உஷார்.. 30 செக்கென்ட்ல உடனே ரூ.1000 UPI.. GPay, PhonePe யூசர்களுக்கு NPCI எச்சரிக்கை!
என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவுகள் கழகம் (National Payments Corporation of India) ஆனது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), சூப்பர் மணி (Super Money) உட்பட அனைத்து வகையான யுபிஐ பேமண்ட் ஆப்களையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் புதிய எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.
லட்சக்கணக்கான பயனர்கள், விரைவான மற்றும் எளிதான முறையை தேர்ந்தெடுப்பதன் விளைவாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (Digital transactions) தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. கூடவே இணையவழி குற்றங்கள் அல்லது மோசடிகளும் (cybercrimes or scams) அதிகரித்து கொண்டே போகின்றன.

அவைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க யுபிஐ ஆப் பயனர்கள் எப்போதும் விழிப்புடனும், தகவலறிந்தும் இருக்க வேண்டும். இதனொரு பகுதியாக பயனர்களின் பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்திற்காக (safer digital experience) என்பிசிஐ என்கிற இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் அறிவுறுத்தும் ஐந்து முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
1. எந்தவொரு கட்டணத்தையும் அவசரமாக செலுத்த வேண்டாம்: ""30 செக்கென்ட் டைம் குள்ள ரூ.1000 அனுப்புங்க", "20 செக்கென்ட் குள்ள யுபிஐ பின் நம்பர் சொல்லுங்க" என்று.. யாராவது உங்களை விரைவாக பணம் செலுத்த சொன்னாலோ அல்லது உங்கள் விவரங்களை அவசரமாக பகிரச் சொன்னாலோ, ஒரு கணம் அவகாசம் கொடுங்கள்.
யுபிஐ வழியாக பணம் அனுப்ப.. உடனுக்குடன், அவசர அவசரமாக பணம் அனுப்ப வேண்டும் என்கிற எந்த காட்டாயம் இல்லை. அப்படி யாரேனும் செய்ய சொன்னால் - நிதானமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சரிபார்த்துவிட்டு மீண்டும் அழைப்பதாக கூறவும். போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் யுபிஐ சேவையின் கீழ் நடக்கும் பெரும்பாலான மோசடிகள், பயனர்களை அவசப்படுத்துவதால், அவர்களை யோசிக்க விடாமல் செய்வதால் தான் நடக்கிறது.
2. பேமண்ட் நோட்டிஃபிக்கேஷன்களை இயக்கி வைத்து, அவற்றை அடிக்கடி சரிபார்க்கவும்: உங்கள் கட்டணங்களுக்கான எஸ்எம்எஸ் மற்றும் ஆப் அறிவிப்புகளை (SMS and App Notifications) இயக்கி வைத்துக்கொள்ளவும். பண பரிமாற்றம் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பையும் கவனமாக படிக்கவும். ஏதேனும் தவறாக தோன்றினால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது பேமண்ட் ஆப்பை தொடர்பு கொள்ளவும்.
3. பணம் செலுத்தும் முன் எப்போதும் சரிபார்க்கவும்: எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன், திரையில் தோன்றும் பெயரை சரிபார்க்கவும். அது நீங்கள் பணம் செலுத்த விரும்பும் நபர் அல்லது நிறுவனம்தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உறுதிப்படுத்த சில வினாடிகள் எடுத்துக்கொள்வது தவறுகளை தவிர்க்க உதவும்.
4. நம்பகமான பேமண்ட் ஆப்கள் மற்றும் இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்: அதிகாரப்பூர்வ மற்றும் நன்கு அறியப்பட்ட ஆப்கள் அல்லது இணையதளங்கள் (Official Apps and Websites) மூலம் மட்டுமே பணம் செலுத்துங்கள். உங்களுக்கு தெரியாத அல்லது நீங்கள் நம்பாத நபர்கள் அனுப்பும் ஆப்பை பதிவிறக்கம் (Download) செய்யவோ அல்லது இணைப்புகளை கிளிக் (Click Links) செய்யவோ வேண்டாம்.
5. உங்கள் பின் அல்லது ஒடிபி-ஐ யாருடனும் பகிர வேண்டாம்: உங்கள் யுபிஐ பின் (UPI PIN Number), ஒடிபி (OTP - One Time Password) அல்லது வங்கி விவரங்கள் (Bank Details) ஆனது தனிப்பட்டவை மற்றும் ரகசியமானவைகள் ஆகும். வங்கி (Bank), காவல்துறை (Police) அல்லது ஏதேனும் அரசு அலுவலகத்தை (Government Office) சேர்ந்தவர்கள் என்று சொன்னாலும், அவற்றை ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம்.


Click it and Unblock the Notifications