எக்காரணத்தை கொண்டும் உங்க Phone-ல் இன்ஸ்டால் செய்ய கூடாத 3 App-கள்! ஏற்கனவே யூஸ் பண்ணா உடனே DELETE பண்ணிடுங்க!

|

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், எந்த காரணத்தை கொண்டும் நீங்கள் டவுன்லோட் / இன்ஸ்டால் செய்ய கூடாத 3 ஆபத்தான ஆப்கள் (Dangerous Apps) உள்ளன.

அதென்ன ஆப்கள்? அதை ஏன் இன்ஸ்டால் செய்ய கூடாது? மீறினால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

சுருக்கமாக CyRC என்று அழைக்கப்படும் Synopsys Cybersecurity Research Centre (சினாப்ஸிஸ் சைபர்செக்யூரிட்டி ரிசர்ச் சென்டர்) ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவர்களுக்கான ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் அணுக கிடைக்கும் 3 ஆப்களின் பெயர்களை பட்டியலிட்டு, எக்காரணத்தை கொண்டும் அவைகளை இன்ஸ்டால் / டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

அதென்ன ஆப்கள்?

அதென்ன ஆப்கள்?

CyRC-யின் கூற்றுப்படி, டவுன்லோட் அல்லது இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று பட்டியலிடப்பட்டுள்ள அந்த 3 ஆப்களுமே மிகவும் ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்கள் (Dangerous Android Apps) ஆகும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 3 ஆப்களுமே ரிமோட் மவுஸ் மற்றும் கீபோர்ட் வகைகளை சேர்ந்த ரிமோட் ஆப்கள் (Remote Apps) ஆகும்.

எல்லாவற்றை விடவும் மோசமான ஒரு செய்தி உள்ளது!

எல்லாவற்றை விடவும் மோசமான ஒரு செய்தி உள்ளது!

மிகவும் ஆபத்தான ஆப்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த 3 ஆப்களும் - கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக - 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டுள்ளது. இது மிகவும் மோசமான ஒரு தகவல் ஆகும்!

ஏனென்றால், இந்த 3 ஆப்களையும் யாரெல்லாம் இன்ஸ்டால் செய்து இருக்கிறார்களோ, அவர்களுக்கும் அவர்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது. ஏனெனில், இந்த மூன்று 'ரிமோட்' ஆப்கள் உங்களுக்கான ரிமோட் கண்ட்ரோலை மட்டுமெல்ல.. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை திருடும் ஹேக்கர்களுக்கும் கூட ரிமோட் கண்ட்ரோலை வழங்கும்.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

இன்ஸ்டால் செய்ய கூடாத அந்த  3 ஆப்கள்!

இன்ஸ்டால் செய்ய கூடாத அந்த 3 ஆப்கள்!

எக்காரணத்தை கொண்டும் கீழ்வரும் 3 ஆப்களையும் இன்ஸ்டால் / டவுன்லோட் செய்ய வேண்டாம். இந்த ஆப்களுக்கு பின்னால் ஆபத்தை பற்றி தெரியாமல், அவைகளை ஏற்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தாலும் கூட, அதை உடனே அன்இன்ஸ்டால் / டெலிட் செய்யும்படி பரிந்துரைக்கிறோம். அதே ஆப்களின் பெயர்கள் இதோ:

1. லேஸி மவுஸ் (Lazy Mouse)
2. டெலிபேட் (Telepad)
3. பிசி கீபோர்ட் (PC Keyboard)

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!

பிளே ஸ்டோரில் அணுக கிடைக்கும் எல்லா ஆப்களுமே பாதுகாப்பான ஆப்கள் தான் என்று கூகுளால் கூட உறுதியளிக்க முடியாது.

எனவே நீங்கள் தான் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் மற்றும் பிளே ஸ்டோர் வழியாக நீங்கள் எந்தவொரு ஆப்பை இன்ஸ்டால் செய்தாலும் சரி.. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் உள்ளன!

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

அதென்ன அறிகுறிகள்?

அதென்ன அறிகுறிகள்?

- ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்யும் முன், அந்த ஆப்பின் ரிவ்யூக்களை படிக்க மறக்க வேண்டாம். மோசமான ரிவ்யூஸ் இருந்தால், அதை புறக்கணிக்கவும்!

- அதே போல குறிப்பிட்ட ஆப் ஆனது மொத்தம் எத்தனை பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சரிபார்க்கவும். மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே அதை டவுன்லோட் செய்து இருந்தால், அந்த ஆப்பை கைவிடவும்!

எல்லாவற்றிற்கும் 'ஓகே' கொடுக்க வேண்டாம்!

எல்லாவற்றிற்கும் 'ஓகே' கொடுக்க வேண்டாம்!

- குறிப்பிட்ட ஆப்பின் விளக்கத்தையும் (App description) படிக்கவும். அது நம்பகமானதாக இருந்தால் மட்டுமே அதை இன்ஸ்டால் செய்யவும்.

- கடைசியாக நீங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப் ஆனது, உங்கள் ஸ்மார்ட்போனில் எதையெல்லாம் அணுக வேண்டும் என்று கோரும் பெர்மிஷன்களை (Permissions) சரிபார்க்கவும். கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றிற்கும் 'ஓகே' கொடுக்க வேண்டாம்!

Best Mobiles in India

English summary
Do Not Install These 3 Remote Mouse And Keyboard Apps In Your Android Phone All Are Dangerous Apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X