Home
News

உங்க பழைய Phone-ஐ வீட்டில சும்மா வச்சுருக்கீங்களா? அப்போ உடனே இப்படி செய்யுங்க!

உங்களிடம் மொத்தமாக எத்தனை பழைய ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது? கட்டாயமாக, எல்லோரும் ஒரே போனில் இத்தனை காலத்தை நகர்த்தியிருக்க முடியாது. நிச்சயமாக உங்களிடம் குறைந்தது 1 பழைய ஸ்மார்ட்போனாவது இருக்க வேண்டும் தானே! உங்கள் பழைய போனை எப்படி பயனுள்ளதாய் மாற்றலாமென்று பார்க்கலாமா?

ஸ்மார்ட்போன்கள் மனிதனுடன் மிக நெருக்கமான ஒரு பந்தத்தை உருவாக்கிவிட்டன. உண்மையை சொல்லப் போனால், பிரிக்கவே முடியாத அளவிற்கு ஒரு உறுதியான பந்தத்தை உருவாக்கிவிட்டது. பொண்டாட்டி ஊருக்கு சென்றுவிட்டால் கூட, கணவன்மார்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், ஒரு நாள் மொபைல் (Mobile) இல்லாமல் இருக்க சொன்னால், சுருண்டுவிடுவார்கள். அப்படி ஒரு சிறந்த துணையாக ஸ்மார்ட்போன்கள் இப்போது மாறிவிட்டது.

உங்க பழைய Phone-ஐ வீட்டில சும்மா வச்சுருக்கீங்களா? இப்படி செய்யுங்க!

இந்த உதாரணம் கணவன் மனைவிக்கு மட்டுமானதல்ல, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருடனும் இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) தவிர்க்க முடியாத ஒரு உறவாகவும், துணையாகவும் மாறிவிட்டது என்பதே உண்மையாக இருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். உங்களிடம் பழைய போன் (Old Phone) இருக்கிறதா? அதை தூசி தட்டி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உங்கள் வீட்டில் வீணாய் அலமாரியிலும், பீரோ லாக்கரிலும் உறங்கிக் கொண்டிருக்கும் பழைய போன்களை கையில் எடுத்துக்கொள்ளத் தயாராகுங்கள். பல காரணங்களுக்காக உங்களுடைய போனை நீங்கள் மாற்றியிருக்கலாம். சிறிய கோளாறு இருக்கும் பழைய போன்கள் முதல், சரி செய்யவே முடியாது என்று முற்றிலுமாக கைவிடப்பட்ட போன்கள் என்று பல பழைய போன்கள் உங்களிடம் இருக்க வாய்ப்புள்ளது.

உங்க பழைய Phone-ஐ வீட்டில சும்மா வச்சுருக்கீங்களா? இப்படி செய்யுங்க!

சர்வீஸ் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புதிய போன்களை நீங்கள் வாங்கி இருக்கலாம். ஆனால், உங்கள் பழைய போனை வீணடிக்காமல், எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. பழுதான போன்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்தானது. இது மோசமான எலக்ட்ரானிக் கழிவாக உருமாறி, திடீரென எதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதனால், இவற்றைச் சரியாகக் கையாள்வது மிகவும் முக்கியமானது.

உங்கள் பழைய போனில் பேட்டரி, ஸ்பீக்கர், மைக், டிஸ்பிளே, கேமரா என்ற இதில் பிரச்சினை இருந்தாலும் சரி, உங்கள் பழைய போனை வீணடிக்காமல் அதை எப்படி பயனுள்ளதாய் மாற்றலாம் என்று பார்க்கலாம். ஒருவேளை உங்களுடைய பழைய போனை பயன்படுத்தவே முடியாது என்ற நிலையில் இருந்தால் கூட, அதை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இதை படித்துவிட்டு உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.

சிறு சிறு பிரச்சனை அல்லது டிஸ்பிளே பிரச்சினைகளால் வேலை செய்யாத உங்களுடைய பழைய போனை நீங்கள் ஸ்டோரேஜ் டிவைஸாக பயன்படுத்தலாம். நீங்கள் தற்சமயம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போனில் ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்பட்டால், உங்கள் பழைய சாதனத்தின் ஸ்டோரேஜ்ஜை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பிரைவேட் தகவலை பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யப் பழைய போன்கள் ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.

உங்க பழைய Phone-ஐ வீட்டில சும்மா வச்சுருக்கீங்களா? இப்படி செய்யுங்க!

சுத்தமாக இனி என்ன செய்தாலும் வேலையே செய்யாது என்ற நிலையில் இருக்கும் போனை, ஆன்லைனில் விற்பனை செய்வது சிறப்பானதாகவும். இதற்காகவே, இப்போது இணையதளத்தில் சில பக்கங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. வேலையே செய்யாத போனையும் காசுக்கு வாங்கும் வலைத்தளங்களும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. பழைய போனை வீட்டில் சும்மா வைத்திருப்பதை விட விற்று பணமாக்குவது சிறப்பானது.

அடுத்த முறை, நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது எக்ஸ்சேஞ்ச் முறையில் பழைய ஸ்மார்ட் போனை எக்ஸ்சேஞ் செய்வது சிறப்பானது. இது உங்களுடைய புதிய போனின் விலையை கணிசமாக குறைக்க உதவும். உங்கள் பழைய போனில் கேமரா சரியாக வேலை செய்கிறது என்றால், அதை செக்யூரிட்டி கேமராவாகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இதை எதையுமே செய்ய உங்களுக்கு விருப்பமில்லை என்றால், பழைய போனை நன்கொடையாக மற்றவருக்கு வழங்கலாம். மீண்டும் சொல்கிறோம், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளை வீட்டை வைப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லதல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you just keep your old phone at home Then do this immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X