Home
News

அடிக்கடி Google Pay, PhonePe-வில் அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ணுவீங்களா? பண்ணாதீங்க.. பிரபல வங்கி வார்னிங்!

டெல்லியை சேர்ந்த ஒருவர் மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப் மூலம் 37 இலக்க பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸை (37 digit bank account balance) கண்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து, அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பேங்க் ஆப் (Mobile Bank App) அல்லது நெட் பேங்கிங் (Net Banking) தளங்களை பயன்படுத்துமாறு கோடக் வங்கி (Kotak Bank) அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்த ஒரு அறிக்கையில், வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவிலான பேலன்ஸ் இருப்பதாக வெளியான ஊடக அறிக்கைகள் தவறானவை என்று கோடாக் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் கோடாக் வங்கியின் சொந்த டிஜிட்டல் சேனல்களை பயன்படுத்தி அக்கவுண்ட் விவரங்களை சரிபார்க்கமாறும் தனது வாடிக்கையாளர்களை வலியுறுத்தியது.

Google Pay, PhonePe-வில் பேலன்ஸ் செக் பண்ணாதீங்க.. பிரபல வங்கி!

கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, பெரிய அளவிலான பேங்க் பேலன்ஸை காட்டியது நவி யுபிஐ ஆப் (Navi UPI App) ஆகும். வாடிக்கையாளர்கள் இதுதோன்ற மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப்பை (Third Party UPI App) நிறுவும் போது, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை (Mobile Number Registered With Bank) சரிபார்த்து, யுபிஐ பின்னை (UPI PIN) அமைப்பதன் மூலம் வங்கி கணக்குகளை இணைக்கிறார்கள்.

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) வழங்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (Application Programming Interfaces - API) மூலம் இந்த ஆப் ஆனது வாடிக்கையாளரின் வங்கியுடன் இணைகிறது. ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு மெய்நிகர் கட்டண முகவரி (Virtual Payment Address) ஒதுக்கப்பட்டுள்ளது, இது கணக்கு விவரங்களுக்கான ப்ராக்ஸியாக (Proxy) செயல்படுகிறது.

எந்தவொரு பரிவர்த்தனை அல்லது பேலன்ஸ் விசாரணைக்கும், யுபிஐ ஆப் ஆனது என்பிசிஐ-யின் மைய சுவிட்சுக்கு (NPCI's central switch) கோரிக்கையை அனுப்புகிறது; இது அதை வங்கிக்கு அனுப்புகிறது. வங்கி கோரிக்கையை செயல்படுத்தி.. பணம் செலுத்துவதற்காக கணக்கில் இருந்து டெபிட் செய்வது அல்லது நிகழ்நேர பேலன்ஸ் செக்கப் போன்றவைகளை வழங்குகிறது.

இப்படியாக. என்பிசிஐ, யுபிஐ மற்றும் வங்கிகள் என அனைத்தும் தெளிவாக ஒன்றாக தெளிவாக கட்டமைக்கப்பட்டு இருந்தாலும் கூட தங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பேங்க் ஆப் அல்லது நெட் பேங்கிங் தளங்களை பயன்படுத்துமாறு கோடக் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்த விளக்கத்தில் "நவி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் அமைப்புகள் என்பிசிஐ நெறிமுறைகளுடன் முழுமையாக இணங்குகின்றன. இந்த ஒழுங்கின்மை எங்கள் உள்கட்டமைப்பிற்கு வெளியே தோன்றியது, மேலும் இதுபோன்ற முரண்பாடுகள் எங்கள் ஆப்பில் வெளிப்படுவதை தடுக்க கூடுதல் சரிபார்ப்புகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் பயனர்களுக்கு தொடர்ச்சியான நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்." என்று கூறியுள்ளது.

சமீபத்தில் (ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல்) யுபிஐ ஆப் வழியாக பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் (Daily Balance Check Limit) ஆனது ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே என்று லிமிட் செய்யப்பட்டு இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதேபோல மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் (Linked Bank Account View Limit) ஆனதும் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே என்றும் லிமிட் செட் செய்யப்பட்டுள்ளது.

இப்படி யுபிஐ தொடர்பான சிக்கல்கள், கட்டுப்பாடுகள் எலாம் ஒருபக்கம் இருக்க என்பிஐசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ சேவையானது, கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 19.47 பில்லியன் பரிவர்த்தனையை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இது ரூ.25.08 லட்சம் கோடியாகும். இது 2025 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.25.14 லட்சம் கோடிக்கு பிறகான இரண்டாவது அதிகபட்ச தொகையாகும்.

ஆனால் செய்யப்பட்ட பரிவர்த்தனை அளவின் அடிப்படையில், கடைசியாக பதிவான அதிகபட்ச எண்ணிக்கை - மே மாதத்தில் பதிவான 18.67 பில்லியன் ஆகும். இதன் அடிப்படையில் ஜூலை மாதம் யுபிஐ சேவையில் புதிய சாதனை (19.4 பில்லியன் பரிவர்த்தனைகள்) பதிவாகியுள்ளது. இத்தனைக்கும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆட்டோபே வசதியின் (Autopay Feature) கீழ் ஆட்டோமெட்டிக் ஆக பணம் டெபிட் ஆவதற்கான நேரங்கள் 3 வகையான காலக்கெடுவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Check Account Balance Using Third Party UPI App Use Mobile Banking App Net Banking Kotak Bank
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X