ஏர்டெல் நிறுவனமே பொறாமைப்படும் Jio-வின் இந்த திட்டங்களைப் பற்றித் தெரியுமா? அதிக நன்மைகள்.!

|

ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரும். தற்போது சில நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் திட்டங்களை வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ நிறுவனம்

அதிலும் ஏர்டெல் நிறுவனம் கூட கம்மி விலையில் அதிக வேலிடிட்டி உடன் சிறந்த டேட்டா நன்மைகளை வழங்குவதில்லை. ஆனால் ஜியோ நிறுவனம் மிகவும் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் கம்மி விலையில் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 40 மொபைல்கள் திருட்டு! மொத்தமும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்.. நடந்தது என்ன?ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 40 மொபைல்கள் திருட்டு! மொத்தமும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்.. நடந்தது என்ன?

 ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு நல்ல திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. பிரபல iPhone மீது ரூ.19,000 ஆபர்.. Flipkart-க்கு ஒரு பெரிய வணக்கத்தை போடு!உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. பிரபல iPhone மீது ரூ.19,000 ஆபர்.. Flipkart-க்கு ஒரு பெரிய வணக்கத்தை போடு!

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

மொத்த போனும் க்ளோஸ்! ரூ.25,000க்கு வளைந்த டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா உடன் Realme 10 Pro+மொத்த போனும் க்ளோஸ்! ரூ.25,000க்கு வளைந்த டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா உடன் Realme 10 Pro+

முதல் இடம்

முதல் இடம்

அதேபோல் சமீபத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்ட தகவல் என்னவென்றால், 4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

போச்சு.! 500 மில்லியன் WhatsApp பயனர் தகவல் அம்பலம்.! இந்தியர்களுக்கும் ஆபத்து.! என்ன செய்ய போறீங்க?போச்சு.! 500 மில்லியன் WhatsApp பயனர் தகவல் அம்பலம்.! இந்தியர்களுக்கும் ஆபத்து.! என்ன செய்ய போறீங்க?

20.3 எம்பிபிஎஸ்

கடந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்குச் சராசரியாக 20.3 எம்பிபிஎஸ் என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்க வேகத்தில் தனது முன்னிலையை ஜியோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம் பதிவிறக்க வேகத்தில் 15எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 4.5எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார்! உளவு பார்க்கப்படும் ரகசிய மெசேஜ்கள்.. உடனே உங்க போனில் உஷார்! உளவு பார்க்கப்படும் ரகசிய மெசேஜ்கள்.. உடனே உங்க போனில் "இதை" செய்யவும்! இல்லை என்றால்?

6.2எம்பிபிஎஸ் ஆகக் குறைந்துவிட்டது

பதிவேற்ற வேகத்தை பொருத்தவரை ஜியோ சற்று பின்தங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஜியோவின் பதிவேற்ற வேகம் 6.4எம்பிபிஎஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 6.2எம்பிபிஎஸ் ஆகக் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் இந்தப் பிரிவில் ஜியோ நிறுவனம் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Do you know about Jio prepaid plans that offer 1GB data daily? Plans available within Rs.500 :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X