தீபாவளிக்கு புது போன் வாங்க பெரிய பட்ஜெட் தேவையில்ல.. 4G போனுக்கு ரூ.8,499.. 5G போனுக்கு ரூ.11,999 போதும்!
கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவதற்கு மட்டுமின்றி, பரிசுகளை கொடுப்பதற்கும், அன்பை பகிர்வதற்கும், தீபாவளி பண்டிகை காலத்தை விட ஒரு சிறப்பான தருணம் இருக்காது என்றும் கூறலாம்.
இந்த தீபாவளிக்கு, உங்கள் அம்மாவிற்கோ அல்லது அப்பாவிற்கோ அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ.. பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை பரிசளிக்கலாம் என்கிற திட்டம் (Diwali Gift Ideas) உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களை (Best Phones Under Rs.12,000) தான், உங்களுக்காக இங்கே பட்டியலிட்டு உள்ளோம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கீழ்வரும் 5 மாடல்களில் இரண்டு மடல்களில் 5ஜி-க்கான ஆதரவு (5G Support) உள்ளது.
1. மோட்டோரோலா மோட்டோ ஜி14 (Motorola Moto G14): ரூ.10000 பட்ஜெட்டில் இதுவொரு அருமையான தேர்வாக இருக்கும். இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ், ஒரு பெரிய 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W பாஸ்ட் சார்ஜிங், யுனிசாக் டி616 சிப்செட், 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

மோட்டோரோலா மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் நான்கு ஸ்டைலான கலர் ஆப்ஷன்களில் (ஸ்டீல் கிரே, பேல் லிலாக், ஸ்கை ப்ளூ மற்றும் பட்டர்கிரீம்) விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): இந்த போன் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 33வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜர் (33W SUPERVOOC charger) உடன் வருகிறது என்று கூறினால், பலரும் நம்ப மாட்டார்கள். மேலும் இது 6.74-இன்ச் கேமிங் டிஸ்பிளே, 50எம்பி ஏஐ கேமரா செட்டப், 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களையும் வழங்குகிறது.

ரியல்மி நார்சோ என்53 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு நேர்த்தியான கலர் ஆப்ஷன்களில் (ஃபெதர் பிளாக் மற்றும் ஃபெதர் கோல்ட்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் (Amazon Great Indian Festival Sale) கீழ், தற்போது ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): இந்த பட்டியலில் உள்ள முதல் 5ஜி ஸ்மார்ட்போனான இது அமேசானில் தற்போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி, 6.79-இன்ச் FHD+ டிஸ்பிளே, IP53 ரேட்டிங், 8MP செல்பீ கேமரா, 50எம்பி மெயின் ரியர் கேமரா போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
4. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): இந்த பட்டியலில் இல்ல இரண்டாவது 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட், அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.12,039 என்கிற சலுகை விலையின்கீழ் வாங்க கிடைக்கிறது.
மேலும் இது 6.6-இன்ச் FHD+ கொரில்லா கிளாஸ் 5 டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங், 5என்எம் எக்ஸினோஸ் 1330 ப்ராசஸர், 50எம்பி மெயின் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இது பெர்ரி ப்ளூ, ஸ்மோக்கி டீல் மற்றும் ஐசி சில்வர் என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
5. ரெட்மி 10 (Redmi 10): ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.7-இன்ச் டிஸ்பிளே, 50MP மெயின் கேமரா, 5MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








