Home
News

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை! 10 நாள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவில் அறிமுகமான Dizo Watch!

டிசோ நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்வாட்ச் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இணைத்திருக்கிறது. D சீரிஸ் கீழ் Dizo Watch D Ultra மற்றும் Watch D Pro ஆகிய ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் ப்ரீமியம் டிசைன்கள், பெரிய டிஸ்ப்ளேக்கள், டிசோ டி1 சிப்செட்கள் மற்றும் டிசோ ஓஎஸ் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

10 நாள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவில் அறிமுகமான Dizo Watch!

டிசோ வாட்ச் டி அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச்

டிசோ வாட்ச் டி அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒரு செவ்வக டயல் உடன் வெளியாகி இருக்கிறது. 368x448 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 500 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்ட 1.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது Dizo D1 சிங்கிள் சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது மேம்பட்ட பேட்டரி ஆயுள், நம்பகமான இணைப்பு, மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் ரத்து மற்றும் மேம்படுத்தப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

10 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

டிசோ வாட்ச் டி அல்ட்ரா ஆனது 150க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்களைக் கொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட இன்டோர் மற்றும் அவுட்டோர் விளையாட்டு முறைகள் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் இதயத் துடிப்பு, SpO2, கலோரிகள் கவுண்டர், ஸ்டெப் கவுண்டர் போன்ற அனைத்து அத்தியாவசிய சென்சார்களையும் இது கொண்டிருக்கிறது. இதில் வலுவான மற்றும் நம்பகமான இணைப்பு ஆதரவுக்கு என ப்ளூடூத் வி5.2 ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. வாட்ச் முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரம் ஆகும். இரண்டு மணி நேரமா என்று ஆச்சரியப்பட வேண்டாம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

10 நாள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவில் அறிமுகமான Dizo Watch!

டிசோ வாட்ச் டி ப்ரோ சிறப்பம்சங்கள்

DIZO வாட்ச் டி ப்ரோ வாட்ச்கள் அலுமினிய கட்டமைப்புடன் கூடிய தோற்றத்தை கொண்டிருக்கிறது. இதில் அமோலெட் டிஸ்ப்ளே இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவுடன் கூடிய 1.85 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது டிசோ டி1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் மேம்பட்ட இணைப்பு உள்ளிட்டவைகளை உறுதி அளிக்கிறது. ப்ளூடூத் மூலம் வாய்ஸ் கால் ஆதரவையும் வழங்குகிறது.

பல ஆரோக்கிய அம்சங்கள்

ஸ்மார்ட்வாட்ச்சில் 150+ வாட்ச் முகங்கள் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங்கிற்காக 100க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள் ஆதரவைக் கொண்டுள்ளது. ஹீத் டிராக்கிங் அம்சங்களுடன் கூடிய இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவுகள் (SpO2), ஸ்லீப்பிங் கண்காணிப்பு, கலோரி கவுண்டர், ஸ்டெப் கவுண்டர் போன்ற பல ஆரோக்கிய அம்சங்கள் இதில் இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜில் ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணிநேரம் ஆகும் என கூறப்படுகிறது.

டிசோ வாட்ச் டி அல்ட்ரா, வாட்ச் டி ப்ரோ: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

டிசோ வாட்ச் டி அல்ட்ரா மற்றும் வாட்ச் டி ப்ரோவின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், டிசோ வாட்ச் டி அல்ட்ரா விலை ரூ.3,299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ஜனவரி 12 2023 முதல் விற்பனைக்கு கிடைக்கும். டிசோ வாட்ச் டி ப்ரோ விலை ரூ.2699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜனவரி 17, 2023 முதல் வாங்கக் கிடைக்கும். இரண்டு வாட்ச்களும் இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் வாங்கக் கிடைக்கும்.

Fire Boltt ஸ்மார்ட்வாட்ச்

சமீபத்தில் Fire Boltt நிறுவனம் நிஞ்சா காலிங் ப்ரோ ப்ளஸ் வாட்ச்சை அறிமுகப்படுத்தியது. இந்த வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிளாக், ப்ளூ, க்ரீன், கோல்ட் பிளாக், பிங்க், சில்வர் மற்றும் டார்க் க்ரே வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Ninja Pro Plus ஆனது 240*260 பிக்சல்கள் தீர்மானத்துடனான பெரிய டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அனைத்தும் மலிவு விலை..

ப்ளூடூத் அழைப்பு அம்சத்துடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்சை நீங்கள் வாங்க விரும்பினால், ஃபயர் போல்ட் உங்களுக்கு பல விருப்பங்களை வழங்குகிறது. ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்களின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்வாட்சும் உச்ச விலை கொண்டது கிடையாது.

ரூ.1,799 மட்டுமே

Fire Boltt Ninja Pro Plus விலை ஆனது ரூ.1,799 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது பிளாக், ப்ளூ, க்ரீன், கோல்ட் பிளாக், பிங்க், சில்வர் மற்றும் டார்க் க்ரே வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. நிஞ்சா ப்ரோ ப்ளஸ் ஆனது அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Dizo Watch D Ultra, Watch D Pro Launched in India at Rs.2699! Premium Look, Dizo D1 Chipset!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X