Home
News

இது வேற லெவல் தீபாவளி ஆஃபரா இருக்கே.. Nothing Phone 2 மற்றும் CMF பட்ஸ், வாட்ச் மீது அபார தள்ளுபடி!

நீங்கள் நத்திங் பிராண்டின் (Nothing Brand) லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனையோ அல்லது டி டபுள்யூஎஸ் இயர்பட்ஸையோ அல்லது நத்திங்கின் துணை நிறுவனமான சிஎம்எஃப் பிராண்டின் (CMF Brand) ஸ்மார்ட் வாட்ச்யோ அல்லது இயர்பட்ஸையோ வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம்!

ஏனென்றால் நத்திங் போன் 2, நத்திங் இயர் 2, சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ, சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ போன்ற தயாரிப்புகள் மீது சில அற்புதமான தீபாவளி பண்டிகை கால சலுகைகள் (Diwali Offers) அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன தயாரிப்புகள் என்னென்ன சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

Nothing Phone 2 மற்றும் CMF பட்ஸ், வாட்ச் மீது அபார தள்ளுபடி!

நத்திங் போன் 2 (Nothing Phone 2) மீதான தள்ளுபடி: பிளிப்கார்ட் வலைத்தளத்தில், தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2-வின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டரோஜூடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ரூ.37,999 க்கும், 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ 38,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.70-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப் டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட், 32எம்பி செல்பீ கேமரா, 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8ஜிபி / 12ஜிபி ரேம், 128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4700எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

Nothing Phone 2 மற்றும் CMF பட்ஸ், வாட்ச் மீது அபார தள்ளுபடி!

நத்திங் இயர் 2 (Nothing Ear 2) மீதான தள்ளுபடி: நத்திங் இயர் 2 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் ஆனது பிளிப்கார்ட் மற்றும் மின்த்ரா (Myntra) மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ.6,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது மொத்தம் 36 மணிநேர மியூசிக் பிளேபேக்கை நேரத்தை (Music playback time)வழங்கும். மேலும் இது 11.6 மிமீ கஸ்டம் ட்ரைவர் ஆனது ஆழமான பாஸ் (Deep Bass) மற்றும் கிரிஸ்டல்-கிளியர் ஆடியோவை (Crystal-clear Audio) வழங்கும்.

Nothing Phone 2 மற்றும் CMF பட்ஸ், வாட்ச் மீது அபார தள்ளுபடி!

சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ (CMF Buds Pro) மீதான தள்ளுபடி: சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோவின் அசல் விலை ரூ.3,499 ஆகும். இருப்பினும் இது பிளிப்கார்ட் மற்றும் மின்த்ரா வழியாக ரூ.2,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சிஎம்எஃப் நிறுவனத்தின் கூற்றுப்படி, சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஆனது மொத்தம் 11 மணிநேர மியூசிக் பிளேபேக் நேரத்தை (11Hrs Music Playback Time) வழங்குகிறது மற்றும் இது சக்திவாய்ந்த பாஸ் பூஸ்ட் ட்ரைவர் (Powerful bass boost driver) உடன் வருகிறது.

Nothing Phone 2 மற்றும் CMF பட்ஸ், வாட்ச் மீது அபார தள்ளுபடி!

சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ (CMF Watch Pro) மீதான தள்ளுபடி: இது பிளிப்கார்ட் மற்றும் மின்த்ரா வழியாக ரூ.4,499 க்கு வாங்க கிடைக்கிறது. 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ ஸ்மார்ட் வாட்ச் ஆனது விரிவான ஹெல்த் டிராக்கிங்கை வழங்குகிறது, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க 110 ஸ்போர்ட்ஸ் மோட்களின் வரம்பையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 13 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப், 1.96-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே (AMOLED Display), பில்ட்-இன் ஜிபிஎஸ் (Built-in Display) மற்றும் ஏஐ-எனேபிள்டு கால் (AI-enabled call) போன்ற முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Diwali 2023 Festive Sale Offer Discount on Nothing Phone 2 Ear 2 CMF Buds Pro and Watch Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X