ஜனவரி 1 முதல் புது ரூல்ஸ்.. பேங்கில் ரூ.50000 மேல போகாது.. பணம் போட முடியாது.. உடனே இதை பண்ணுங்க.. என்ன வருது?
பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) வழியாக பணத்தை டெபாசிட் செய்தல் மற்றும் ரூ.50,000 மேல் பணத்தை அனுப்புதல் ஆகியவற்றில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன. இதனால், பான் கார்டு மற்றும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் செயல்முறையில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஏனென்றால், டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது. ஆகவே, இ-பில்லிங் (e-Filling) போர்டலுக்கு சென்று பான் கார்டுடன் ஆதார் எண்ணை பலர் இணைத்திருப்பார்கள். இருப்பினும், லிங்க் ஸ்டேட்டஸை செக் செய்திருக்க மாட்டார்கள்.

பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் இருந்தால், பான் கார்டு ஆதார் இணைப்பு நிராகரிக்கப் பட்டுவிடும். ஆகவே, பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் செயல்முறையை செய்துவிட்டாலும், அந்த ஸ்டேட்டஸை செக் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. இந்த ஆதார் பான் லிங்க் ஸ்டேட்டஸ் (Aadhaar PAN Link Status) செயல்முறையை சுலபமாக செய்து முடிக்கலாம்.
ஆதார் பான் லிங்க் ஸ்டேட்டஸ் செயல்முறை (Aadhaar PAN Link Status Process)
1. இ-பில்லிங் போர்ட்டலுக்கு (e-Filing Portal) சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் (Link Aadhaar Status) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, பான் கார்டு நம்பர் மற்றும் ஆதார் கார்டு நம்பர் கேட்கப்படும். இதை கொடுத்தால் போதும், பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2. ஒருவேளை புதிய பான் கார்டுக்கு அப்ளை செய்திருந்தால், ஆதார் நம்பரை மட்டுமே வைத்து பான் கார்டு ஸ்டேட்டஸ் செயல்முறையை செய்து கொள்ளலாம். இதற்கும் இ-பில்லிங் போர்ட்டலுக்கு (e-Filing Portal) சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் இ-பான் (E-PAN) விருப்பம் இருக்கும் இதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, 2 விருப்பம் காண்பிக்கப்படும்.
3. இதில் செக் ஸ்டேட்டஸ்/டவுன்லோட் இ-பான் (Check Status/Download E-PAN) விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, ஆதார் நம்பர் கொடுக்க வேண்டும். இதை செய்தவுடன் அந்த ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த நம்பரை கொடுத்தால் போதும், பான் கார்டு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் மற்றும் பான் விவரங்கள் சரிபார்த்தல்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முன்பாக இரண்டிலும் இருக்கும் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து கொள்ள வேண்டும். இதை சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே பான் ஆதார் இணைப்பு செயல் முறையை செய்ய வேண்டும். இல்லையென்றால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஆகவே, இணைக்கப்படாது. டிசம்பர் 31 ஆம் தேதி கெடுவும் முடிந்துவிடும். இந்த கெடு முடிந்தால், பான் கார்டு இல்லாமல் ரூ.50,000 மேல் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. அதேபோல பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்திலும் ரூ.50,000 மேல் அனுப்ப முடியாது. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பேங்க் கஸ்டமர்கள் உள்ளாக வேண்டி இருக்கும். ஆகவே, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இதை செய்து முடியுங்கள்.


Click it and Unblock the Notifications








