Home
News

DTH கட்டணத்துல Airtel, TATA போட்ட கூட்டணி.. இனிமே கட்டணம் யாருக்கு.. Jio-க்கு வெச்ச ஆப்பு.. விடமாட்டாங்க பாஸ்!

டிடிஎச் (DTH) என்று அழைக்கப்படும் (Direct-to-Home) சேவையை வழங்குவதில் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் டாடா (TATA) ஆகிய நிறுவனங்கள் திடீரென்று கை கோர்த்து ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளது. டிடிஎச் உரிம கட்டணத்தை யார் செலுத்த வேண்டும் என்பதில் போட்டி ஏற்பட்டிருக்கும் நேரத்தில் ஏர்டெல், டாடா நிறுவனங்களின் கூட்டணி டிராய் (TRAI) வரையில் சென்றுள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டிடிஎச் சேவையில் ஏர்டெல் மற்றும் டாடா நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் திட்டங்கள் மூலம் டிவி சேனல்களை வழங்குகிறது. இப்போது, இந்த நிறுவனங்களிடையே டிடிஎச் உரிம கட்டணத்தை (DTH License Fees) யார் செலுத்த வேண்டும் என்பதில் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

DTH கட்டணத்துல Airtel, TATA போட்ட கூட்டணி.. இனிமே கட்டணம் யாருக்கு!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, தொலைத்தொடர்பு சட்டம், 2023 அடிப்படையில் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு குறித்த ஆலோசனைகளை முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவற்றிடம் கேட்டுள்ளது.

இதில் டிடிஎச் சேவைகளை வழங்குவதில் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே வெவ்வேறு முறையீடுகள் வந்துள்ளதால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமே குழப்பத்தில் இருக்கிறது. ஏனென்றால், பார்தி ஏர்டெல் நிறுவனமானது, டிடிஎச் ஆபரேட்டர்களுக்கான விதிக்கப்படும் உரிமக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

டிடிஎச் மூலம் அதிக லாபம் பெறும் ஒளிபரப்பாளர்கள் (DTH Broadcasters) இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஜியோ நிறுவனம், டிடிஎச் ஆபரேட்டர்களுக்கான உரிமக் கட்டண தள்ளுபடியை மறுக்கிறது. ஏற்கனவே, டிடிஎச் சேவைகளானது, இலவச ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் பலன்களை பெறுகின்றன.

இதனால், மார்கெட்டின் விலையைவிட மலிவான விலைக்கு டிடிஎச் சேவைகளை வழங்க முடிகிறது. சொல்லப்போனால், இது கேபிள் டிவி மற்றும் ஐபிடிவி வழங்குநர்களுக்கு இது பலன்களை கொடுப்பது இல்லை. இது அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது, இதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒப்பீடுட்டு அடிப்படையில் டிடிஎச் உரிமை கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கூடாது.

இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்திருக்கிறது. மேலும், இலவச ஸ்பெக்ட்ரத்தை நம்பி இருக்கும் டெரஸ்ட்ரியல் ஃபைபர் அல்லது கேபிள் டிவி நெட்வொர்க்குகளின் முதலீடுகள் இதனால் தவிர்க்கப்படும், ஆகவே, டிடிஎச் ஆபரேட்டர்கள் கட்டண விலக்குகளை பெறக்கூடாது என்று ஜியோ திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

இப்படி இருக்கையில், ஏர்டெல் நிறுவனத்துக்கு நிகராக டிடிஎச் சேவைகளை வழங்கி வரும் டாடா பிளே (TATA Play) நிறுவனும், டிடிஎச் ஆபரேட்டர்களுக்கான விதிக்கப்படும் உரிமக் கட்டணங்கள் தள்ளுபடியை செயல்படுத்தவும், 20 சதவீதத்துக்கும் அதிகமாக சேவைகள் ஒளிபரப்பு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

ஆகவே, இப்போது, டாடா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் கை கோர்த்துள்ளன. இதனால், ஜியோ நிறுவனம் தனித்துவிடப்பட்டிருக்கிறது. முன்னதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆனது, டிடிஎச் உரிமை கட்டணத்தை 8 சதவீதத்தில் இருந்து குறைக்கவும், அதை 3 சதவீதமாக மாற்றவும் பரிந்துரைந்துள்ளது. இதன் மூலம் சேவை அதிகரிக்கும்.

கேபிள் டிவி மற்றும் ஐபிடி சேவைகளுக்கு நிகராக டிடிஎச் சேவைகள் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டிடிஎச் சேவைகள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்து டிடிஎச் சேவைகளின் உரிமை கட்டணங்கள் மாற்றப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know Bharti Airtel And TATA Joined Oppose Reliance Jio Over Who Pay DTH License Fees
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X