வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!

|

New Video Call Scam Alert: தினுசு தினுசா உக்காந்து யோசிப்பாங்களோ.! நாளுக்கு நாள் டிஜிட்டல் முறைப்படி நிகழும் மோசடிகளும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் போகிறது.

இதுவரை இல்லாத வகையில், புதிதாக வீடியோ கால்ஸ் அழைப்பு மூலம் ஒரு மோசடி (Video Call Scam) இப்போது இந்திய மக்களை அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக, இந்த மோசடி இளம் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களே உஷார்.! வீடியோ கால் மூலம் புது மோசடி.!

மக்களே உஷார்.! வீடியோ கால் மூலம் புது மோசடி.!

டேட்டிங் ஆப்ஸ் (Dating Apps) அல்லது சமூக வலைத்தளங்களில் (Social Media) மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபரா நீங்கள்? அப்படியானால், இனி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

காரணம், இப்போது "செக்ஸ்டார்ஷன்" (Sextortion) என்ற பெயரில் ஒரு புதிய வீடியோ கால் மோசடி வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது.

இந்த மோசடியில் சிக்கியவர்களை மோசடிக்காரர்கள் பிளாக்மெயில் செய்து, மிரட்டி பணத்தைப் பறித்து வருகின்றனர்.

போன் நம்பர், இன்ஸ்டாகிராம் ஐடி, பேஸ்புக் ஐடி கேட்டால் ஜாக்கிரதை.!

போன் நம்பர், இன்ஸ்டாகிராம் ஐடி, பேஸ்புக் ஐடி கேட்டால் ஜாக்கிரதை.!

டேட்டிங் ஆப்ஸ் அல்லது உங்கள் சமூக வலைத்தளம் வழியாக உங்களுக்கு முன் பின் தெரியாத நபர்கள் யாராவது தொடர்பு கொண்டு, உங்களிடம் ஆசை வார்த்தை பேசி உங்கள் போன் நம்பர், இன்ஸ்டாகிராம் ஐடி, பேஸ்புக் ஐடி போன்ற விபரங்களை நாசுக்காகச் சேகரிக்க முயன்றால் கவனமாக இருந்துகொள்ளும் படி எச்சரிக்கப்படுகிறது.

உங்கள் நண்பர் போலவோ அல்லது நண்பரின் நண்பர் போலவோ உங்களைத் தொடர்புகொள்வார்கள் ஜாக்கிரதை.!

ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

ஆசையாய் கொஞ்சி பேசினாலும் சிக்கிவிடாதீர்கள்.!

ஆசையாய் கொஞ்சி பேசினாலும் சிக்கிவிடாதீர்கள்.!

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண் போல பாவித்தும், நீங்கள் பெண்ணாக இருந்தால், ஆண் நண்பர் போலப் பாவித்தும் மோசக்காரர்கள் உங்களிடம் ஆசை வார்த்தை பேசி, அவர்களின் வலையில் சிக்க வைக்கப் பார்ப்பார்கள் என்பதை மறக்காதீர்கள்.

உங்களுக்கு வரும் வீடியோ அழைப்பை நீங்கள் அட்டென்ட் செய்ததும், மறுமுனையில் ஒரு பெண் வேக வேகமாக அவரின் ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ஆபாச வீடியோ காலில் இருந்தது போல் ரெக்கார்ட்.!

ஆபாச வீடியோ காலில் இருந்தது போல் ரெக்கார்ட்.!

என்ன நடக்கிறது என்றே உங்களுக்குப் புரியாது. இன்னும் சிலர் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அழைப்பைத் துண்டிக்காமல் செயல்பாட்டில் வைத்திருப்பீர்கள்.

ஆனால், அந்த வீடியோ அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்ட முதல் நொடியில் இருந்து, மோசடிக்காரர்கள் உங்களை அந்த பெண்ணுடன் ஆபாச வீடியோ காலில் இருந்தது போல் ரெக்கார்ட் செய்துவிடுவார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த மோசமான செக்ஸ்டார்ஷன் வலையில் நீங்களும் சிக்கிவிடுவீர்கள்.

உண்மையான பெண்ணே இல்லை.! ஆனா மாட்டிப்பீங்க.!

உண்மையான பெண்ணே இல்லை.! ஆனா மாட்டிப்பீங்க.!

வீடியோ காலில் இருக்கும் அந்த பெண் நிர்வாணமாகும் வரை அழைப்பு துண்டிக்கப்படாமல் செயல்பாட்டில் இருக்கும். மறுமுனையில் இருக்கும் பெண் உண்மையானவர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுவரை நடக்கும் அணைத்து விஷயங்களையும் மறுமுனையில் மோசடிக்காரர்கள் உங்கள் முகத்துடன் ரெக்கார்ட் செய்துகொள்வார்கள்.

வீடியோ கால் இணைப்பு தீடீரென துண்டிக்கப்படும். சில நிமிடங்களில் உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு (WhatsApp Number), அடையாளம் தெரியாத ஒரு புதிய எண்ணில் இருந்து ஒரு வீடியோ பைல் அனுப்பப்படும்.

அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

ஆபாச வீடியோ காலில் நீங்கள் இருந்தது போல சித்தரிக்கப்படுவீர்கள்.!

ஆபாச வீடியோ காலில் நீங்கள் இருந்தது போல சித்தரிக்கப்படுவீர்கள்.!

அதை நீங்கள் திறந்து பார்த்ததும் அதிர்ந்து போவீர்கள்.! காரணம், அதில் ஒரு பெண்ணுடன் ஆபாச வீடியோ காலில் நீங்கள் இருந்தது போல காண்பிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் பதறும் பொழுது, உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் ஒரு குறிப்பிட்ட தொகையை உடனே கொடுக்காவிட்டால், இந்த வீடியோ உங்களுடைய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மற்றும் வாட்ஸ்அப் கணக்கில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பப்படும் என்ற மிரட்டல் செய்தி கிடைக்கும்.

கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை லீக் செய்வாங்களா? மிரட்டல்.!

கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை லீக் செய்வாங்களா? மிரட்டல்.!

இப்போது உங்களுக்கு செக்ஸ்டார்ஷன் வலையில் சிக்கியது ஓர் அளவிற்குப் புரியத் துவங்கியிருக்கும்.

மோசக்காரர்கள், உங்களிடம் ரூ.5000 கொடு அல்லது ரூ. 2000 கொடு என்று பேரம் பேசுவார்கள்.

ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பாவிட்டால், இந்த வீடியோ அனைத்து சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிடப்படும் என்று உங்களை பிளாக்மெயில் செய்வார்கள்.

சிலர் பயந்து, இதிலிருந்து தப்பிக்க அவர்கள் கேட்கும் தொகையை ஆன்லைன் மூலம் ட்ரான்ஸ்பர் செய்வார்கள்.

உங்களால் தப்பிக்க முடியாது.! இது ஒருமுறை மிரட்டல் அல்ல.. தொடரும்.!

உங்களால் தப்பிக்க முடியாது.! இது ஒருமுறை மிரட்டல் அல்ல.. தொடரும்.!

அதற்குப் பின்னரும் உங்களால் இந்த மோசடி வலையில் இருந்து தப்பிக்க முடியாது.

காரணம், அடுத்து வாரம் ஒரு முறை அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் - மீண்டும் மோசடிக்காரர்கள் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டலை தொடர்வார்கள்.

இன்ஸ்டால்மெண்ட் போல தொடர்ந்து உங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சுரண்டல் செய்வார்கள்.

இதனால், இது போன்ற சிக்கலில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

WhatsApp-ல் இருந்தபடி JioMart-ல ஆர்டர் பண்ணலாமா? இனி கடைக்கு போக சொல்லி சண்டை வராது.!WhatsApp-ல் இருந்தபடி JioMart-ல ஆர்டர் பண்ணலாமா? இனி கடைக்கு போக சொல்லி சண்டை வராது.!

இந்த வீடியோ கால்ஸ் மோசடியில் சிக்கி இதுவரை என்னவெல்லாம் நடந்தது தெரியுமா?

இந்த வீடியோ கால்ஸ் மோசடியில் சிக்கி இதுவரை என்னவெல்லாம் நடந்தது தெரியுமா?

இந்த வீடியோ கால் மூலம் நடைபெறும் செக்ஸ்டார்ஷன் மோசடியில், மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெரியவர்கள், பெண்கள் என்று பலரும் சிக்கித் தவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி தொடர்பாக இந்தியாவில் ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளது.

ஒரு சிலர் இந்த மோசடியால், மானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட வழக்குகளும் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை.! இப்படி உங்களுக்கும் நடந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை.! இப்படி உங்களுக்கும் நடந்தால் என்ன செய்ய வேண்டும்?

தெரிந்தோ, தெரியாமலோ இது போன்ற சிக்கலில் நீங்கள் சிக்கிக்கொண்டால், முதலில் அந்த அழைப்பைக் கட் செய்ய வேண்டும்.

உடனே வாட்ஸ்அப் பயன்பாட்டில் இருக்கும் Report அம்சத்தை கிளிக் செய்து, அந்த வாட்ஸ்அப் கணக்கை ரிப்போர்ட் செய்துவிட்டு, அந்த எண்ணை ப்லோக் (Block) செய்துவிடுங்கள்.

பின்னர், உங்களுக்கு என்ன நடந்தது என்பதை சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளிக்க மறக்காதீர்கள்.

இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? இனி கவனமாக இருக்கனும்.!

இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? இனி கவனமாக இருக்கனும்.!

இது போன்ற தேவை இல்லாத சிக்கலில் இருந்து தப்பிக்க, தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை கிளிக் செய்து பேசத் துவங்காதீர்கள்.

சில நொடிகள் நீங்கள் பேசினால் கூட, அதை முழு ஆபாச வீடியோவிற்கும் மோசக்காரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

டேட்டிங் தளங்கள் மூலம் உங்களிடம் பழகும் நபர்களிடம் உங்கள் சமூக வலைத்தள விபரம், மொபைல் நம்பர் போன்ற விஷயங்களைப் பகிராமல் பாதுகாப்பாக இருங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Do Not Answer Video Call From Unknown Number This New Scam Will Loot Your Money Beware

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X