Home
News

Google அறிவுரை., அவரே சொல்லிட்டாரு: கொரோனா வேணாமா., கூகுள் சொன்ன முக்கிய 5 விஷயம் இதை பண்ணுங்க!

கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் கூகுள் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய 5 விஷயங்களை அறிவித்துள்ளது. இதை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுரைவிடுத்துள்ளது.

கொரோனா பீதி

கொரோனா பீதி

கொரோனா அச்சம் உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பீதி தலையெடுத்து உள்ளது. அதேபோல் கொரோனா பராவமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா விழிப்புணர்வு தகவல்களும் பெருமளவு பரப்பப்பட்டு வருகிறது.

ஹுபெய் மாகாணம் வுகான் நகர்

ஹுபெய் மாகாணம் வுகான் நகர்

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏராளமானோருக்கு கொரோனா

ஏராளமானோருக்கு கொரோனா

சில தினங்களுக்கு முன்பு கிடைத்த தகவலின் படி ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா

பல்வேறு நாடுகளில் கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

31 மாகாணங்களுக்கு பரவிய கொரோனா

31 மாகாணங்களுக்கு பரவிய கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கூட்டம் கூடும் இடமான ஷாப்பிங் மால், தியேட்டர் என அனைத்தையும் மூடுவதற்கு அந்தந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தி வருகிறது.

கூகுள் டுவிட்டர் அறிவுரை

கூகுள் டுவிட்டர் அறிவுரை

கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் கூகுள் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய 5 விஷயங்களை அறிவித்துள்ளது. இதை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுரை விடுத்துள்ளது. இதை செய்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் நிறுவனம் விடுத்த அறிவுரை

கூகுள் நிறுவனம் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருத்தல், தோளும் கையும் இணையும் பகுதியில் முகத்தை வைத்துக்கொண்டு இருமச் செய்தல், முகத்தைத் தொடாதிருத்தல், பிறரிடம் இருந்து 3 அடிகள் தள்ளியித்தல் & உடல்நிலை சரியில்லையெனில் வீட்டிலேயே ஓய்வெடுத்தல் உள்ளிட்டவற்றை வலியிறுத்தி ட்வீட் பதிவிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Do these five simple things to help stop coronavirus google advice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X