இந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்த Disney நிறுவனம்.. என்னவெல்லாம் வாங்கலாம்?

|

டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த தயாரிப்புகளான டிஸ்னி பொம்மைகள், ஆக்ஷன் பிகர்கள் மற்றும் பிற பிரத்தியேக தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் திரைப்படங்கள், கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் பிற தயாரிப்புகளை இனி இந்திய ரசிகர்கள் ShopDisney.in மூலம் பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்த Disney நிறுவனம்..

ShopDisney.in வலைத்தளம் மூலம் டிஸ்னி ரசிகர்கள் அவர்களுக்கு தேவையான தயாரிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துகொள்ளலாம். டிஸ்னியின் மிக்கி மவுசு முதல் துவங்கி, மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர்மேன் மற்றும் டெட்பூல் வரை அனைத்து விதமான கதாபாத்திர தயாரிப்புகளும் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியச் சந்தையிலேயே வாங்கக் கிடைக்கும் என்று டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்த Disney நிறுவனம்..

டாய்ஸ், டிஸ்னி டிசைனர் துணிகள், ஆக்சஸரீஸ், ஸ்கூல் கிட்ஸ் போன்று சுமார் 3000க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இந்த இந்திய வலைத்தளம் மூலம் இப்பொழுது வாங்குவதற்குக் கிடைக்கிறது. டிஸ்னியின் இந்திய வலைத்தளம் மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு உங்களுக்கு விருப்பமான பேக்கிங் கவர்களை தேர்வு செய்யும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.999 விலைக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ஷிப்பிங் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்த Disney நிறுவனம்..

ஐயன் மேன் ரசிகர்களுக்காக ஐயன் மேன் ஹெல்மெட் வடிவ வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வெறும் ரூ.2,499 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல், அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வரும் தானோசின் இன்பினிட்டி கௌன்லெட் (infinity gauntlet) வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. பேபி யோட பொம்மை மட்டும் இந்தியாவில் இப்போதைக்குக் கிடைக்காது என்று நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் விரைவில் இதை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Disney launches ShopDisney in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X