ஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு!

|

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.499, ரூ.899, மற்றும் ரூ.1,499 ஆக இருக்கிறது. இதன் முதல் திட்டம் மொபைல் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. பயனர்களின் ரூ.499 திட்டம் மொபைல் அணுகலை மட்டுமே ஆதரிக்கிறது. இந்த திட்டமானது அடிப்படை ஹாட்ஸ்டார் திட்டமான ரூ.399 என்பதைவிட ரூ.100 அதிகமாகும்.

ஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு!

டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இரண்டாவது திட்டத்தின் விலை ரூ.899 ஆக இருக்கிறது. இது வருடாந்திர திட்டமாகும். பயனர்கள் எச்டி வீடியோ தரத்துடன் இரண்டு சாதனங்களுக்கான அணுகலை பெறுவார்கள். மூன்றாவது பேக் திட்டமானது ப்ரீமியம் திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1,499 ஆக இருக்கிறது.

வருடத்திற்கு 899, பயனர்கள் எச்டி வீடியோ தரத்துடன் இரண்டு சாதனங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். மூன்றாவது பேக் பிரீமியம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது, இதன் விலை ரூ. ஆண்டுக்கு 1,499 மற்றும் பயனர்களுக்கு 4 கே வீடியோ தரம் மற்றும் நான்கு சாதனங்களை வழங்கும்.

டிவி, மல்டிப்ளெக்ஸ் மற்றும் புதிய இந்திய திரைப்படங்கள், டிஸ்னி ப்ளஸ் திரைப்படங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் கிட்ஸ் உள்ளடக்கம் என பல்வேறு அணுகல்களை கொண்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் தளத்தின் விளம்பரமில்லாத சிறப்பு பொழுதுபோக்கு மற்றும் இரண்டு திரைகள் இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். இந்த படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டன.

ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை.

ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வெளியீடுகளை செய்து வருகிறது. இந்த களத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம்தான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் என்ற புதிய பிராண்ட் அறிவிக்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் இன் உள்ளடக்கங்கள் அனைத்தும் ஹாட்ஸ்டாருடன் இணைந்து வெளியிடப்பட்டது. ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு அணுகல்கள் காரணமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Disney Plus Hotstar Launched three New Plans: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X