இவன் வேற மாதிரி ட்ரோன்.. பல நாட்டில இவனுக்கு லைசென்ஸ் கூட தேவையில்லை.. வானத்தில விளையாடலாம்.. DJI Flip விலை?
டிஜேஐ (DJI) என்ற பிரபலமான ட்ரோன் (drone) தயாரிப்பு நிறுவனம் மிகவும் வித்தியாசமான மற்றும் புதுமையான வடிவமைப்பை கொண்ட புதிய டிஜேஐ ஃபிலிப் என்ற ட்ரோன் (DJI Flip Drone) மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ட்ரோன் சாதனம் காம்பெக்ட் (compact) மற்றும் லைட் வெயிட் எடையுடன் (light weight) போல்டபில் டிசைனை (foldable design) கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் விற்பனை செய்யும் மற்ற ட்ரோன்களுடன் ஒப்பிடுகையில் இதில் பல சூப்பரான அம்சம் நிர்நம்பியுள்ளது. ஏன் இதை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, தோற்றத்தில் சிறியதாக இந்த புதிய DJI Flip ட்ரோன் காட்சியளித்தாலும், இது செய்யும் செய்கைகள் பெரியளவில் இருக்கிறது. காரணம், DJI நிறுவனம் இந்த புதிய போல்டபில் ட்ரோனில் பெரிய சென்ஸார்களுடன் (large sensors) 100fps உடன் 4K வீடியோ ரெக்கார்டிங் (up to 4K 100fps video recording) ஆதரவை வழங்குகிறது.

இவன் வேற மாதிரி Drone.. பல நாட்டில இவனுக்கு லைசென்ஸ் கூட தேவையில்லை:
புதிய DJI Flip Drone ஏன் மிகவும் ஸ்பெஷல் ஆன ட்ரோன் சாதனமாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்த புதிய ட்ரோனை DJI நிறுவனம் அதன் DJI Neo மாடலின் சிம்பிளிசிட்டி வடிவமைப்புடன் DJI Mini மாடலின் போல்டபில் வடிவமைப்புடன் இணைத்து உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, இது முதல் ட்ரோன் பயனர்கள் (first time drone users) மற்றும் அனுபவம் இல்லாத ட்ரோன் பயனர்கள் கூட இதை எளிமையாக பயன்படுத்த அனுமதிக்கிறது.
இந்த ட்ரோன் 3 ஆக்சிஸ் கிம்பால் வீடியோ ஸ்டேபிலைசேஷன் (three axis gimbal video stabilisation) ஆதரவுடன் வருகிறது. இத்துடன் DJI Flip டிவைஸ் LiDAR சிஸ்டம் உடன் வருகிறது. இது எதிரில் வரும் தடைகளை தானாக அடையாளம் கண்டு அதற்கு ஏற்றார் போல் ட்ரோனை தானாக இயக்கும் திறன் கொண்டது. இந்த ட்ரோன் குவாட் ப்ரொபெல்லர் சிஸ்டத்துடன் (quad propeller sytem) வருகிறது.
டிஜேஐ ஃபிலிப் ட்ரோன் (DJI Flip Drone):
இதன் 4 ஃபேன்களும் பாதுகாப்பு கவசங்களுடன் (4 fan protection cover) வருகிறது. இதனால், நீங்கள் யார் மீதாவது இடித்து விபத்தை (accidental damage) ஏற்படுத்திவிடுவீர்கள் என்ற பயம் வேண்டாம். அல்லது உங்கள் ட்ரோன் எதாவது பொருளில் இடித்து சேதப்படுமோ என்ற பயமும் தேவையில்லை என்று DJI தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த பாதுகாப்பு கவசம் நான்கு ப்ரொபெல்லர் ஃபேன்களையும் பாதுகாப்பாக வைக்கிறது.
இந்த DJI Flip ட்ரோன் வெறும் 249 கிராம் எடையுடன் (weight) வருகிறது. ஆகையால், இதன் பார்க்க விட பல நாடுகளில் நீங்கள் தனிப்பட லைசன்ஸ் பெர்மிட் (license permit) எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இந்த ட்ரோன் எங்குவேண்டுமானாலும் பறக்கவிடலாம் என்ற ஸ்பெஷாலிட்டியை இந்த சாதனம் கொண்டுள்ளது. இதில் 6 ஷூட்டிங் மோட் (6 shooting mode) வழங்கப்பட்டுள்ளது.
DJI Flip Drone விலை:
இது 3110mAh பேட்டரி பேக் (battery pack) உடன் மணிக்கு 26 மீட்டர் பயணிக்கும் வேகத்துடன் (26 MPH speed) வருகிறது. இது கோக்க்ல்ஸ் N3 (Goggles N3) மற்றும் மோஷன் 3 கண்ட்ரோலர் ஆதரவுடன் இணக்கமானது. இதன் ஆரம்ப விலை $439 டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.37,963 மட்டுமே. இது தற்போது அமெரிக்கா போன்ற சந்தைகளில் களமிறக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








