கேபிள் டிவி முடிந்தது.. மாதம் ரூ.592-க்கு சேவை.. 12 மாதங்கள்.. 550+ சேனல்கள்.. 21 ஓடிடி சந்தா.. 55 சிட்டிகள்!
கேபிள் டிவியை கட் பண்ணிடுங்க என்று சொல்லும்படி கேபிள் கட்டர் என்னும் பெயரிலேயே மாதத்துக்கு ரூ.592 கொடுத்தால் 550+ சேனல்கள் மட்டுமல்லாமல், 21 ஓடிடி சந்தா மற்றும் 400 எம்பிபிஎஸ் வேக டேட்டாவை 55 சிட்டிகளில் வழங்கிவருகிறது ஒரு புதிய நிறுவனம்.
ஓடிடி சேவைகள் தொடங்கியதில் இருந்து, கேபிள் டிவி சேனல்களை பார்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்துவருகிறது. போதாதற்கு ஜியோ, ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள், தங்களது பிராட்பேண்ட் திட்டங்களில் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல் சலுகைகளை கொடுக்கின்றன.

இந்த திட்டங்களின் விலை கம்மியாக இருப்பதால், கேபிள் டிவிக்கு அடிமேல் அடி விழுகிறது. ஆனால், இப்போது கேபிள் டிவி மட்டுமல்லாமல், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களே மூக்கில் விரல் வைக்கும்படி எக்ஸிடெல் (Excitel) என்னும் புதிய நிறுவனம், டிவி சேனல்கள், ஓடிடி மற்றும் டேட்டாவை அடிமட்ட ரேட்டில் கொடுக்க தொடங்கியிருக்கிறது.
ஆரம்பத்தில், பெங்களூரூ, டெல்லி, ஹைதராபாத், மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே தொடங்கிய இந்த நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகள் இப்போது 55 நகரங்களுக்கு வந்துவிட்டது. குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் சந்தாதாரர்களை மற்ற நிறுவனங்களில் இருந்து தன் பக்கம் ஈர்த்துள்ளது.
எக்ஸிடெல் சிஓஓ வருண் பாஸ்ரிச்சா, இதை உறுதி செய்து வாடிக்கையாளர் திருப்தியே எங்களுக்கு முக்கியம், எங்களது திட்டங்கள் நியாயமான விலையில் பொழுதுபோக்கு சேவைகளை வழங்குகின்றன. நாடு முழுவதும் அதிவேக ஃபைபர்-டு-ஹோம் இன்டர்நெட்டை வழங்குவதே எங்களது குறிக்கோளாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த எக்ஸிடெல் நிறுவனம், இன்டர்நெட் புரோட்டோகால் டிவி - ஐபிடிவி (Internet Protocol TV - IPTV) சேவைகளை வழங்குகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஆஹா, சன்நெக்ஸ்ட் போன்ற 21 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுத்து, வாடிக்கையாளர்கள் வேறு எந்த திட்டங்களுக்கும் செல்லாதபடி சலுகைகளை வைத்திருக்கிறது.
பிரீமியம் டிவி சேனல்கள் உள்பட 550+ லைவ் டிவி சேனல்களும் வருகிறது. இதுபோக பிராண்ட்பேண்ட் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொபைல், டிவிகளுக்கு டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல் சலுகைகளை ரூ 592 முதல் பெற்று கொள்ளலாம். இப்போது, ரூ 592 திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
எக்ஸிடெல் ரூ 592 திட்ட சலுகைகள் (Excitel Rs 592 Plan Offers): இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 400 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (Zee5), எபிக்ஆன் (EpicOn), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஆஹா (Aha) உள்ளிட்ட 21 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
இந்த சலுகைகள் போக 550+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் எச்டி மற்றும் எஸ்டி சேனல்களும் அடங்கும். இந்த திட்டங்களை பெற வேண்டுமானால், முதலில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டியை தேர்ந்தெடுத்து அதற்கான மொத்த பணத்தையும் கட்ட வேண்டும். அதோடு ஜிஎஸ்டி மற்றும் சர்வீஸ் சார்ஜ் இருக்கும்.
இதற்கு பிறகு மாதத்துக்கு எவ்வளவு கட்டணமோ அதை கொடுத்து திட்டங்களை பெற்று கொள்ளலாம். பெங்களூரூ, மங்களூரு, ஹைதராபாத், மும்பை, பாட்னா, லக்னோ, விசாகப்பட்டினம், விஜயவாடா போன்ற 55 நகரங்களில் இந்த சேவைகளை பெற்று கொள்ளலாம். சென்னை, கோவை நகரங்களில் விரைவில் சேவைகள் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த சேவை வந்தால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








