Home
News

மார்ச் 30 தான் கடைசி நாள்.. டிஸ்னி+ Hotstar இல் இருந்து வெளியேறும் முக்கிய சேனல்.. ரசிகர்கள் வருத்தம்!

இந்தியாவின் 3 முக்கியமான ஓடிடி (OTT) தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சேவையிலிருந்து முக்கிய சேனல் ஒன்று வெளியேறுகிறது. அந்த சேனலின் கீழ் அணுக கிடைக்கும் எல்லா வகையான கன்டென்ட்களுமே வருகிற மார்ச் 30-க்கு பின்னர் அணுக கிடைக்காது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது!

பிரபல அமெரிக்க டெலிவிஷன் நெட்வொர்க் (American Television Network) ஆன எச்பிஓ (HBO) தான் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை விட்டு வெளியேறுகிறது. ஏற்கனவே 2023 ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை இழந்துள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு எச்பிஓ சேனலின் வெளியேற்றம் மேலுமொரு பெரிய அடியாகும்!

டிஸ்னி+ Hotstar இல் இருந்து வெளியேறும் முக்கிய சேனல்!

தி லாஸ்ட் ஆஃப் அஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான தகவலின்படி, மார்ச் 31 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கு எச்பிஓ (HBO) சேனலின் எந்த கன்டென்ட்டும் அணுக கிடைக்காது. அதாவது தி லாஸ்ட் ஆஃப் அஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் போன்ற சில முக்கிய எச்பிஓ டைட்டில்ஸ் இனி ஹாட்ஸ்டாரில் கிடைக்காது.

மற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கலாம்!

ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்த ஹாட்ஸ்டார் நிறுவனம், மார்ச் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் எச்பிஓ கன்டென்ட் அணுக கிடைக்காது. மாறாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் பரந்த லைப்ரரியின் கீழ், 10 மொழிகளில் அணுக கிடைக்கும், 100000 மணிநேர டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகள் போன்றவைகளை தொடர்ந்து பார்த்து மகிழுங்கள்" என்று கூறியுள்ளது.

அதிருப்தியில் ஐபில் மற்றும் எச்பிஓ ரசிகர்கள்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் இந்த திடீர் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக எச்பிஓ ரசிகர்கள் ட்வீட் செய்த வண்ணம் உள்ளனர். மேலும் முன்னரே குறிப்பிட்டபடி, 2023 ஐபிஎல் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வதற்கான உரிமையையும் ஹாட்ஸ்டார் இழந்துள்ளது; தற்போது எச்பிஓ-வும் வெளியேறுகிறது. இதெல்லாம் வைத்து பார்க்கும் போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனமானது சரிவை நோக்கி செல்வது போல் தெரிகிறது.

காணமால் போன ஹாட்ஸ்டாரின் 2 தூண்கள்!

இந்தியாவில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் பிரீமியம் சந்தா தற்போது ரூ.1499 க்கு கிடைக்கிறது. பெரும்பாலான பயனர்கள் இந்த சந்தாவை வாங்குவதற்கு முக்கிய காரணமே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும், எச்பிஓ கன்டென்ட்டும் தான். ஆனால் அந்த இரண்டுமே இனி கிடைக்காது என்கிற சூழலில் ஹாட்ஸ்டார் சந்தாதார்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலவச ஹாட்ஸ்டார் சந்தாவும் கூட கிடைப்பதில்லை!

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய 2 முக்கிய இந்திய டெலிகாம் ஆப்ரேட்டர்களுமே தங்களுடைய பெரும்பாலான ப்ரீபெய்ட திட்டங்களின் வழியாக இலவசமாக அணுக கிடைத்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையை நீக்கி உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மார்வெல் ரசிகர்கள் மட்டுமே முட்டு கொடுக்க போகிறார்கள்!

இனிமேல் மார்வெல் (Marvel) கன்டென்ட்டுகளுக்கான உரிமைகள் மற்றும் தீவிரமான மார்வெல் ரசிகர்களால் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை காப்பற்ற முடியும். இல்லையேல் வேறு வழியே இல்லை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சாந்தாவின் விலை குறைக்கப்பட வேண்டும். இந்த இரண்டில் எதில் ஓட்டை விழுந்தாலும், எது நடக்கவில்லை என்றாலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நிலை கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Disney Plus Hotstar To Stop Showing HBO Content From March 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X