Home
News

BSNL சிம் இருக்கா? உங்க சிம்-ல் BSNL 4G ஆக்டிவேட் ஆகியிருக்கா? உடனே செக் பண்ணுங்க.. இல்லாட்டி இதை செய்யணும்..

இந்தியாவில் உள்ள பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கு இப்போது ஆங்காங்கே பல இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவை அணுக கிடைக்கிறது. இருப்பினும், அதே பகுதில் உள்ள சிலருக்கு 4ஜி சேவை அணுக கிடைக்காமல் இருக்கிறது. இது பெரும்பாலும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளில் (BSNL SIM Card) 4ஜி சேவைக்கான அணுகல் ஆக்டிவேட் செய்யப்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் பயனராக இருந்து, உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு இருக்கிறது என்றால், உங்கள் சிம் 4ஜி இணக்கமானதா? இல்லையா? என்பதை இப்போது ஆன்லைனில் எளிமையாக கண்டறியலாம்.

பிஎஸ்என்எல் சிம் கார்டு பயனர்கள் இப்போது எளிமையாக ஆன்லைன் மூலம் அவர்களுடைய சிம் கார்டு பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? (How to check if your BSNL SIM card is 4G enabled) என்பதை சில நொடிகளில் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்கள் சிம் கார்டில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கத்தையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.

BSNL சிம் இருக்கா? உங்க சிம்-ல் BSNL 4G ஆக்டிவேட் ஆகியிருக்கா?

உங்களிடம் BSNL சிம் இருக்கா? அப்படியானால் உங்கள் சிம்-ல் BSNL 4G ஆக்டிவேட் ஆகியிருக்கா? இல்லையா?

மத்திய அரசுக்கு சொந்தமா பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) டெலிகாம் நிறுவன தான் இப்போது இந்தியாவின் மிகவும் மலிவான திட்டங்களை வழங்கும் ஒரே ஒரு டெலிகாம் நிறுவனமாக திகழ்கிறது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட மாற்றத்தினால், இறுதி இடத்தில் தத்தளித்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி முன்னிலையை அடைந்துள்ளது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடுமையான விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்களின் நம்பிக்கையை அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றுள்ளது என்பதே உண்மையாகும். இத்தனை நாட்களாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை குறைகூறி வந்தவர்கள் கூட, சத்தமே இல்லாமல் பிஎஸ்என்எல் சிம் (BSNL SIM) வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர் என்பதே நிஜமாகும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மக்கள் இப்போது நம்புவதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கிறது. இதில் முதல் காரணம், பிஎஸ்என்எல்லின் ரீசார்ஜ் திட்டங்கள் எல்லாம் மலிவு விலையில் அதிக நன்மையை வழங்குகின்றன. மற்றொரு காரணம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் இப்போது இந்தியாவில் பல இடங்களில் கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் இப்போது 25,000 மொபைல் சைட்களில் 4ஜி கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாறுமாறு வேகத்தில் உருவாகும் BSNL 4G நெட்வொர்க்:

அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுக்க இன்னும் 1,00,000 புதிய மொபைல் டவர்களை நிறுவவுள்ளது என்றும் அறிவித்துள்ளது. இதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருவதாகவும் பிஸ்னல் தெரிவித்துள்ளது. இதற்காக பிஎஸ்என்எல்லுக்கு ரூ. 13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் 75,000 டவர்களை நிறுவி 4ஜி சேவை கிடைக்க செய்யுமென்று கூறியுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டை பொறுத்த வரையில், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தை முழுமையான 4ஜி வட்டமாக மாற்றும் என்று நம்பிக்கையாக கூறியுள்ளது. ராஜஸ்தான் வட்டத்தில் இப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவை அணுக கிடைக்கிறது.

உங்கள் BSNL SIM கார்டில் 4G சேவை இன்னும் ஆக்டிவேட் ஆகவில்லையா? அப்போ உடனே இதை செய்யணும்:

இருப்பினும், சிலருக்கு 4ஜி சேவையை அணுகுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு சிம் கார்டுகள் ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது. உங்களிடம் உள்ள பிஎஸ்என்எல் சிம் கார்டில் 4ஜி சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய புதிய ஆன்லைன் தளத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் மொபைல் எண் விபரங்களை உள்ளிட்டு சப்மிட் மட்டும் கொடுத்தால் போதும், உங்கள் சிம் கார்டில் 4ஜி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அத்தளம் காண்பித்துவிடும்,

இதை சரி பார்ப்பதற்கு, பிஎஸ்என்எல் பயனர்கள் https://rajasthan.bsnl.co.in/4G/getmobileinfo.php என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். பிறகு, அதில் உங்களுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் மொபைல் நம்பரை (BSNL Mobile Number) உள்ளிட வேண்டும். இறுதியில் Submit என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த திரையில் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டில் 4ஜி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது காண்பிக்கப்படும். இது ராஜஸ்தான் வட்டத்திற்கு உரியது. விரைவில் தமிழக வட்டத்திற்கான இணையப்பக்கம் விரைவில் திறக்கப்படும்.

ஒருவேளை உங்கள் சிம் கார்டில் 4ஜி சேவை ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், அருகில் உள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் (CSC) சென்று புதிய சிம் கார்டு கேட்கலாம் அல்லது உங்கள் சிம் கார்டிலேயே 4ஜி சேவையை ஆக்டிவேட் செய்து தரக்கோரி கேட்கலாம். அருகில் CSC சென்டர் இல்லை என்றால், BSNL ரீடைலர் கடைகள் மூலமாகவும் 4ஜி சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you have a BSNL SIM? Is BSNL 4G activated on your SIM? Check immediately Otherwise do this
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X