Home
News

இது வீடா இல்ல அரண்மனையா.! சுந்தர் பிச்சை வாழும் சொகுசு வீடு குறித்து தெரியவந்த ஆச்சரிய தகவல்!

கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் கூகுள் நிறுவனம் புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் சுந்தர் பிச்சை. இவர் கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆல்பாபெட் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கடந்த 2022-ம் ஆண்டில் மொத்த ஊதியமாக சுமார் $226 மில்லியன் (சுமார் 1800 கோடி) பெற்றுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது அங்கே சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட 800 மடங்கும் அதிகமாகும்.

சுந்தர் பிச்சை வாழும் சொகுசு வீடு குறித்து தெரியவந்த ஆச்சரிய தகவல்!

மேலும் சுந்தர் பிச்சையின் ஊதியத்தில் சுமார் 218 மில்லியன் டாலர் பங்கு ஆப்ஷன்களும் அடங்கும் என்று கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுந்தர் பிச்சைக்கும் கூகுளின் சராசரி ஊழியருக்கும் இடையே உள்ள மிகப் பெரிய ஊதிய இடைவெளி என்பது அங்கே இருக்கும் ஊதிய சமத்துவமின்மை குறித்த விவாதத்தை இணையத்தில் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் சுந்தர் பிச்சையின் ஆடம்பரமான இல்லம் குறித்த சில முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி,அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா எனும் பகுதியில் இருக்கும் சுந்தர் பிச்சை இலத்திற்கு லாஸ் அல்டோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இது மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இவரது வீடு சுற்றுலாத்தலம் போல் உள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு ரம்மியமான காட்சிகள் சூழ அமைந்திருக்கிறது. மேலும் இந்த வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு வாங்கினார் சுந்தர் பிச்சை. இதன் இந்திய மதிப்பு 10,215 கோடி ரூபாய் ஆகும்.

சுந்தர் பிச்சை வாழும் சொகுசு வீடு குறித்து தெரியவந்த ஆச்சரிய தகவல்!

அதேபோல் இந்த வீட்டின் உள்கட்டமைப்பு முழுவதும் சுந்தர் பிச்சையின் மனைவி விருப்பப்படியே வடிவமைக்கப்பட்டதாம். மேலும் இதன் உள்ளவடிவமைப்பு செலவு மட்டும் ரூ.49 கோடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வீட்டில் ஒரு குளம், ஒரு மது பாதாள அறை, உடற்பயிற்சி கூடம், ஒரு இன்ஃபினிடி குளம், ஒரு ஸ்பா, சோலார் பேனல்கள், லிஃப்ட் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் போன்ற பல்வேறு நவீன மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் பல இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஐஐடியில் படித்த சுந்தர் பிச்சை, கல்லூரி தோழியான அஞ்சலி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல் சுந்தர் பிச்சைக்கு இருக்கும் பல சொத்துக்களில் மிகவும் பிரதானமானது இந்த கலிஃபோர்னியா வீடுதானாம்.

ஆனாலும் கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொத்தாக வேலையை விட்டு தூக்கியது. இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக LinkedIn போன்ற வலைதளப்பக்கங்களில் தங்கள் பணிநீக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பல பகிரங்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சுந்தர் பிச்சை வாழும் சொகுசு வீடு குறித்து தெரியவந்த ஆச்சரிய தகவல்!

மேலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனத்தை எதிர்த்து அதன் ஊழியர்கள் பலரும் சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை கடிதமும் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் கூகுள் நிறுவனம் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

photo courtesy: financialexpress.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know about Sundar Pichai's extravagant California home and lifestyle? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X