ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.?

தங்கள் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக தரவுத் தொகுப்புகள் மற்றும் இலவசங்கள் உட்பட பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

|

ஆங்காங்கே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் என தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இந்நிலைப்பாட்டில் இந்திய தொலைதொர்டர்பு துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான தீபாவளி சலுகைகளையே அறிவித்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.?

அப்படியாக பார்தி ஏர்டெல், ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக தரவுத் தொகுப்புகள் மற்றும் இலவசங்கள் உட்பட பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

என்னென்ன திட்டங்கள்.?

என்னென்ன திட்டங்கள்.?

இந்த தசரா மற்றும் தீபாவளி பருவத்தில், சந்தையின் முக்கிய போட்டியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து பிரிவுகளிலும் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து கொள்ள அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் என்னென்ன.?

60ஜிபி அளவிலான இலவச டேட்டா

60ஜிபி அளவிலான இலவச டேட்டா

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டமொன்றின் கீழ் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுகள் ஆறு மாத காலம் செல்லுப்படியாகும் 60ஜிபி அளவிலான இலவச தரவை அனுபவிக்கலாம்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

முதலில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஏர்டெல் டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அதை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும். அதை நிகழ்த்துவத்தின் மூலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலவச தரவு உங்கள் அக்கவுண்டில் இணைக்கப்படும்; மாதம் 10ஜிபி என்ற அளவில் ஆறு மாதங்களுக்கு மொத்தம் 60ஜிபி டேட்டாவை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

இலவச தரவிற்கான பேனர்

இலவச தரவிற்கான பேனர்

ஸ்மார்ட்போனில் மைஏர்டெல் பயன்பாடு இல்லாதவர்கள் கூகுள் பிளே சென்று பயன்பாட்டைப் பதிவிறக்கவும்; பின்னர் பயன்பாட்டில் காட்சிப்படும் இலவச தரவிற்கான பேனர் விளம்பரத்தை திறக்கவும். பின்னர் 60ஜிபி இலவச தரவைப் பெறுவதற்கான கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். ஏர்டெல் டிவி பயன்பாட்டை தங்கள் ஸ்மார்ட்போனில் வெற்றிகரமாக பதிவிறக்கி நிறுவியவர்கள் 24 மணி நேரத்திற்குள் இலவச தரவைப் பெறுவார்கள்.

30 ஜிபி இலவச டேட்டா

30 ஜிபி இலவச டேட்டா

இதே போன்று 30 ஜிபி இலவச டேட்டா திட்டமொன்றும் ஏர்டெல் மூலம் வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அதே வழிமுறைகளை பின்பற்றி போஸ்ட்பெயிட் பயனர்கள் மாதம் 10ஜிபி என்ற அளவில் 3 மாதங்களுக்கு மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.

வோடபோன்

வோடபோன்

மறுபக்கம் வோடபோன் நிறுவனம், குஜராத்தில் நவராத்திரி காலத்தில் நிறுவனத்தின் ஒன்பது டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகள், உணவு சீட்டுகளை வழங்கி வருகிறது. நிறுவனத்தின் பயன்பாட்டை மொபைல் வேலட் மூலம் பதிவிறக்கம் செய்தாலோ அல்லது இன்போடைன்மென்ட் தளங்களை அணுகி ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தினாலோ அல்லது நவராத்திரி காலத்தில் வோடபோன் சூப்பர்நெட் 4ஜி சேவைக்கு மாறினாலோ இந்த வாய்ப்பை பெறமுடியும்.

ஜியோ

ஜியோ

ஐடியா நிறுவனம் அதன் இன்போடைன்மென்ட் ஆப்ஸ்கள் வழியாக சலுகைகளை வழங்க, அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோவைஃபை ரவுட்டருக்கு (செப்டம்பர் 20 - 30 வரை) 50% அளவிலான தள்ளுபடியை வழங்கி வருகிறது.

ஏர்டெல்

ஏர்டெல்

மற்றொரு ஏர்டெல் சலுகையில் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் தினமும் 4ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டமொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.999/- மதிப்புள்ள இந்த திட்டத்தை அணுகப்பெறும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளுடம் சேர்த்து நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான 3ஜி/4 ஜி தரவு கிடைக்கும்.

மொத்தம் 112 ஜிபி தரவு

மொத்தம் 112 ஜிபி தரவு

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் சார்ந்த விவரத்தை டெலிகாம் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதம் மொத்தம் 112 ஜிபி தரவு தரும் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தை அறிமுகம் செய்ததின் மூலம் ஏர்டெல் நிறுவனம், 90 நாட்களுக்கு 90ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் ஜியோவின் ரூ.999/- எளிமையாக எதிர்கொள்கிறது என்பது வெளிப்படை.

மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் மற்ற திட்டங்களான, ரூ.349, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.799/- ஆகியவைகளும் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி வரையிலான 3 ஜிபி தரவுவாய் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 6ஜிபி தரவுடன் வரம்பற்ற உள்ளூர் பிளஸ் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்கும் மற்றொரு திட்டமும் உள்ளது. அந்த திட்டம் ரூ.899/- என்ற விலைக்கு வழங்கப்படுகிறது.

3.5 ஜிபி கூடுதல் டேட்டா

3.5 ஜிபி கூடுதல் டேட்டா

மேலும், 4ஜி கைபேசிகளுக்கும், 4ஜி சிம் பயனர்களுக்கு, 27 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 3.5 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவைவும் நிறுவனம் வழங்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Diwali offers from Jio, Airtel, Vodafone, Idea: Check out top deals, discounts to grab this festive season. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X