ஆல்ஃப்ர்டு நோபல் பற்றி தெரியுமா? இவர் பெயரில் நோபல் பரிசு எப்படி உருவானது தெரியுமா?

|

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மருத்துவம், இயற்பியல், வேதியியல்,பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன.

 24காரட் தங்கத்தில் மூலாம் பூசப்பட்ட

அதாவது 24காரட் தங்கத்தில் மூலாம் பூசப்பட்ட பதக்கம், பாரட்டுரையுடன் கூடிய பட்டயம், சுமார் 8கோடி ரூபாய் பரிசு, ஆயிரத்துக்கும் குறைவானனோர் அடங்கியிருக்கும் பட்டியிலில் பெயர், உலகளாவிய புகழ். இத்தகைய மரியாதைக்குரிய ஒரு பரிசை உருவாக்கி அமைத்தியின் தூதுவராகவும், நல்லிணக்கத்தை விரும்புபவராகவும் தற்காலத்தில் அறியப்படும் ஆல்ஃப்ரடு நோபல் ஒரு விஞ்ஞானி ஆவார்.

ராணுவத்திலும் சுரங்கம்

ஆல்ஃப்ரடு நோபல் ராணுவத்திலும் சுரங்கம் உள்ளிட்ட கட்டுமானத் துறையிலும் பயன்படுத்தப்படும் 150-க்கும் மேற்பட்ட வெடிபொருள்களை கண்டுபிடித்தவர். இவற்றில் அதிகமாக பொதுவெளியில் அறியப்படுதவதுதான் டைனமைட். உண்மையில் டைனமைட்டை விடவும் சக்திவாய்ந்த பல வெடிப்பொருள்களை ஆல்ஃப்ரடு நோபல் கண்டுபிடித்திருக்கிறார்.

Google எச்சரிக்கை: பிளே ஸ்டோரிலிருந்து 34 மால்வேர் ஆப்ஸ்கள் நீக்கம்! உங்க போனில் இவை இருக்கக்கூடாது!Google எச்சரிக்கை: பிளே ஸ்டோரிலிருந்து 34 மால்வேர் ஆப்ஸ்கள் நீக்கம்! உங்க போனில் இவை இருக்கக்கூடாது!

நோபல் நடத்திய ஆய்வின்போது,

ஆல்ஃப்ரடு நோபல் நடத்திய ஆய்வின்போது, பெரும் விபத்து நடந்தது. அதில் தனது சகோதரர் எமிலையும் பல தொழிலாளர்களையும் பறிகொடுத்தார். பல நாட்டு அரசுகள் இவரது வெடிபொருள்களைத் தடைசெய்தன. இருந்தபோதிலும் தலைமறைவாக இருந்தபடியே பலவெடிபொருள்களை உருவாக்கினார். இவற்றுக்குக் காப்புரிமை பெற்றதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பெரும்பணம் இவருக்கும்
கிடைத்தது.

 ஆல்ஃப்ரடு நோபல்

1864-ம் ஆண்டு பிறந்த ஆல்ஃப்ரடு நோபல் ஸ்வீடனைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். 1888-ம் ஆண்டில் சகோதரர் லுட்விக் நோபலின் மரணத்தின்போது பல செய்திதாள்கள் ஆல்ஃப்ரடு நோபல் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதில் ஒரு பிரெஞ்சு இதழ் மரணத்தின் தூதர் இறந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டது. இறப்பதற்கு முன்னரே தனது இரங்கல்; குறிப்பை கண்ட ஆல்ஃப்ரடு நோபலின் மனம் வெடித்தது. வரலாற்றில் இப்படியொரு மோசமான மனிதனாக
தாம் பதிவு செய்யப்படக்கூடாது என்று விரும்பினார்.

ம்பாதித்த தனது சொத்து

கொடூரமான வழியில் சம்பாதித்த தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவுசெய்வது என்று முடிவெடுத்தார்.
அதற்காக பல உயில்களை எழுதினார். அதில் கடைசி உயில்தான் இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் நோபல் பரிசுபற்றியது. தனது ஒட்டுமொத்த சொத்தின் 94சதவீதத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆசையை தூண்டிய விளம்பரம்: 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி- எப்படி தெரியுமா?ஆசையை தூண்டிய விளம்பரம்: 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி- எப்படி தெரியுமா?

பரிசுக்காக ஒதுக்கப்பட்ட

இந்த நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் 1896-ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக நோபல் இறந்தார், பின்பு அவர் விருப்பப்படி 1901-ம் ஆண்டு முதல் 5பிரிவுகளில் நோபல பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.

 ரிக்ஸ் வங்கி

1969-ம் ஆண்டு முதல் ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தை கொண்டு நோபலின் பெயரிலேயே பொருளாதரத்துக்கான பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது சர்ச்சை, மகிழ்ச்சி,ஏமாற்றம், புறக்கணிப்பு என பல பண்புகளைக் கொண்டிருந்தாலும் தற்போது உலகிலேயே மிகவும் மதிக்கப்படும் விருதாகநோபல் பரிசு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Do you know about Alfred Nobel and Do you know how the Nobel Prize came to be in his name?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X