வீட்டுக்கு வீடு வருது.. கேபிள் டிவியை தூக்கும் 4K பாக்ஸ்.. மாதம் ரூ.899 போதும்.. வருடாந்திர சேவை.. OTT வருது!
வீட்டில் இருக்கும் டிவிக்கு 4K செட்-டாப் பாக்ஸ், மொபைல் டேட்டாவுக்கு வை-பை ரூட்டர், வாய்ஸ் கால்களுக்கு லேண்ட்லைன் கனெக்சன் போன்ற மொத்த சலுகைகளையும் வெறும் ரூ 899 திட்டத்தில் கொடுத்தால் கேபிள் டிவி கனெக்சனை கட் செய்யக்கூட யாரும் தயங்க மாட்டார்கள்.
ஜியோவுக்கு அடுத்தப்படியாக பிராட்பேண்ட் டேட்டா, ஓடிடி சந்தா மற்றும் டிடிஎச் மூலம் லைவ் டிவி சேனல்களை வழங்குவதில் ஏர்டெல் நிறுவனம் பின்னிப்பெடல் எடுக்கிறது. இப்போது, மாதம் ரூ 899 செலவில் 350 டிவி சேனல்கள், 13 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கனெக்சனை வருடம் முழுவதும் கொடுக்கிறது.

ஏர்டெல் ரூ 899 திட்ட விவரங்கள் (Airtel Rs 899 Plan Details): இதுவொரு ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டமாகும். இந்த திட்டத்தில் ஃபைபர் (Fiber), லேண்ட்லைன் (Landline) மற்றும் டிடிஎச் (DTH) கனெக்சன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வை-பை டேட்டா, டிவி சேனல்கள் சலுகை கிடைக்கும்.
அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற்றால், 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா சேவை கிடைக்கிறது. இதுவொரு அன்லிமிடெட் டேட்டா சேவை திட்டமாகும். ஆனால், 1 டிபி டேட்டாவுக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா சேவை கிடைக்கும்.
இதற்காக கொடுக்கப்படும் வை-பை ரூட்டர் (Wi-Fi Router) மூலம் மொபைல், லேப்டாப், டிவி போன்ற டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். அதேபோல லேண்ட்லைன் கனெக்சன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

இதுபோக ஓடிடி சலுகைகளும் இருக்கிறது. ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது. அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் கீழ் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமாமேக்ஸ் (ManoramaMax) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
இதில் எபிக் ஆன் (Epic ON), ஷீமாரூமீ (ShemarooMe), டிவோ (Divo), ஹோய்சோய் (HoiChoi), டோலிவுட் (Dollywood), நம்மஃபிளிக்ஸ் (Nammaflix), கிளிக் (Klikk), ,ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), டாக்குபே (Docubay), ஹங்கமாபிளே (HungamaPlay) ஆப்களின் சந்தாவும் அடங்குகிறது. இப்போது, 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் வழங்கப்படும் சலுகைகளை பார்ப்போம்.
இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 350+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் எச்டி மற்றும் எஸ்டி டிவி சேனல்களும் அடங்கும். மேற்கூறிய சலுகைகளில் லேண்ட்லைன் கனெக்சனுக்கான இன்ஸ்ட்ரூமென்ட்டுக்கு (Instrument For Landline) தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதேபோல இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தை முதலில் பெறும் கஸ்மடர்கள் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் ஆகியவற்றை ஒரே தவணையில் செலுத்தினால் மட்டுமே சேவை வழங்கப்படும். அதோடு ரூ.1000 இன்ஸ்டாலேஷன் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதுவே 12 மாத வேலிடிட்டியை தேர்வு செய்தால், இன்ஸ்டாலேஷன் கட்டணம் கழிக்கப்படும்.
இந்த திட்டத்தை பெற்று வேலிடிட்டி முடிந்தவிட்டால், அதற்கு பிறகு திட்டத்துக்கு மாதம் எவ்வளவு கட்டணமோ அதை மட்டுமே செலுத்தி சேவையை பெற்று கொள்ளலாம். ஒரே திட்டத்தில் டிவிகளுக்கு சேனல்கள் மற்றும் ஓடிடி, மொபைல் டேட்டாவுக்கு வை-பை, வாய்ஸ் கால்களுக்கு லேண்ட்லைன் கனெக்சன் வேண்டுமென்றால், மலிவான விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








