தவிர்க்க முடியாத தீபாவளி ஆஃபர்.. iPhone, OnePlus முதல் Oppo, Vivo வரை.. விலை குறைக்கப்பட்ட போன்களின் பட்டியல்!
சலுகை அல்லது தள்ளுபடி விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க தீபாவளி பண்டிகை காலத்தை விட ஒரு சிறப்பான தருணம் கிடைக்காது. தீபாவளி சிறப்பு சலுகைகளின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மலிவான விலைக்கு வாங்க கிடைக்கின்றன.
அப்படியாக ஆப்பிள் ஐபோன் (Apple iPhone), சாம்சங் (Samsung), ரியல்மி (Realme), விவோ (vivo), ஒப்போ (Oppo), ஒன்பிளஸ் (OnePlus), ஷாவ்மீ (Xiaomi), ரெட்மி (Redmi) போன்ற நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்கள் மீது அறிவித்துள்ள 2023 தீபாவளி சிறப்பு சலுகைகள் (Diwali Mobile Offer 2023) பற்றிய விவரங்கள் இதோ:

ஆப்பிள்: ஐபோன் 15 சீரிஸை வாங்கும் எச்டிஎச்பி பேங்க் பயனர்களுக்கு உடனடி கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மீது ரூ.6000 தள்ளுபடியும், ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மீது ரூ.5,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
இதேபோல ஐபோன் 13 (iPhone 13) மீது ரூ.3,000 தள்ளுபடியம், ஐபோன் எஸ்இ (iPhone SE) மீது ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் புதிய ஐபோன்களை வாங்க பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில் ரூ.67,800 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூவும் (Exchange Value) கிடைக்கும்.

சாம்சங்: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Galaxy S23 FE) மாடலானது 25% தள்ளுபடியுடன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் கேலக்ஸி எஸ்23 மாடலானது ரூ.61,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல கேலக்ஸி எப்23, கேலக்ஸி எம்13 மற்றும் கேலக்ஸி எம்04 மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ்: நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) மாடலின் மீது ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) மீது ரூ.2000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கிறது.ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) மற்றும் அதன் சோலார் ரெட் ஸ்பெஷல் எடிஷன் மீது ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது.

விவோ: எக்ஸ்90 சீரீஸில் ரூ.10,000 வரையும், வி29 சீரீஸில் ரூ.4,000 வரையும் கேஷ்பேக் கிடைக்கும். பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாற்றம் செய்தால் ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். விவோ ஒய்200 5ஜி மீது ரூ.2,500 வரை கேஷ்பேக்கும், விவோ ஒய்56 மற்றும் ஒய்27 மீது ரூ.1,000 வரை கேஷ்பேக்கும் கிடைக்கிறது.
ஒப்போ: ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போன் ரூ.94,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.12,000 வரையிலான கேஷ்பேக்கை பெறலாம். கூடவே ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.
இதேபோல ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Oppo Reno 10 Pro+ 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் (Oppo Reno10 Pro) ஆனது ரூ.39,999 க்கும், கடைசியாக ஒப்போ ரெனோ 10 (Oppo Reno10) மாடலானது ரூ.32,999 க்கும் மற்றும் ஒப்போ ஏ79 5ஜி (Oppo A79 5G) ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
ரியல்மி: ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரீஸ் மற்றும் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) சீரீஸ் ஆகிய இரண்டின் மீதுமே ரூ.4,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரியல்மி சி53 (Realme C53) மாடலானது ரூ.9,999 க்கும், ரியல்மி சி55 (Realme C55) மற்றும் ரியல்மி சி51 (Realme C51) ஆகியவைகள் முறையே ரூ.8,999 மற்றும் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஷாவ்மீ மற்றும் ரெட்மி: ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G) ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். இதேபோல ரெட்மி ஏ2 (Redmi A2) மாடலல் ரூ.5,299 க்கு கிடைக்கிறது. ஷாவ்மீ 13 ப்ரோ (Xiaomi 13 Pro ரூ.69,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மீது ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








