Home
News

சரவெடியாக சியோமி அறிவித்த தள்ளுபடி.. தீபாவளி சேல்ஸ் பற்றி வெளியான லீக்.. போன், டிவி அவசரப்பட்டு வாங்காதீங்க..

இந்த வருட தீபாவளி பண்டிகை வேற லெவெலில் இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தீபாவளிக்கு முன்பாகவே சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடி பற்றிய விபரங்கள் இணையம் முழுக்க ஒலிக்க துவங்கியுள்ளது. சியோமி நிறுவனமும் கூட புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வருட பண்டிகை காலம் சரவெடியாக இருக்க போகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் சியோமி (Xiaomi) தனது தீபாவளியுடன் எம்ஐ சேல் 2023 (Mi Sale 2023) ஆன்லைனில் அறிவித்துள்ளது. நிறுவனம் இப்போது உற்சாகமூட்டும் சலுகைகள் மற்றும் தள்ளுபடியை பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. சியோமியின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் பிற சாதனங்களின் மீது கிடைக்கும் விபரங்களை அறிவித்துள்ளது.

சரவெடியாக சியோமி அறிவித்த தள்ளுபடி.. தீபாவளி சேல்ஸ் பற்றி வெளியான லீக்

சியோமி வழங்கவிருக்கும் கூப்பன் தள்ளுபடி பற்றிய விபரங்களும் வெளியாகியுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 ஆகியவற்றில் விற்பனை திட்டமிடப்படலாம் , இவை இரண்டும் அக்டோபர் முதல் பாதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கான தேதிகளை Xiaomi இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ரெட்மி நோட் 13 (Redmi Note 13) தொடர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரெட்மி பேட் எஸ்இ (Redmi Pad SE) போன்ற டேப்லெட்டுகள் தீபாவளி வித் Mi 2023 விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் பக்கத்தில் பகிரப்பட்ட டீஸர், வரவிருக்கும் விற்பனையில் 5G-தயாரான ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆர்வமுள்ள வாங்குவோர் கேம் லவுஞ்ச் மூலம் ரிவார்டுகளைப் பெறுவதோடு, ஒவ்வொரு நாளும் புதிய கிப்ட்களையும் திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தீபாவளி வித் மி விற்பனையில் பங்குபெற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பகிர்ந்துகொள்வதற்கும் அழைப்பதற்கும் வாங்குபவர்களுக்கு நிறுவனம் இலவசங்களை வழங்கும்.

வரவிருக்கும் திருவிழாவில் எந்தெந்த தயாரிப்புகள் விற்பனைக்கு வரும் என்பதை நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13) பட்டியலிடலாம். இதில் ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro+) போன்ற மாடல்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் (Smartphone) பட்டியலில் உள்ள அடிப்படை மொபைல் (Mobile) மாடலான ரெட்மி ஏ2 பிளஸ் (Redmi A2+), ரெட்மி கே60 (Redmi K60) போன்ற ஸ்மார்ட்போன்கள் உடன் சியோமி கே60 அல்ட்ரா (Redmi K60 Ultra), ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G), ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G), போன்ற ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்துடன், சியோமி நிறுவனத்தின் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீதும் இந்த சிறப்பு பண்டிகைக்கால தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில Mi தயாரிப்புகளும் சிறப்பு தள்ளுபடியுடன் தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமியின் ஸ்மார்ட்ஃபோன்கள் முதல், நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை எல்லாவற்றின் மீதும் சிறப்பு தள்ளுபடி கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி (Smart tv) மற்றும் டிவி ஸ்டிக்குகள் வரை, Xiaomi இந்த ஆண்டு தீபாவளி வித் மி பதிப்பில் பெரும்பாலான கேஜெட்டுகளுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் தள்ளுபடிகள் மற்றும் டீல்கள் பற்றி மேலும் அறிய எங்களுடன் தொடர்பில் இருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Diwali With Mi 2023 Details Leaked Online With Discount and Offer Details Before October
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X