ஓடியாங்க ஓடியாங்க.., 1 ரூபாய் இருந்தால் போதும்: பிளிப்கார்ட்டில் DIZO GoPods D, DIZO Wireless வாங்க வாய்ப்பு.!

|

ரியல்மி டெக்லைஃப் (Realme TechLife) எக்கோஸிஸ்டம் அமைப்பின் கீழ் உள்ள புது பிராண்டான டிஸோ (DIZO), செவ்வாயன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பிளிப்கார்ட் பயனர்கள் டிஸோ கோ-பாட்ஸ் டி (DIZO GoPods D) மற்றும் டிஸோ வயர்லெஸ் (DIZO Wireless) சாதனங்களை வெறும் 1 ரூபாய் செலவில் தங்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி எப்படி இதை வெறும் 1 ரூபாய் செலவில் நமக்குக் கிடைக்கும் படி உறுதி செய்வது என்பதைப் பார்ப்போம்.

1 ரூபாய் செலவில் புதிய DIZO GoPods D மற்றும் DIZO Wireless சாதனங்களை முன் பதிவு செய்யலாம்

1 ரூபாய் செலவில் புதிய DIZO GoPods D மற்றும் DIZO Wireless சாதனங்களை முன் பதிவு செய்யலாம்

DIZO நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, பிளிப்கார்ட் பயனர்கள் இன்று முதல் துவங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த புதிய DIZO GoPods D மற்றும் DIZO Wireless சாதனங்களை வெறும் 1 ரூபாய் செலவில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் டே சேல்ஸ் விற்பனையில் களமிறங்கும் இந்த சாதனத்திற்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதனால், ஒவ்வொரு பயனருக்கும் இந்த யூனிட் கிடைப்பதை நிறுவனம் இந்த வழியில் உறுதிசெய்துள்ளது.

பிளிப்கார்ட்டில் நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டே சேல்ஸ் விற்பனை

பிளிப்கார்ட்டில் நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டே சேல்ஸ் விற்பனை

ஜூலை 21 ஆம் தேதி முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை பிளிப்கார்ட் பயனர்கள் இந்த சாதனத்திற்கான முன்பதிவைப் பதிவு செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த முன்பதிவுகள் வரும் ஜூலை 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பிளிப்கார்ட்டில் நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டே சேல்ஸ் விற்பனையில் டிஸோ தயாரிப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..

கூடுதல் சலுகைகளுக்கும் இந்த விற்பனையில் வாய்ப்புள்ளது

கூடுதல் சலுகைகளுக்கும் இந்த விற்பனையில் வாய்ப்புள்ளது

இத்துடன் கூடுதல் சலுகைகளுக்கும் இந்த விற்பனையின் போது வாய்ப்புள்ளது. ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை கொண்டு டிஸோ சாதனங்களை வாங்கும் நுகர்வோருக்குக் கூடுதலாக, 10 சதவீத உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு, இந்த சிறப்புச் சலுகை ஜூலை 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

DIZO GoPods D மற்றும் டிஸோ வயர்லெஸ் வண்ணங்கள்

DIZO GoPods D மற்றும் டிஸோ வயர்லெஸ் வண்ணங்கள்

DIZO GoPods D கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. இதற்கிடையில், டிஸோ வயர்லெஸ் ஆரஞ்சு, கருப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகிய நான்கு நவநாகரீக வண்ணங்களில் வருகிறது. DIZO GoPods D ஆனது 20 மணிநேர மியூசிக் பிளேபேக், 110 எம்எஸ் சூப்பர்-லோ லேட்டன்சி கேம் மோடு, சரவுண்ட் நாய்ஸ் ரிடக்ஷன், ரியல்மி லிங்க் ஆப், இன்டலிஜெண்ட் டச் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

சந்திரன் சந்திரன் "தள்ளாட்டம்".. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா? நாசா திடுக்கிடும் தகவல்.!

டிஸோ வயர்லெஸ் சிறப்பம்சம்

டிஸோ வயர்லெஸ் சிறப்பம்சம்

டிஸோ வயர்லெஸ் ஒரு நெகிழ்வான மற்றும் இலகுரக நெக் பேண்ட் வடிவமைப்பில் வருகிறது. பாஸ் பூஸ்ட் + அல்காரிதம் கொண்ட 11.2 மிமீ டிரைவர் கொண்டு இது இயங்குகிறது. இது 17 மணிநேர இடைவிடாத பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இது 88 எம்எஸ் சூப்பர்-லோ லேட்டன்சியுடன் கூடிய கேம் மோடு, சரவுண்ட் நாய்ஸ் ரிடக்ஷன், ரியல்மி லிங்க் ஆப் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

பேட்டரி ஆயுள் எத்தனை நாட்களுக்கு வரும்?

பேட்டரி ஆயுள் எத்தனை நாட்களுக்கு வரும்?

ஒவ்வொரு இயர்பட்ஸ்களும் 40 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கிறது. இதன் சார்ஜிங் கேஸ்கள் 400 எம்ஏஎச் திறன் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சார்ஜிங் செய்ய அனுமதிப்பதோடு 20 மணிநேர இசை பின்னணி ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, புளூடூத் 5.0 இணக்கத்துடன், நீண்ட பரிமாற்ற தூரம் மற்றும் குறைந்த மின் நுகர்வு ஆகியவற்றை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
DIZO GoPods D and DIZO Wireless Products Are Available On Flipkart For Pre Booking By Paying Just Rs 1 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X