Home
News

அடுத்த வேட்டு.. உங்க போன்ல 2 சிம் இருக்கா.. 3 மாசத்துக்கு அப்புறம் 1-தான்.. டிஆக்டிவேட்டுக்கு எல்லாமே ரெடி!

ஜியோ வருகைக்கு பிறகும் ஏர்டெல், வோடபோன் ஐடியா என்று மற்றொரு சிம் கார்ட்டை 2ஆவதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே சிம் கார்டுக்கு மாற்றும் கட்டாயமானது, அடுத்த 3 மாதங்களில் நடக்க இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை வருவதற்கு முன்பெல்லாம், 2 சிம் கார்டுகள் பயன்படுத்துவது சாதாரணமாக இருந்தது. ஒரு சிம் கார்டில் சலுகைகள் முடிந்தவுடன் அடுத்த சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்வது வழக்கமாக இருந்தது. ஏனென்றால், அப்போது இன்கம்மிங் கால்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

அடுத்த வேட்டு.. உங்க போன்ல 2 சிம் இருக்கா.. 3 மாசத்துக்கு பிறகு 1தான்!

ஆனால், ஜியோ 4ஜி சேவைகள் இலவசமாக கொடுக்கப்பட்டதில் இருந்து, மற்ற நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல், இன்கம்மிங் கால்களுக்கும் சிம் ஆக்டிவேட் திட்டங்களை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால், 2 சிம் கார்டுகளுக்கும் கட்டாயம் ரீசார்ஜ் செய்யும் நிலை வந்துவிட்டது.

இப்படி இருந்தும், 2ஆவது சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போதும்கூட இருக்கிறார்கள். இவர்களின் வயிற்றில் புளியை கரைக்கும்படி அடுத்த 3 மாதங்களில் மிகப்பெரும் சம்பவம் நடக்க இருக்கிறது. ஏனென்றால், ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மட்டுமல்லாமல், ஜியோ நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தப் போகிறது.

எவ்வளவு கட்டம் உயரும்? 2021ஆம் ஆண்டு டிசம்பரில் டெலிகாம் கட்டணங்கள் கடைசியாக உயர்த்தப்பட்டன. அப்போதைக்கு, அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அதிவேக டேட்டா பயன்பாடு மற்றும் வேகத்துக்கு வாடிக்கையாளர்கள் பழகி இருந்ததால், அத்தியாவாசிய தேவை போல அது பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைய உயர்வு அப்படி இருக்கப்போவதில்லை.

சொல்லப்போனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு இருக்கலாம். அதேபோல 5ஜி சேவைக்களுக்கான திட்டங்களும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த உயர்வு 20-25% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, உங்களது சிம் கார்டை ஆக்டிவில் வைத்திருக்கும் கட்டணத்தில் நேரடி உயர்வை ஏற்படுத்த போகிறது.

உண்மையில், இப்போது பெரும்பாலான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோவின் சிம் ஆக்டிவுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ.150ஆக இருக்கிறது. இந்த விலையே அடித்தட்டு மக்களுக்கு மிகவும் விலை உயர்ந்தாக இருக்கிறது. இந்த கட்டணத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதிகரிப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே, உங்களது சிம் கார்டை ஆக்டிவில் வைத்திருக்கு நீங்கள் செலவு செய்யும் ரூ.150 இலிருந்து ரூ.180-ரூ.200 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், 2 சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களது மாதாந்திர செலவில் மாற்றத்தை எதிர்கொள்ள போகிறார்கள். இது 2ஆவது சிம் பயன்பாட்டையும் குறைக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், ஜியோ 4ஜி சிம் வாடிக்கையாளர்களிடையே பரவலாக்கப்பட்டபோது, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் சிம் கார்டுகள் 2ஆவது சிம் கார்டுகளாக இருந்தன. ஆனால், ஜியோ நாளடைவில் கம்மியான விலைக்கு திட்டங்களை கொடுத்ததால், 2ஆவது சிம் கார்டுகளாக இருந்தவை காணமல் போயின. அதைத்தொடர்ந்து, 3ஜி, 2ஜி சிம் கார்டுகளும் குறைந்துவிட்டன.

ஆகவே, 4ஜி சேவைக்களுக்கான போட்டிக்கு மத்தியில் இந்த கட்டண உயர்வு வர இருக்கிறது. ஏற்கனவே, அமல்படுத்தப்பட்ட கட்டண உயர்வில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட ஜியோவானது, மிகவும் மலிவு விலையில் திட்டங்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அடுத்த கட்டண உயர்விலும் நீடிக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Do you know 2 SIM Card Customers Are Switch To 1 SIM Card After Tariff Hike in Next 3 Months
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X