50 ரூபாய் தான்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. BSNL போட்ட எக்ஸ் பதிவு!
இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் ஆன பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது, தான் வழங்கும் ஒரு குறிப்பிட்ட கால சலுகையை (Limited time offer) பயனர்கள் தவறவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.
என்ன சலுகை? இது மிக குறைந்த செலவில்.. இன்னும் சொல்லப்போனால் ரூ. 00-க்கும் குறைவான விலையில், முதல் ரீசார்ஜுடன் கூடிய பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) வழங்கும் ஒரு சலுகையாகும். இதன் மூலம் புதிய சந்தாதாரர்களை சேர்க்க முடியும் என்றும், அதன் மூலம் தனது சந்தை பங்கை அதிகரிக்கமுடியும் என்றும் பிஎஸ்என்எல் நம்புகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதால், 4ஜி சேவைகளை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும் பிஎஸ்என்எல்-க்கு போட்டி கடுமையாகி உள்ளது. அதனால்தான், பிஎஸ்என்எல் விலை சார்ந்த உத்தியை கையாள்கிறது.
குறிப்பிட்ட காலச் சலுகையாக கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் ரூ.51 திட்டம்: எக்ஸ் (X) தளத்தில் பதிவிடப்பட்ட தகவலில், ரூ.51 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Rs.51 Prepaid Plan) மூலம் ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் பயனர்களை கேட்டு கொண்டுள்ளது.
இத்திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், மறுபடியும் ஒரு புதிய சிம் கார்டுடன் இத்திட்டத்தை தனியாக வாங்க வேண்டியிருக்கும். பிஎஸ்என்எல்-இன் இந்த ரூ.51 சலுகையின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:
- இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டு
- வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (Unlimited voice calling)
- தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB data)
- தினமும் 100 எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS)
- 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity)
முன்னரே குறிப்பிட்டபடி இத்திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனருக்கு புதிய இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் வழங்கப்படும். இச்சலுகை ஆகஸ்ட் 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும். இச்சலுகையை பெற விரும்பினால், அருகிலுள்ள பிஎஸ்என்எல் கிளை அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மையங்களை அணுகலாம்.
பிஎஸ்என்எல்-இன் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரிடமி இருந்தும் சிம் கார்டுடன் இந்த சலுகையைப் பெற முடியும். இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றாலும், வழக்கம்போல பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது இந்த சலுகையை இன்னும் சில நாட்கள் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம்.
ரூ.259-க்கு அறிமுகமான புதிய பிராட்பேண்ட் திட்டம்: சமீபத்தில் பிஎஸ்என்எல் (BSNL) ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.259 க்கு புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்து இருந்தது. இந்தியாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும், மிகவும் பேஸிக் ஆன பிராட்பேண்ட் பிளான் கூட மாதத்திற்கு குறைந்தது ரூ.400 வரை செலவாகும் சூழ்நிலையில் இது வந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.259 விலையில் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மலிவு விலையிலான சலுகைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதும், அவர்களை தக்கவைத்துக்கொள்வதுமே இந்த திட்டத்தின் மற்றும் பிஎஸ்என்எல்-ன் முக்கிய நோக்கமாகும்.
பிஎஸ்என்எல்-இன் ரூ.259 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.259 பிராட்பேண்ட் திட்டம் நாட்டின் குறிப்பிட்ட நகரங்கள் அல்லது பகுதிகளில் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் 700ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. அத்துடன், பயனர்களுக்கு 25 எம்பிபிஎஸ் வேகமே கிடைக்கிறது.
வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (voice calls) மற்றும் பிரசார் பாரதி டிவி (Prasar Bharti TV),வேவ்ஸ் ஆப் (Waves App), பிஎஸ்என்எல் ஸ்கைப்ரோ ஐஎப்டிவி (BSNL Skypro IFTV) ஆகியவற்றின் மூலம் இலவச டிவி சேனல்களை பார்க்கும் வசதியும் இத்திட்டத்தில் அடங்கும். இது நிறுவனத்தின் ஒரு சிறப்பு கிராமப்புற பிராட்பேண்ட் திட்டமாகும். ஆனாலும் இது அனைத்து கிராமப்புற நகரங்களிலும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications