிரிண்ட், பேசியல் ரிககனைசேஷன் போன்ற பயோமெட்ரிக் ஆப்ஷன்கள் கிடைப்பதால், உங்களை தவிர அந்த பாஸ்கீகளை வேறு யாரும் பயன்படுத்திவிட முடியாது.

பாஸ்கீ எப்படி வேலை செய்கிறது? கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் செட்டிங் மூலம் பாஸ்வேர்ட் மட்டுமல்லாமல், மேற்கண்ட ஃபிங்கர்பிரிண்ட், 6 டிஜிட் பின் நம்பர், கியூஆர் கோட், ஸ்கிரீன் லாக் அல்லது பேசியல் ரிககனைசேஷன் போன்ற பாஸ்கீகளை நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். ஒருமுறை இதை நீங்கள் செய்துவிட்டால், அனைத்து டிவைஸ்களுக்கும் அது பொருந்தும்.
அதாவது, உங்களது மொபைல் மட்டுமல்லாமல், புதிய ஆண்ட்ராய்டு மொபைல், லேப்டாப் அல்லது டெக்ஸ்டாப் போன்ற எந்தவொரு ஜிமெயில் தேவைப்படும் டிவைஸ்களிலும் இந்த பாஸ்கீகளை பயன்படுத்தி லாகின் செய்து கொள்ள முடியும். உங்களது ஜிமெயில் ஐடி (Gmail ID) கொடுத்த பிறகு பாஸ்வேர்ட் கேட்கப்படும். அப்போது கீழே இருக்கும் பாஸ்கீ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
அதில், நீங்கள் கொடுத்த பிங்கர்பிரிண்ட், பின் நம்பர் போன்ற பாஸ்கீ ஆப்ஷன்கள் இடம் பெற்றிருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் ஓப்பன் செய்து கொள்ளலாம். இதை எந்த நேரத்திலும் மாற்றி கொள்ளவும் அல்லது நீக்கி கொள்ளவும் கூகுள் நிறுவனம் யூசர்களுக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. இந்த கூகுள் பாஸ்வேர்ட் மேஜேனருக்கு தனியாக ஆப் தேவையில்லை.
ஆன்லைனிலேயே மாற்றவும், நீக்கவும் முடியும். குரோம் அல்லது ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் இதை செய்து கொள்ளலாம். விண்டோஸ் (Windows), மேக்ஓஸ் (macOS), லினக்ஸ் (Linux) மற்றும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் (Android Devices) இந்த பாஸ்கீகளை பயன்படுத்தி கொள்ளலாம். குரோம்ஓஎஸ் (ChromeOS) டிவைஸ்களுக்கு பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications